Samayalarai Uncategorized

திருநெல்வேலி ஸ்பெஷல் வெண்டைக்காய் பச்சடி

பொதுவாக வெண்டைக்காயை புளி ஊற்றி பச்சடி செய்வது வழக்கம். புளிக்கு பதிலாக இப்படி தக்காளி சேர்த்தும் வெண்டைக்காய் பச்சடி செய்து அசத்தலாம். சூடான சாதத்துடன் மட்டுமல்லாமல் இட்லி, தோசைக்கு கூட தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும் இந்த தக்காளி வெண்டைக்காய் பச்சடி திருநெல்வேலியில் விசேஷமாக செய்வது உண்டு. இந்த ஸ்பெஷல் வெண்டைக்காய்  பச்சடி நாமும் எப்படி வீட்டிலேயே எளிதாக செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஒரு முறை இப்படி வெண்டைக்காய் பச்சடி செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.

Vendakkai Pachadi | வெண்டைக்காய் பச்சடி I Vendakkai pachadi in Tamil l Chilly Feast - YouTube




தேவையான பொருட்கள்

நல்லெண்ணை- 2 டேபிள் ஸ்பூன்

1 டீஸ்பூன் கடுகு

1 டீஸ்பூன் சீரகம்

கொஞ்சம் கருவேப்பிலை இலை

4 பச்சை மிளகாய்

8 சின்ன வெங்காயம் நறுக்கியது

ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள்

பொடியாக நறுக்கிய கால் கிலோ வெண்டைக்காய்

உப்பு தேவையான அளவு

4 தக்காளி நறுக்கியது

நெல்லிகாய் அளவு புளி

1 துண்டு வெல்லம்




செய்முறை விளக்கம் :

  • நல்லெண்ணை சேர்த்து, கடுகு போடவும். தொடர்ந்து சீரகம் சேர்க்கவும்.

  • தொடர்ந்து பச்சை மிளகாய் சேர்த்து கிளரவும். சின்ன வெங்காயம் சேர்த்து கிளரவும்.

  • நன்றாக வதங்கியதும். தொடர்ந்து வெண்டைக்காய் சேர்த்து கிளரவும். பாதி வெந்ததும், மஞ்சள் தூள் சேர்க்கவும். உப்பு சேர்த்து கிளரவும். புளித் தண்ணீர் சேர்க்கவும். கடைசியாக வெல்லம் சேர்த்து கிளரவும்.




வீட்டு குறிப்பு

Carrot Halwa Recipe | Gajar Ka Halwa

கேரட் அல்வா கிளறும்போது பால் ஊற்றுவதற்குப் பதிலாக பால்கோவா போட்டுக் கிளறி, ஏதாவது ஒரு எசென்ஸ் சில துளிகள் சேருங்கள்… பிரமாதமான சுவையில் இருக்கும்.

வடை தட்டும்போது உள்ளே ஒரு பனீர் துண்டை வைத்து மாவால் மூடி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்தால், வடை வித்தியாசமான ருசியுடன் இருக்கும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!