Serial Stories கடல் காற்று

கடல் காற்று-5

 ( 5 )

” பார்த்தீரகளா உங்கள் பையன் செய்திருக்கும் வேலையை ..இப்படி அடிக்கடி யாராவது ஒரு பொண்ணை இழுத்துட்டு வருவான் .அந்த சிங்காரிகளையெல்லாம் சீராட்டனும்னு தலையெழுத்து எனக்கு …” முழங்கினாள் புவனாதேவி.

” அப்படி எத்தனை பேரை சீராட்டிட்டீங்களோ ? என்னமோ உங்கள் பிறந்த வீட்டு சீதனத்தை வைத்து எங்களையெல்லாம்   வளர்த்த மாதிரி பேசுறீங்க ? காஞ்ச கருவாட்டு கூடையோட இந்த வீட்டு வாசலில் வந்து நின்னதை மறக்க வேணாம் ” செல்லா இப்போது யார் பக்கம் பேசுகிறாள் ? குழம்பினாள் சமுத்ரா.

” ஆமான்டி உங்களை சீராட்ட பொறந்த வீட்டு சீரோட கொள்ளை பொம்பளைங்க வருவாங்க .கனா கண்டுகிட்டு கிடங்க .அதான் உன் அருமை தம்பி மாதம் ஒரு பொண்ணை கூட்டிட்டு வரறானே.இதோ இந்த மேனாமினுக்கியை கூட்டிட்டு வரலை ? “

” இங்கே பாருங்க உங்க ரெண்டு பேருக்குள்ளே பேசும்போது என்னை ஏன் வம்புக்கிழுக்கீங்க ? நான் பாட்டுக்கு நான் என் வேலையை பார்த்திட்டு போயிட்டிருக்கேன் . ” ஒரு சிறு பெண் பேசும் பேச்சை பாரேன் மேகலையை அசூசையுடன் பார்த்தாள் சமுத்ரா.

” அட என் அரைப்படி நெய்யே …அப்படி எந்த வேலையடிம்மா நீ பார்த்துக்கிட்டு இருக்க ? ” கைகளை தட்டி கன்னத்தில வைத்து அபிநயித்தாள் புவனா .

” அடி சின்னக்கழுதை ..வயசுக்கேத்த பேச்சு பேசுறாயாடீ ? ஒரு நா இல்லாட்டி ஒரு நாள் ஊசி நூலால உன் வாயை தைக்கலை என் பேர செல்வமணி இல்லைடி “

” என்னது ….? “எகிறினாள் அவள் .

ஆக இந்த அக்காவின் பெயர் செல்வமணியா ? …இந்த சிறுபெண்ணை எதற்காக அழைத்து வந்திருப்பான் ? சமையலுக்கு மாதிரி தெரியவில்லை ்நிறைய அதிகாரங்களை கொடுத்து வைத்திருக்கிறான் போலும் .அதனால் அக்காவிற்கும் , சித்திக்கும் கோபம் ்

முன்பே சித்திக்கும் , மகளுக்கும் ஆகாது ்இதில் இந்த சிறு பெண்ணும் சேர வீடு ரணகளம்தான் .




அந்த மூன்று பெண்களும் ஒருவரோடு ஒருவர் சண்டைக்கோழிகளாக சிலிர்த்து நின்றனர் .

ஏதோ மீன் சந்தையில் நிற்கும் உணர்வு சமுத்ராவிற்கு .என்னோடு சண்டை போட வந்து விட்டு தங்களுக்குள் அடித்துக் கொண்டிருக்கின்றனரே.சண்டைக்கான காரணத்தை தேடிக் கொண்டே இருப்பனரோ ?

அவஸ்தையுடன் திரும்பி பார்த்தபோது அந்த சண்டையினால் சிறிதும் பாதிக்க படாது அவளை ஆராய்ச்சி பார்வையுடன் நோக்கியபடி இருந்தார் மயில்வாகன்ன் .

தன்னிடம் ஏதோ கேட்க அவர் தயாராவதை உணர்ந்தவள் ” எனக்கு ஒரு போன் பேசனும் ” என்று உள்ளே ஓடி வந்துவிட்டாள் .

