Cinema Entertainment

SIIMA 2023 விருதுகள் நம்ம படங்களோட லிஸ்ட் இதோ..

தென்னிந்திய சினிமா துறையை கௌரவிக்கும் விதமாக சைமா நடத்தும் விருது விழா இந்த வருடமும் கோலாலமாக நடைபெற்று இருக்கிறது. தமிழ் சினிமாவின் இரண்டு படங்கள் அந்த மேடையை தெறிக்க விடும் அளவிற்கு விருதுகளை பெற்றிருக்கின்றன. மேலும் ஒரு ஹீரோவுக்கு தீவிர ரசிகனாக இருந்து, பின்னர் அந்த ஹீரோவை விருது மேடையில் ஏற்றி அழகு பார்த்த ரசிகனின் உணர்ச்சிபூர்வமான தருணமும் நடைபெற்று இருக்கிறது.




SIIMA Awards 2023 Full Winners List In Malayalam Complete List Of Siima Awards | SIIMA AWARDS 2023: கெத்து காட்டிய மலையாள படங்கள்.. சைமா விருது வென்ற பிரபலங்கள்..முழு விபரம் இதோ..!

கடந்த வருடத்திற்கான தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் தெறிக்கவிட்ட படங்கள் என்றால் அது பொன்னியின் செல்வன் மற்றும் விக்ரம் தான். தற்போது இந்த படங்கள்தான் சைமா விருது வழங்கும் விழாவில் விருதுகளை வாரி குவித்து இருக்கின்றன. குரு கமலஹாசன், சிஷ்யன் லோகேஷ் கனகராஜ் இருவரும் ஒரே மேடையில், ஒரே படத்திற்காக விருது வாங்கி இருக்கிறார்கள்.




இந்த வருடத்திற்கான சிறந்த நடிகர் விருதை கமலஹாசன் விக்ரம் படத்திற்காக வாங்கி இருக்கிறார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்ததற்காக, த்ரிஷாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. சிறந்த இயக்குனர் விருதை விக்ரம் படத்திற்காக லோகேஷ் கனகராஜூம் , சிறந்த இசையமைப்பாளர் விருதை அதே விக்ரம் படத்திற்காக அனிருத்தும் வாங்கியிருக்கிறார்கள்.

சிறந்த படத்திற்கான விருது பொன்னியின் செல்வனுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. சிறந்த சப்போர்ட்டிங் கேரக்டர் விருது விக்ரம் படத்தில் நடித்த ஏஜென்ட் டீனா வசந்திக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. சிறந்த கலை விருது பொன்னியின் செல்வன் படத்திற்காக தோட்டா தரணிக்கும், சிறந்த பாடலுக்கான விருது பொன்னி நதி பார்க்கணுமே பாடலை எழுதிய இளங்கோ கிருஷ்ணனுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன் திரைப்பட ஒளிப்பதிவாளர் ரவிவர்மனுக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருது கொடுக்கப்பட்டிருக்கிறது.




பின்னணி பாடகருக்கான விருது கமலஹாசன் பத்தல பத்தல பாடலுக்காக வாங்கி இருக்கிறார். இயக்குனர் மணிரத்தினத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. சிறந்த லீடிங் ரோல் விருது ராக்கிடெரி படத்தில் நடித்த மாதவனுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. சிறந்த அறிமுக கதாநாயகி விருது நடிகை அதிதி சங்கருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. சிறந்த சப்போர்ட்டிங் கேரக்டருக்காக கார்கி படத்தில் நடித்த காளி வெங்கட் விருது வாங்கியிருக்கிறார்.

சிறந்த நெகட்டிவ் கேரக்டருக்காக டான் திரைப்படத்தில் நடித்த எஸ் ஜே சூர்யா வாங்கி இருக்கிறார். சிறந்த நடிகைக்கான க்ரிட்டிக்ஸ் அவார்டு கீர்த்தி சுரேஷுக்கு சாணிக்காயிதம் படத்திற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. சிறந்த அறிமுக ஹீரோவுக்கான விருது பிரதீப் ரங்கநாதனுக்கும், சிறந்த காமெடியான விருது யோகி பாபுவுக்கும் லவ் டுடே படத்தில் நடித்ததற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!