தோட்டக் கலை

இயற்கை உரம் -வேப்பம் அஸ்திரா தயாரிப்பு

விவசாயத்தின் சூட்சமங்களுள் ஒன்றே உரங்கள்தான். தகுந்த காலத்தில் தகுந்த பூச்சிக் கொல்லி மற்றும் உரங்களைப்  பயன்படுத்தினால் மண் வளத்தை பாதுகாத்து, உற்பத்தியையும் பெருக்கிக்கொள்ள முடியும்.அவ்வாறு இயற்கை விவசாயத்தில், காய்ப்புழு மற்றும் தண்டுப்புழுக்களை துவம்சம் செய்ய உதவுவது எதுவென்றால், அதுதான்வேப்பம்  அஸ்திரம்.




தேவையான பொருட்கள்:

நாட்டு மாட்டுச்சாணம் -2 கிலோ

நாட்டு மாட்டுச்சிறுநீர்- 10 லிட்டர்

வேப்பங்குச்சிகள் மற்றும் வேப்ப இலை- 10 கிலோ

தயாரிக்கும் முறை

  • இவை அனைத்தையும் பெரிய பாத்திரத்தில் போட்டு, 200 லிட்டர் நீரையும் ஊற்றி 48 மணி நேரம் ஊற வைக்கவேண்டும்.

  • மூடி போட்டு மூடி வைக்க கூடாது. இக்கரைசலை கடிகாரச்சுற்றுக்கு எதிர்திசையில் மூன்று தடவை கலக்கி விடவேண்டும்.

  • பின்பு வடிகட்டி வயலில் தெளிக்கலாம். பல வகை கெடுதல் செய்யும் பூச்சிகளுக்கு இது ஒரு நல்ல பூச்சி விரட்டியாகும்.

  • இந்த கரைசலை அதிகபட்சம் அறுபது நாட்கள் வைத்திருக்கலாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!