gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/தர்மம் தலை காக்கும்… பாடமெடுத்த கிருஷ்ணர்!

மகாபாரதத்தில் மிக முக்கிய நபர்களாக முதல் இடத்தில் இருப்பது கிருஷ்ணர். தொடர்ந்து பஞ்ச பாண்டவர்களின் தலைவனானவர்  தர்மர். இவர்  தர்மம் செய்வதில் மிகச் சிறந்தவர் . அதன் காரணத்தாலேயே இந்த உலகத்திலேயே அதிக தர்மம் செய்தவன் என்னைத்தவிர வேறு யாரும் இருக்க முடியாது என்ற அகந்தை அவன் தலை மீது ஏறிவிடக்கூடாது என கிருஷ்ணன் எண்ணினான்.

தர்மமும், தர்மம் செய்பவர்களும் இந்த உலகில் சிறப்பாக வாழ வேண்டும் என கிருஷ்ணன் நினைத்தான். அதனால் தர்மனின் அகந்தையை நீக்கவும் அவனுக்கு பாடம் புகட்டவும் விரும்பினார்.




79 Mahabharat ideas | lord krishna images, radha krishna wallpaper, lord krishna wallpapersMahabharatham - மகாபாரதம் - இப்படியும் ஒரு மகன்… ”புத்” என்னும் நரகத்தைக் கடக்க உதவுவதால் ஒவ்வொருவருக்கும் “புத்திரன்” தேவை என்கிறது சாஸ்திரம் ...

ஒருநாள் கிருஷ்ணன், தர்மரை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள மகாபல சக்கரவர்த்தி ஆளும் பகுதிக்குச் சென்றார். அங்கு ஒரு வீட்டிற்கு சென்று குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர். அந்த வீட்டு பெண்மணி தங்க செம்பில் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தார். இருவரும் தண்ணீர் குடித்துவிட்டு செம்பை திரும்ப கொடுத்தனர். ஆனால் அதைப் பெற்ற அந்த பெண்மணி செம்பை வீசி எறிந்துவிட்டாள்.

தர்மன் வியந்து போய் இது தங்க செம்பல்லவா, பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டாமா என கேட்டார். அதற்கு அந்த பெண்மணி இந்த நாட்டில் ஒரு முறை பயன்படுத்திய பொருளை மறுமுறை பயன்படுத்த மாட்டோம் என அலட்சியமாக கூறி உள்ளே சென்றுவிட்டார்.

நாட்டின் செல்வச் செழிப்பை எண்ணி வியந்த தர்மனை அழைத்துக் கொண்டு மகாபல சக்கரவர்த்தியின் அரசவைக்குச் சென்றார்.

மகாபல சக்கரவர்த்தியிடம் இவர் தான் தர்மன், இந்த உலகத்திலேயே அதிக தர்மம் செய்தவர். அதனால் இவரின் பெயரும் தர்மன்.




கண்ணபிரான் தர்மரைப் பற்றி எவ்வளவு புகழ்ந்து அறிமுகப்படுத்தியும், அவர் முகத்தில் கூட மகாபல சக்கரவர்த்தி முழிக்கவில்லை.

Mahabharatham 05/22/14 - YouTube

மகாபல சக்கரவர்த்தியோ கிருஷ்ணரே, தாங்கள் சொல்வது என்னவோ உண்மை தான். ஆனால் எங்கள் நாட்டு மக்களிடம் உழைப்புக்கு பஞ்சமில்லை, அதனால் அனைவரிடமும் செல்வம் குவிந்து கிடக்கின்றது. அதனால் யாரும் பிச்சை எடுக்க வேண்டிய நிலையில் இல்லை. யாரும் யாரிடத்திலும் யாசம் பெறுவதில்லை.




அதனால் தர்மம் என்ற வார்த்தைக்கும் இங்கு அவசியமில்லாமல் உள்ளது. அதனால் என்னை தேடி தானம் பெற யாரும் வருவதில்லை, நான் தானம் தர வேண்டிய அவசியம் கூட ஏற்பட்டதில்லை.

இவரின் நாட்டில் ஏழைகள் அதிகம் இருக்கின்றனர் போலும், அதனால் தான் அதிகமானோர் தானம் கேட்டு செல்கின்றனர். இவரும் அதிகமாக தானம் கொடுக்கின்றார். இவ்வளவு ஏழைகளை தனது அரசாட்சியின் கீழ் வைத்திருக்கும் இந்த அரசன் தர்மனின் முகத்தைப் பார்க்கக் கூட வெட்கப் படுகின்றேன் என்றார்.

மகாபல சக்கரவர்த்தியின் பேச்சைக் கேட்டு, தனது ஆட்சியின் நிலைமையை நினைத்து வெட்கி தலை குனிந்தான் தர்ம ராஜா.

தற்போதுள்ள சூழல்:
தற்போதுள்ள அரசியல் சூழலும், ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க, தாங்கள் வாக்கு பெற வேண்டும் என்பதற்காக, நாட்டை முன்னேற்ற வழிகளை கூறாமல், இலவசங்கள் என்ற பெயரில் மக்களை சோம்பேறிகளை அதிகமாக பெருக்கும் நாடாக உள்ளது. ஓட்டுக்கு பணமும், இலவசங்களையும் பெற வரிசை நிற்கும் மக்கள் இருக்கும் வரை, அந்த நாடு எப்போதும் தலைகுனியத்தான் வேண்டும் என்ற நிலைதான் இருக்கும்.




 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!