Serial Stories கடல் காற்று

கடல் காற்று-7

( 7 )

இரவு உணவு எனக்கு நாலு சப்பாத்தியோடு உருளைக்கிழங்கு குருமா வேண்டும் ” ஓரக்கண்ணால் சோபாவில் அமர்ந்திருந்த யோகேஷ்வரனை பார்த்தபடி சட்டமாய் மேகலையிடம் கூறினாள் சமுத்ரா.

கையிலிருந்த அடுப்பு துணியை அவள் முறுக்க தொடங்கவும் என்னமோ பண்ணிக் கொள் பாவனையில் அவளை விட்டுவிட்டு நடந்த சமுத்ராவை பார்த்து பற்களை கடித்தாள் செல்வமணி.

தனை மறந்து ” ஏன்டி திமிரா உனக்கு ?” என ஆரம்பித்து விட்ட புவனாதேவி யோகேஸ்வரன் தலையை திருப்பவும் தன் தலையை அவசரமாக கழுத்துக்குள் புதைத்து கொள்பவள் போல் குனிந்து கொண்டாள் .

இந்த பெண்களின் சண்டையெல்லாம் இவன் வீட்டில் இல்லாத வரைதான் .அவன் வெளி வாசலில் நுழையும் போதே அதுவரை குருசேத்திரமாக இருந்த வீடு பிருந்தாவனமாகிவிடும் .

ஆனால் அப்படி ஒரு அடக்குமுறை இல்லாவிட்டாலும் இந்த பெண்களெல்லாம் லேசில் அடங்குகிறவர்கள் கிடையாது.

இந்த குப்பங்களை மட்டுமல்ல வீட்டையும் தன் கண்ணசைவிற்கு இவன் பழக்கியிருக்கும் விதம் இவளை ஆச்சரிய படுத்தியது .

அன்று காலை இவனை பற்றி அவ்வளவு தூரம் புலம்பிக் கொண்டிருந்த அமல்ராஜ் இவனை கண்டதும் கை கால்கள் தந்தியடிக்க அந்த ஓட்டம் ஓடினானே. தலை மறையும் வரை எங்கேயும் நின்று அவன் திரும்பி பார்த்த நினைவில்லை.

ஏனோ பரவிய புன்னகையில் இவள் திரும்பிய போது ” எவன் வந்து பேசினாலும் பல்லை இளித்துக் கொண்டு பேசிடுவாயா  ?அவனிடம் கைகளை வேறு நீட்டிக் கொண்டிருக்கிறாய் …” நெருப்பு மழை பொழிந்தான் .

சமுத்ராவின் சுயமரியாதையை அவனது அதிகாரம் தூண்டிவிட ” அட..ஆமாம் உங்களிடமெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறேன் பாருங்கள் .எவ்வளவு பெரிய தப்பு அது ? ” என்றவள் தனது கூற்றை மெய்ப்பிப்பவள் போல் அவனை விட்டு திரும்பி நடந்்தாள் .

ஆனால் இப்போதோ  அந்த வீம்பு உதவாது போலவே .

மெல்ல அவனருகே சென்று நின்றாள் .இந்த நிலை அவளுக்கு சிறிதும் பிடிக்காத்தே .

ஆனால் இப்போது வேறு வழியில்லை ்அவர்கள் பத்திரிக்கை ஆசிரியை ரங்கநாயகி மதியமே போன் போட்டு விட்டார் .எத்தனை பேரை பேட்டி எடுத்திருக்கிறாளென கேட்டு.

அதற்காகவாது இவன் உதவி அவளுக்கு கண்டிப்பாக வேண்டும் .அவள் அருகே வந்து நிற்பதை அறிந்தும் தெரியாத்து போல் பேப்பர் படித்து கொண்டிருந்தான் .

பற்களை கடித்தபடி தொண்டையை செருமி காட்டினாள் சமுத்ரா. பேப்பரில் அடுத்த பக்கத்தை புரட்டிக கொண்டான்.




திமிர்…திமிர் ்..மனதிற்குள் அவனை வைதபடி ” உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் ” என்றாள் .

” பேசலாமே …” என்றவன் பேப்பரை விட்டு பார்வையை எடுக்காமல் கைகளை மட்டும் ஜாடை காட்டினான் அமருமாறு.

பெரிய இவன்… விரல்களை மடக்கி அவன் நடுமண்டையில் நச்சென பலமாக கொட்டும் ஆவலை அடக்கியபடி எதிரே அமர்ந்தாள் .

” பாருங்கள் …” என ஆரம்பித்தாள் .

