Entertainment Serial Stories

சிவாஜியின் தில்லானா மோகனாம்பாள் படத்திறக்கு யார் நாதஸ்வரம் வாசித்தது தெரியுமா?

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காவியமாக மாறிய படம் தில்லானா மோகனாம்பாள். இருக்கும் எல்லாரையுமே அந்த படத்தின் மீது ஆசையை உருவாக்கியது. உண்மையாக நாதஸ்வர் வித்வானாகவே சிவாஜி வாழ்ந்தார். அந்த படத்தில் இருந்து சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.




பாடல்களை மட்டும் வைத்து ஹிட்டான 7 படங்கள்.. காலத்தால் அழியாத தில்லானா மோகனாம்பாள் - Cinemapettai

தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜி நாதஸ்வர வித்வானாகவும், பத்மினி பரதநாட்டியம் ஆடும் பெண்ணாகவும் நடித்திருந்தார்கள். இதில் பத்மினிக்கு உண்மையாகவே பரதநாட்டியம் தெரியும் என்பதால் பிரச்னை இருக்கவில்லை. ஆனால் சிவாஜிக்கு நாதஸ்வரம் வாசிக்க தெரியாது. கண்டிப்பாக அவருக்கு டூப் போட்டு தான் எடுக்க முடிவும் செய்யப்பட்டது.

அந்த படத்தில் உண்மையாக நாதஸ்வரம் வாசித்தவர்கள் மதுரையைச் சேர்ந்த நாதஸ்வர வித்வான்களான எம்.பி. என். சேதுராமன் மற்றும் பொன்னுசாமி சகோதரர்கள் தான். தில்லானா மோகனாம்பாள் படத்தின் நாதஸ்வர ரீக்கார்ட்டிங் சிவாஜி இல்லாமல் நடிக்க கூடாது என கறாராக கூறிவிட்டாராம். கே.வி.மகாதேவன் குழுவோடு ரிக்கார்டிங் நடக்கும்போது கூடவே இருப்பார் சிவாஜி.

நாதஸ்வரத்தை அவர்கள் வாசிக்கும் போது ஏற்படும் முகபாவங்கள், அழுத்தம் கொடுக்கிற விரலசைவு, நாதஸ்வரத்தை பிடிக்கும் முறை. இதை அனைத்தினையுமே உன்னிப்பாக கவனித்து கொள்வாராம். சென்னையில் இருபது நாட்களுக்கு மேல் ரிகர்சல் நடந்தது.

ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் ரிக்கார்டிங் நடந்ததாம். ஒருமுறை ரிகர்சல் டைமில் சிவாஜி ஒருபக்கமும், பொன்னுசாமி குழுவினர் ஒரு பக்கம் வாசித்து இருக்கின்றனர். இவர்கள் வாசிக்க எதிரே சிவாஜி வாசிக்கிற மாதிரி நடிக்க வேண்டும்.

இதை முடித்துவிட்டு எப்படி இருந்துச்சு எனக் கேட்டாராம் சிவாஜி. ஒரிஜினலே நீங்க தான். நாங்க தான் ஜெராக்ஸ் மாதிரி இருந்தோம் என நாதஸ்வர் வித்வான்களையே கூற வைத்தாராம். அதிலும் நடிகர் பாலையா தவிலை வாசிக்க படத்திற்காக ஒரிஜினலாகவே கத்துக்கொண்டாராம்.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!