Beauty Tips

வீட்டிலேயே எளிதாக பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறையை நீக்குவது எப்படி.? அருமையான டிப்ஸ்!!

ஒரு சிலருக்கு என்ன தான் நன்றாக பல் துலக்கினால் பற்களில் மஞ்சள் படித்து போகாமல் இருக்கும். அப்படியாக பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறையை வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை கொண்டு எப்படி சுத்தம் செய்து விடலாம்.

பற்களில் மஞ்சள் கறை ஏற்படுவதற்கு அடிக்கடி டீ மற்றும் காபி குடிப்பது, சிகரெட் பிடிப்பது, ஒழுங்காக பல்லை பராமரிக்காமல் இருப்பது போன்ற காரணங்களால் தான் பல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது. இவ்வாறு மஞ்சள் அடைந்து காணப்படும் பற்களை வீட்டில் உள்ள எளிய பொருட்களை கொண்டே வெண்மையாக்க முடியும்.




தேவையான பொருட்கள்

பேக்கிங் சோடா-1 ஸ்பூன்

எலுமிச்சை பழ தோல்- சிறிய துண்டு

ஆரஞ்சு தோல்- சிறிய துண்டு




பயன்படுத்தும் முறை

  • பேகிங் சோடாவை 1/2 கப் குளிர்ந்த நீரில் கலந்து தினமும் மூன்று முறை வாய் கொப்பளித்து வந்தால் பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகள் நீங்கி பல் வெண்மை பெறும்.

  • எலுமிச்சை பழத்தின் தோலைக் கொண்டு பற்களை தேய்த்து பின் குளிர்ந்த நீரில் வாயை கொப்பளித்தால் பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறை நீங்கும்.

  • இரவில் உறங்க செல்வதற்கு முன்பு ஆரஞ்சு தோலைக் கொண்டு பற்களை நன்கு தேய்த்துவிட்டு வாயை கழுவாமல் இரவு முழுவதும் ஊற வையுங்கள். ஆரஞ்சில் உள்ள வைட்டமின் சி சத்தானது, வாயில் உள்ள கிருமிகள் மற்றும் நுண்ணுயிரிகளை அழித்து, பற்களை வலுவாகவும், வெள்ளையாகவும் வைத்துக் கொள்ள உதவும்.




What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!