health benefits lifestyles

இந்த பிரச்சனைக்கு ஊட்டச்சத்து குறைபாடு தான் காரணம்..

உங்கள் மனநிலை உங்களது கட்டுப்பாட்டில் இல்லையா? அப்படி என்றால் நீங்கள் எடுத்து வரக்கூடிய மோசமான உணவு அதற்கு பின்னணியில் இருக்கக்கூடிய காரணமாக இருக்கலாம். மனநிலையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் நமது அன்றாட வேலைகளில் தலையிட கூடும். இதனால் நமது நிம்மதி பாதிக்கப்படும். மனநிலை மாற்றங்கள் மற்றும் ஒரு வித எரிச்சல் உணர்வோடு சம்பந்தப்பட்ட ஐந்து ஊட்டச்சத்து குறைபாடுகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.




இதன் மூலமாக நீங்கள் உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்னையை கண்டறிந்து, அதற்கேற்ற உணவுகளை பின்பற்றலாம்.

வைட்டமின் D குறைபாடு : ஹார்மோன் வடிவில் இருக்கக்கூடிய ஒரே வகையிலான வைட்டமின் இந்த வைட்டமின் D ஊட்டச்சத்து. அதன் காரணமாக வைட்டமின் D போதுமான அளவு இல்லாத போது நமக்கு மனநிலை சம்பந்தப்பட்ட கோளாறுகள் உண்டாகின்றன. போதுமான அளவு வைட்டமின் D பெறுவதற்கு அதிகாலை நேரத்தில் கிடைக்கக்கூடிய சூரிய வெளிச்சத்தில் நேரத்தை செலவிடுவது உதவும்.




இரும்புச்சத்து குறைபாடு அல்லது ரத்தசோகை : ரத்தத்தில் ஆக்சிஜனை கொண்டு செல்வதில் இரும்புச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் குறைபாடு இரத்த சோகையை ஏற்படுத்தும். அடிக்கடி சோர்வு, எரிச்சல் மற்றும் மனநிலை மாற்றங்கள் போன்றவை ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய நபர்கள் அனுபவிக்க கூடிய ஒரு சில அறிகுறிகள். மூளைக்கு குறைவான அளவு ஆக்ஸிஜன் கிடைப்பதன் காரணமாக இது நிகழ்கிறது. உலர் திராட்சை, ஆட்டு ஈரல், பேரிச்சம் பழம், சுவரொட்டி போன்றவற்றில் இரும்பு சத்து நிறைந்துள்ளதால் இவற்றை அன்றாடம் சாப்பிட்டு வர ரத்த சோகை பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.

மெக்னீசியம் குறைபாடு : நமது உடலில் பல்வேறு விதமான செயல்பாடுகள் நடைபெறுவதற்கு மெக்னீசியம் அவசியம், குறிப்பாக நரம்பு சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் இந்த ஊட்டச்சத்து முக்கிய பங்கினை கொண்டுள்ளது. ஆகவே குறைந்த மெக்னீசியம் அளவுகள் இருப்பது பதட்டம், மனச்சோர்வு மற்றும் சோக உணர்வை ஏற்படுத்தும்.




வைட்டமின் B குறைபாடு : வைட்டமின் B6, B12 மற்றும் ஃபோலிட் போன்ற B வைட்டமின்கள் நரம்பு அமைப்பின் சரியான செயல்பாட்டிற்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள். போதுமான அளவு வைட்டமின் B சத்து கிடைக்காதது செரோட்டோனின் மற்றும் டோபமைன் என்ற மனநிலையை மேம்படுத்த உதவக்கூடிய ஹார்மோன்களின் உற்பத்தியை பாதிக்கிறது. இது மனநிலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் குறைபாடு : ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குறிப்பாக EPA மற்றும் DHA ஆகிய இரண்டும் மனச்சோர்வு போன்ற மனநிலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளை தவிர்ப்பதற்கு அவசியமானவை. மீன் எண்ணெய், ஆளி விதைகள் மற்றும் வால்நட் போன்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை அன்றாடம் சாப்பிட்டு வருவதன் மூலமாக நமது மனநிலையை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளலாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!