” நிஜமாகவா …? உன்னையா ?அது சரியாக வருமா ? …” தாடையை தடவியபடி யோசிக்க வேறு ஆரம்பித்தான் .

நிஜமாகவே கொட்ட  உயர்ந்து விட்ட கைகளை அடக்கி மடக்கியபடி ” எனது பத்திரிக்கை பேட்டிக்காக உங்கள் பெண்களின் பேட்டி வேண்டியிருக்கிறது .நீங்கள் கொஞ்சம் அவர்களிடம் சொல்ல வேண்டும் “

” வேறெதுவும் புதுவித யோசனை இருக்கிறதா ? “

என்ன யோசனை ? இவன் எதைக் கேட்கிறான் ? அந்த மீனவ பெண்களை பற்றியா ? அல்லது லாவண்யாவை பற்றியா ? எப்போதும் நேர டியாக பேசித் தொலைய மாட்டானா ? பற்களை கடித்தபடி ” என்ன யோசனை ? ” என்றாள் .

” இல்லை …முதலில் கொட்டும் ஐடியா போல் தெரிந்த்து.இப்போது விரல்களை மடக்கியதை பார்த்தால் குத்தும் எண்ணம் போல் தோணுகிறது.இவை தவிர்த்து வேறேதும் புதுவித யோசனை இருக்கிறதா ..என கேட்டேன் ” சிரிப்பினை வாய்க்குள் மென்றபடி சொன்னவனின் பார்வை அவளது மடக்கப்பட்ட விரல்கள் மேல் இருந்த்து.

சமுத்ரா எழுந்து விட்டாள் .இவன் ஒழுங்காக பேச மாட்டான் ்இவனிடம பேசுவது வீண் .திரும்பி உள்ளே நடந்தாள் .

,” அண்ணே , நம்ம பத்திரிக்கை மேடத்தை நாளை அழைத்து சென்று நம்ம குப்பத்து பெண் களுக்கு அறிமுகம் செய்துவிடுங்கள் ” அந்த கணக்கு பிள்ளையிடம் சத்தமாக கூறினான்.

” காலை ஒன்பது மணிக்கு கிளம்பி இருக்கிறீர்களா மேடம் ?” கணக்குபிள்ளை இவளிடம் கேட்டார்.

” ம் ..சரி சார் ” அவருக்கு ஒப்புதல் அளித்து விட்டு தனது அறைக்குள் புகுந்து கொண்டாள் சமுத்ரா.

அப்பாடா நாளை பேட்டி கிடைத்து விடும் .சிறு நிம்மதியுடன் பேட்டிக்கான கேள்விகள் சிலவற்றை தயாரித்து வைத்தாள் .

லேசாக பசிக்க தொடங்க , போய் உணவுண்ணலமா …என்றெண்ணும் போதே நேற்றைய சாப்பாட்டு அறை பிரச்சினை நினைவு வந்த்து்.யோகேஸ்வரன் வேறு இரவு அந்த வீட்டிற்கு போய்விடுவான் .

நானே  போய் அந்த பெண்களிடம் போய் மாட்டிக் கொள்ள வேண்டுமா ? நினைக்கவே ஆயாசமாக வந்த்து.கதவு தட்டப்படும் ஓசை .

நல்ல வேளை அந்த மேகலை உணவை கொண்டு வந்து விட்டாள் .சிறு நிம்மதியோடு கதவை திறந்தவள் திகைத்தாள் .
கையில் உணவு தட்டுடன்  நின்றவன் யோகேஷ்வரன்.

இவனை உள்ளே அனுமதிக்கவா வேண்டாமா ? யோசனையோடு நிற்கும் போதே உன் அனுமதி எனக்கெதற்கு என்பது போல் நடையில் தயக்கமின்றி அவளை தள்ளும் பாவனையில் அவன் வர அவசரமாக பின்வாங்கனாள் .

தட்டினை மேசையில் வைத்தவன் ” உன் பேட்டிக்கு தேவையான ஏற்பாடு செய்தாகி விட்டது ்நாளைஅனைவரும் உனக்கு ஒத்துழைப்பார்கள் .” என்றான் .

இப்போது நன்றி சொல்லத்தான் வேண்டும் .ஆனால் சற்று முன் அனுமதி எனக்கு வேண்டாம் என்பதான அவனது திமிர் நடவடிக்கை அவளது நாக்கை புரள வைக்க மறுத்தது.மௌனமாக அவனைபார்த்தபடி நின்றாள் .

