Samayalarai

காஷ்மீரி ஆலூ இப்படி செஞ்சி பாருங்க

 உருளைக்கிழங்கை வைத்து வெறும் குருமாவே செஞ்சி எத்தனை நாளைக்கு தான் சாப்பிடுவீங்க. சூப்பரா ஒரு வெள்ளை புலாவ் செஞ்சுக்கோங்க. சைடு டிஷ்க்கு ரிச்சான இந்த காஷ்மீரி சைடு செய்யுங்க. அவ்வளவு ருசியா இருக்கும். இதை செய்வது ரொம்ப ரொம்ப சுலபம்தான். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்துவிடலாம்.




பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா இருக்கும். இதைத் தவிர்த்து குருமா வகைகள் இருக்கும்.  ஆனால் அசைவ வகைகளை எடுத்துக் கொண்டால் இதற்கு பல வகையான சைடு டிஷ் களை செய்யலாம். இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி போன்ற டிபன் வகைகளுக்கு என்ன தான் வகை வகையான சைடு டிஷ்கள் இருந்தாலும் கூட,காஷ்மீரி ஆலூ வைத்து சாப்பிடும் போது அதிகமாக 2  இட்லி அதிகமாக  சாப்பிடவே செய்வார்கள். இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் சப்பாத்தி, பூரி இதற்கெல்லாம் ஏற்ற ஒரு அருமையான காஷ்மீரி ஆலூ எப்படி ரொம்ப சிம்பிளா அதிக டேஸ்ட்டா செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.




தேவையான பொருட்கள்

▢1 கப் வேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு

▢1/2 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்

▢1/2 கப் தக்காளி விழுது

▢1/2 தேக்கரண்டி சீரகம்

▢1 தேக்கரண்டி மிளகாய் பொடி

▢1/2 தேக்கரண்டி மல்லிப் பொடி

▢1/2 தேக்கரண்டி சீரகப் பொடி

▢1/2 தேக்கரண்டி மஞ்சள் பொடி

▢1/2 தேக்கரண்டி கரம் மசாலா பொடி

▢1 தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது

▢உப்பு தேவைக்கு ஏற்ப

▢கறிவேப்பிலை சிறிது

▢மல்லித் தழை சிறிது

▢எண்ணெய் தேவையான அளவு




செய்முறை விளக்கம்:

▢ தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும். வேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

▢ கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சீரகம் போட்டு அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

▢ வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, பொடி வகைகள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

▢ பிறகு தக்காளி விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும், எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும் உருளைக்கிழங்கைப் போட்டு கிளறவும்.

▢ சிறிது தண்ணீர் தெளித்து கொதிக்க விடவும். 2 நிமிடம் உருளைக்கிழங்கை வேக விடவும். பிறகு மல்லித் தழை சேர்த்து இறக்கி பரிமாறவும்.

▢ சுவையான காஷ்மீரி ஆலூ தயார்.




வீட்டு குறிப்பு :

கிழங்கு - தமிழ் விக்சனரிகுளிர்காலத்தில் துணிகளை காய வைத்தாலும் ஈரம் காய்வதில்லையா..? இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!

  • கிழங்கு வகைகளை கறி செய்யும் போது அதிகமாக எண்ணெய் விட்டு வறுக்கக் கூடாது. எளிதில் ஜீரணமாகாது.

  • வீட்டில் புகை அதிகமாக காணப்படுகிறதா? அறையில் ஈரத் துணியை தொங்க விட்டால் புகை காணாமல் போய் விடும்.

  • அலுமினிய பாத்திரங்களில் அடிப்பிடிப்புக் கறையை நீக்க உப்பு காகிதத்தால் தேய்த்தால் பாத்திரம் புதுப்பொலிவுடன் இருக்கும்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!