Cinema Entertainment

இந்த ஜென்மத்துல விஷாலுக்கு கல்யாணமே ஆகாது.. பயில்வான் ரெங்கநாதன்

 சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் வாயை திறந்தாலே ஒவ்வொருவரையும் பற்றி கழுவி கழுவி ஊத்தும் அளவிற்கு பல அந்தரங்க விஷயங்களை புட்டு புட்டு வைத்து விடுவார். அந்த வகையில் நடிகர் சங்கத் தலைவர் மற்றும் நடிகருமான விஷாலை பற்றி பயில்வான் விமர்சித்திருக்கிறார்.




சில நொடிகளில் நான் உயிர் பிழைத்தேன்” - நடிகர் விஷால் பகிர்வு | Vishal and escape a severe accident on the sets of Mark Antony - hindutamil.in

அதாவது ராதாரவி மற்றும் சரத்குமார் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருக்கும் பொழுது லோன் போட்டு நடிகர் சங்கத்தின் கட்டிடத்தை கட்டி முடிக்கலாம் என்று சொல்லி பிள்ளையார் சுழி போட ஆரம்பித்தார். ஆனால் இது மிகப்பெரிய தவறு என்று விஷால் எதிர்ப்பு கருத்தை கொடுத்து சரத்குமாருக்கு எதிராக தேர்தலில் நின்னு வெற்றி பெற்றார்.

அதன் பின் பில்டிங் கட்டும் முயற்சியில் இறங்கிய விஷால் மற்றும் நாசர் அடிக்கல்நாட்டி வேலையை ஆரம்பித்தார்கள். ஆனால் அந்த நேரத்தில் கொரோனா வந்ததால் அந்த வேலை பாதியிலே நிறுத்தப்பட்டு விட்டது. அதன் பின் இன்னும் வரை அந்த பில்டிங் கட்டுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தற்போது மறுபடியும் கட்ட வேண்டுமென்றால் ஏற்கனவே கட்டிய பாதி கட்டிடத்தை இடித்த பிறகு தான் கட்ட முடியுமாம்.

அதற்கு காரணம் கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேல் ஆனதால் கட்டிடத்தில் உள்ள இரும்பு கம்பிகள் அனைத்தும் துருப்பிடித்து விட்டது. இதனால் இதை வைத்து தொடர்ச்சியாக கட்ட முடியாத சூழ்நிலை ஆகிவிட்டது. தற்போது மறுபடியும் பில்டிங்கை கட்டி முடிக்க வேண்டும் என்றால் பேங்க் லோன் வாங்கி தான் ஆக வேண்டும் என்று விஷால் கூறி வருகிறார்.




இதைத்தான் அப்பவே சரத்குமார் பேங்க் லோன் வாங்கி கட்டி முடிக்கலாம் என்று கூறினார். ஆனால் அப்பொழுது அது தவறு என்று கூறிவிட்டு இதை ஒரு காரணமாக காட்டி எலக்ஷனில் ஜெயித்த பின்பு மீண்டும் அதே மாதிரி பேங்க் லோன் வாங்க வேண்டும் என்று கூறுகிறார். அது மட்டுமில்லாமல் மேற்கொண்டு இதை எப்படி முடிக்கலாம் என்ற ஒரு பிளானும் இல்லாமல் தான் விஷால் சுற்றிக் கொண்டு வருகிறார்.

அத்துடன் விஜயகாந்த் இறப்பிற்கு முன்னாடி நின்னு நடிகர் சங்கத்தில் பொறுப்பாளராக எந்த ஒரு விஷயத்திலும் பங்கேற்காமல் வீடியோ மூலம் நீலி கண்ணீர் விட்டு நடித்தார். அதே மாதிரி நடிகர் சங்கத்தின் கட்டிடத்தையும் கட்டி முடிக்கவில்லை. இதற்கு இடையில் நடிகர் சங்கத்தை கட்டிய பிறகு தான் என்னுடைய கல்யாணம் என்று கூறிய விஷாலுக்கு இந்த ஜென்மத்தில் கல்யாணமே நடக்க வாய்ப்பில்லை. ஆக மொத்தத்தில் விஷால் எதுக்குமே லாயக்கில்லை என்று பயில்வான் விஷாலுக்கு சாபத்தை கொடுத்து இருக்கிறார்.




 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!