” அந்த எளிய பெண்களிடம் பேட்டி எடுப்பதோடு உனது வேலையை திறுத்திக் கொள் .தேவையில்லாத யாரிடமும் பேசும் வேலை வேண்டாம் “

என்ன சர்வாதிகாரம் ்…பெட்ரோலில் பற்றிய நெருப்பாய் கோபம் கன்ன்றது அவளுள்.அவன் அமல்ராஜை பற்றியே பேசுகிறானென தெரிந்தது.

,அப்படித்தான்டா பேசுவேன் , உன்னால் ஆனதை பாரு என படபடத்து விட துடித்த நாவை அடக்கினாள் .இப்போது வேண்டாம் .எனக்கு காரியம் ஆக வேண்டும் .அதுவரை கழுதையானாலும் காலை பிடிக்கத்தான் வேண்டும் .

இந்த எண்ணத்துடன் இதழ்களை இறுக்கி மூடிக்கொண்டாள் .அவனை பார்க்க பிடிக்காது சன்னல் வழியே வான்நிலவை வேடிக்கை பார்த்தாள் .

” உனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை வீணாக்க மாட்டாயென நினைக்கிறேன் ” இறுகிய அவள் இதழ்களை பார்த்தபடி கூறிவிட்டு வெளியேறினான் .

கதவைஅழுத்தி மூடி தனது ஆத்திரத்தைஅவனுக்கு உணர்த்தனாள் .

இரவு உணவை முடித்து விட்டு தட்டை வைக்க போன போது யோகேஷ்வரன் வீட்டிலில்லை .அவனது வழக்கமான இடத்திற்கு சென்று விட்டிருந்தான் .

தந்தை , தாய் , சகோதரி என ஒரு முறையான சொந்தங்கள் இருந்தும் , இது போல் ஒரு முறையற்ற வாழ்விற்கு அவனை எப்படி அனுமதித்துள்ளனர் .அவர்களுக்கு ஒரு குழந்தை வேறு இருக்கிறது.




அப்படி அவள்தான் அவனுடைய விருப்பமெனின் அவளையே மணமுடித்து வைத்து விடலாமே ….எதற்கு இந்த பகிரங்க  திரை மறைவு வாழ்வு ? …

ஆனால் அவன் இது போல் யாருடைய பேச்சையும் கேட்கும் வழக்கம் உள்ளவன் போல் இல்லை.மேலும் அப்படி இவனை அதட்டி சொல் பேச்சு கேட்க வைக்கும் யோக்யதை இங்குள்ளோர் யாருக்கும் இருப்பதாகவும் தெரியவில்லை .

ம் ஹீம் ….நல்ல குடும்பம் …தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டபடி இவ்வாறு நினைத்தபடி இருந்தாள் .இல்லை தூக்கம் வருவதாகவில்லை .

எழுந்து வெளியே வந்தவளை மாடிப்படி மேலே வா…வாவென்றது .அந்த வீட்டில் மாடியிலிருப்பது யோகேஷ்வரன் மட்டும்தான் .சுத்தம் செய்யவென மேலே செல்வது மேகலை மட்டுமே .அதுவும் காலை அவன் இருக்கும் நேரம் ஒரு மணி நேரத்திற்கு மட்டுமே …

மற்றவர்கள் யாரும் மாடியேற அனுமதிக்கப்படுவதில்லை .அப்படி என்ன ரகசியம் மேலே வைத்திருப்பான் .?…ஒருவேளை மேலே சென்றால் லாவண்யா சம்பந்தமாக எதுவும் தெரிய வரலாமோ ?

இந்த எண்ணம் தோன்றி யவுடன் தயக்ககம் வடிந்து மாடிப்படி நோக்கி நடக்க தொடங்கி விட்டாள்.

இதோ முதல் படியில் கால் வைத்து விடுவாள். தூக்கிய அவள் கால்களினடியே ஒரு கம்பு வந்து விழுந்த்து .திரும்பினாள் .மயில்வாகன்ன் ….ஏறியிருங்கிய அவரது நெஞ்சு அவரது கோபத்தின் அளவை சொன்னது .

கோணிக்கொண்டு சென்ற கை , வாயுடன் போ…போ…என விசித்திரமான ஒலியுடன் அவர் சத்தமிட பயந்து அறையினிள் ஓடி வந்துவிட்டாள் .

அப்பப்பா ….என்ன ருத்ரம் ….அந்த விழிகளில் …பயத்தில்  உடல் நடுங்க மீதி இரவையும் சமுத்ரா தூக்கமின்றியே கழித்தாள் .




What’s your Reaction?
+1
14
+1
11
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!