அறைக்கதவை மூடியதும் தான்  நிம்மதியாக மூச்சு விட முடிந்த்து அவளால் .அலுப்புடன் கட்டிலில் அமர்ந்தவளுக்கு தன் அண்ணனுடன் பேசினால் நன்றாக இருக்குமென்று தோன்ற , போனில் எண்களை அழுத்தினாள் .

சமுத்ராவின் அண்ணன் மலையரசன் ராணுவத்தில் பணி புரிகிறான் .அவர்களின் தாய் , தந்தையர்  திடீரென நடந்த ஒரு விபத்தில் இவர்களுக்கு சிறு வயதாக இருக்கும் போதே ஒன்றாக போய்விட்டனர் .

உறவினர்கள் அனைவரும் ஒதுக்கியதை கண்டு கொள்ளாமல் தங்கள் வீட்டில் தனியாகவே தங்கி தாங்களாகவே படித்து காட்டி சாதித்து காட் டினர் அண்ணனும் , தங்கையும் .

தாயும் , தந்தையும் சேமித்து வைத்திருந்த பணமும் , பிள்ளைகளின் படிப்பிற்கான பெற்றோரின் திட்ட ஏற்பாடுகளும் அவர்களுக்கு இப்போது மிக உதவின.

ஒரு நல்ல நிலைமையை அடைய தொடங்கிய போது , மீண்டும் வந து ஒட்டிக் கொள்ள நினைத்த உறவினர்களை நாசூக்காக ஒதுக்கி விட்டு ,அண்ணனும் ,தங்கையும் தங்களுக்கான வாழ்வை வாழ துவங்கிய போது ,மலையரசன் மிக விரும்பிய ராணுவ பணி அவனை தேடி வந்த்து.

அண்ணனுக்கு அந்த பணியின் மீதிருந்த ஆர்வத்தை நன்கு அறிந்த சமுத்ரா ,அவன் மறுக்க …மறுக்க அவனை அங்கே தள்ள முயன்றாள் .

அப்போது தூரத்து உறவான இந்த கருணாமூர்த்தி குடும்பம் தாங்கள் சமுத்ராவை பார்த்து கொள்வதாக உறுதுயளித்து மலையரசனை அனுப்பி வைத்தனர் .

மனமின்றியே சென்ற அவன் ….தன்் தங்கை அந்த தூரத்து சொந்த மாமன் வீட்டில்
தன் வயதொத்த லாவண்யா , தனசேகரனுடன் எளிதாக ஒட்டிக் கொண்டதை அறிந்த்தும். சற்று நிம்மதியாக நாட்டை காக்கும் பணியில் எல்லையில் ஈடுபட்டு கொண்டிருக்கிறான. .

அண்ணனிடம் தான் பத்திரிக்கை சம்பந்தமாக ஒரு வாரம் தங்குவதற்காக பழவேற்காடு வந்திருப்பதாக கூறினாள் .

சிறிது நேரம் மௌனமாக இருந்தவன் அவள் பத்திரிக்கை நோக்கம் வெற்றி பெற வாழ்த்தினான் .அவள் இருக்குமிடம் பற்றி விபரங்கள் கேட்டான் .

இதனை அண்ணனுக்ககு அளிக்க விரும்பவில்லை சமுத்ரா.ஏனெனில் இதுபோன்ற ஒரு இக்கட்டான இடத்தில் தங்கை தங்பியிருப்பதை அவன் ஒரு நாளும் விரும்ப மாட்டான் .

கருணாமூர்த்தியை அழைத்து உடனே தங்கையை
வீட்டிற்குஅழைத்து வந்து விட கட்டாயபடுத்துவான் .எனவே தான் ஒரு பயணிகள் விடுதியில் தங்கியிருப்பதாக கூறினாள் சமுத்ரா.




” அந்த ஊரில் அனைவரையும் தெரிந்து கொண்டாயா ?” அடுத்த கேள்வி

” நாளைதான் ஊருக்குள் போக போகிறேண்ணா.மீனவ பெண்களின் வாழ்க்கை முறை பற்றிய கட்டுரை தயாரிக்க வேண்டும் ” என்றாள் .

