Samayalarai

சுவையான தேங்காய் குழம்பு ரெசிபி!

தினசரி வீட்டில் ஒரே மாதிரி குழம்பு செய்து போர் அடிக்கிறதா? வித்தியாசமாகவும் எளிதாகவும் ஏதாவது ரெசிபி செய்ய வேண்டும் எனத் தோன்றுகிறதா?

தமிழ்நாட்டில் செட்டிநாடு ரெசிபிக்கள் மிகவும் பிரபலமானது. அதோடு செட்டிநாடு ரெசிபிக்கள் சுவையானதும் கூட. நீங்கள் செட்டிநாடு ரெசிபியின் பிரியர் என்றால், அதுவும் உங்கள் வீட்டில் செட்டிநாடு ரெசிபிக்களை செய்ய நினைத்தால், சிம்பிளான செட்டிநாடு தேங்காய் குழம்பு செய்யுங்கள். இந்த தேங்காய் குழம்பு, இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அதோடு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.




 இந்தப் பதிவில் சூடான சாதத்துடன் சாப்பிடுவதற்கு சுவையான தேங்காய் குழம்பு ரெசிபி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

செட்டிநாடு தேங்காய் குழம்பு | Chettinad Coconut Kuzhambu Recipe In Tamil - Tamil BoldSky

தேவையான பொருட்கள்:

  • இளம் தேங்காய் – 1 மூடி.

  • தக்காளி – 3.

  • சின்ன வெங்காயம் – 1 கப்.

  • மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்.

  • புளி – சிறிதளவு.

  • கடுகு – அரை டீஸ்பூன்.

  • வெந்தயம் – அரை டீஸ்பூன்.

  • மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்.

  • தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன்.

  • சீரகம் – அரை டீஸ்பூன்.

  • எண்ணெய் உப்பு – 100 ml.




செய்முறை: 

முதலில் சின்ன வெங்காயத்தை நன்றாகக் கழுவி தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்ததாக தேங்காயை சிறுசிறு பற்களாக நறுக்கிக் கொள்ளுங்கள். புளியை இரண்டு கப் அளவுக்கு தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் சிறிய கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு சீரகம் வெந்தயம் சேர்த்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் தக்காளியை சேர்த்து உப்பு போட்டு நன்றாக வதக்கவும். தக்காளி வதங்கியதும் அதில் புளித்தண்ணீரை ஊற்றுங்கள். அத்துடன் தனியா தூள் நறுக்கிய தேங்காய் மிளகாய் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

எல்லாம் நன்றாக வதங்கி, பச்சை வாடை போகும் படி கொதித்து கெட்டியான பிறகு, குழம்பை இறக்கிவிடவும். அவ்வளவுதான் சுவையான தேங்காய் குழம்பு ரெடி. இதை சுடு சாதத்தில் சேர்த்து பிணைந்து சாப்பிட்டால் சுவை நன்றாக இருக்கும். தயிர் சாதத்துடன் துவையலாகவும் இதை சாப்பிடலாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!