சிறிது அமைதியானவன் ” ஊருக்குள் யார் யாரை பார்த்தாயென தினமும் எனக்கு சொல்கிறாயா ? ” என்றான் .

மலையரசன் எப்போதும் தன் தங்கையின் வேலை விசயத்தில் அவ்வளவாக தலையிட மாட்டான் .அவளாக சொல்ல வந்தாலும் ” போர்மா ” என ஒதுக்கி விடுவான் .இப்போது தினமும் பேச சொல்கிறானே .

யோசனையுடன் சகோதரனுக்கு சம்மதித்து போனை வைத்தாள் .எதையோ அண்ணன் மறைக்கிறானோ  ? அல்லது எதையோ எதிர்பார்க்கிறானோ ?யோசனையோடு போனை வைத்தாள் .

தொடர்ந்து கருணாகரனுக்கு பேசி விட்டு , செண்பகத்திடம் எப்படியும் லாவண்யா பற்றிய தகவல்களுடன் வருவதாக உறுதியளித்து விட்டு தனசேகரனுடன் பேசவா என யோசித்தாள் .

அவன் நீ அங்கே போகாமலேயே இருந்திருக்கலாமே என ஆரம்பத்திலிருந்து வருவானோ ? என யோசித்தபடி போனை கையில் வைத்து பார்த்தபடி இருந்தாள் .

தனசேகரனே அழைத்து விட்டான் .பொதுவான நல விசாரிப்புகளின் பின் ஜாக்கிரதையாக இருக்கும் படி அவளை எச்சரித்து விட்டு வைத்தான்.

” ஊப்ப்ப் …” உள்ளே அடைத்து வைத்திருந்த காற்றை வெளியேற்றினாள் .அப்போதுதான் தனசேகரனுடன் மூச்சை பிடித்தபடி பேசியிருப்பதை உணர்ந்தாள் .ஏதோ பெரிய காரியம் செய்வது போல் உள்ளது இவனுடன் பேசுவது என எண்ணிக் கொண்டாள் .

கதவு தட்டப்பட சென்று திறந்தாள்

வெளியே மேகலை ்கையில் தட்டுடன் .இரவு உணவு போலும் …பரவாயில்லையே அவள் நின்ற போஸிற்கு எனக்கு பச்சை தண்ணீர் தர மாட்டாள் என நினைத்தேனே .

நன்றி சொல்லி தட்டை வாங்கினாள் .

” குடிக்க தண்ணீர் ….? ,” தயக்கத்திடன் கேட்டவளுக்கு …

அந்த ஹாலின் மூலையில் இருந்த பெரிய மண் ஜாடியை கட்டை விரலால் காட்டியபடி நக்கலுடன் சென்றாள் .

அட இந்த ஜாடி குடிதண்ணீர் ஜாடியா ? அழகுக்காக வைக்கப்பட்டிருப்பதாக நினைத்தேனே ..

ஆச்சராயப்பட்டபடி அதனருகில் சென்று தடவி பார்த்தாள் .மிக அழகிய வேலைப்பாட்டிடன் இருந்த்து அது .

தண்ணர் பிடுக்க ஒரு குழாய் அமைக்கப்பட்டிருந்த்து.தன்னிடம் இருந்த வாட்டர் கேனில் நீர் பிடித்து அருந்தினாள. மிக மிக சுவையாக வித்தியாசமான ருசியுடன் இருந்த்து நீர்

நாக்கில் அதன் சுவையை சுவைத்தபடி அறையினுள் வந்து சாப்பிடுவதற்காக தட்டை திறந்தவள் அதிர்ந்தாள் .

இரண்டே இரண்டு சப்பாத்திகள் இருந்தன.அவையும் கவனமாக கருக்கி எடுக்க பட்டிருந்தன.

ஒரு கிண்ணத்தில் குருமா என்ற பெயரில் மஞ்சளோ ்…ப்ரௌனோ ..்ஏதோ ஒரு திரவம் கறிவேப்பிலை மிதந்தபடி இருந்தது.




What’s your Reaction?
+1
13
+1
14
+1
1
+1
2
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!