health benefits

புகை பிடிப்பவர்களின் நுரையீரலுக்கு வெல்லம்!

நுரையீரல் பாதிப்பின் அறிகுறிகளும் சிகிச்சை முறைகளும்…!

நுரையீரல் என்பது மனித உடலில் இருக்கும் மிக முக்கிய உறுப்பு ஆகும். நுரையீரலை வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமித் தொற்றால் இந்த பாதிப்பு ஏற்படுகின்றது. இதனால் மூச்சுக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்துகின்றது. நிமோனியா மற்றும் இன்ஃபுளுயென்சாவைத் தடுக்க  தடுப்பூசிகள் உள்ளன. 

இதய நோய்கள் மற்றும் நுரையீரல் நோய்கள் உள்ளவர்கள் இந்தத் தடுப் பூசிகளைப் போட்டுக் கொள்வதன் மூலம் பாதிப்பில் இருந்து தப்பிவிடலாம். இந்த நோய்த் தொற்று ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது சிகரெட் பழக்கம் தான். அத்தோடு விறகு அடுப்புப் புகையை அடிக்கடி சுவாசிக்கும்  குழந்தைகளுக்கும் இந்த நோய் ஏற்படுகின்றது.

நுரையீரல் பாதிப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சளி, நிமோனியா, காச நோய், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் வாய்ப்பு  உள்ளது.




இந்த புற்றுநோய்க்கு முக்கியக் காரணம் சிகரெட் புகைப்பது. சிகரெட் பிடிப்பவர்களின் அருகில் இருப்பவர்களும் புகையை சுவாசிப்பதால் அவர்களுக்கும் புற்று நோய் ஏற்படுவதாக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.û இந்த இரண்டாம் நிலை சிகரெட் புகைப் பாதிப்பால் பெண்களும், குழந்தைகளும் தான் அதிக அளவில்  பாதிக்கப்படுகின்றனர்.

தினமும் பழங்கள், கீரைகள் என ஆரோக்கியமான உணவை உட்கொண்டு, பீடி, சிகரெட் பழக்கத்தைத் தவிர்த்தாலே இந்த புற்று நோயில் இருந்து நம்மால்  தப்பிக்க முடியும்.

அறிகுறிகள்: அடிக்கடி இருமல் ஏற்படும், சளித் தொல்லை இருக்கும், மூச்சு திணறல் உருவாகும், நெஞ்சு வலி ஏற்படும், தொடர்ந்து இருமல், இருமலுடன் ரத்தம் வரும், இளைப்பு ஏற்படும். இரு வாரங்கள் தொடர்ந்து இருமல் இருந்தால் காசநோய் அல்லது ஆஸ்துமா நோயின் அறிகுறியாக இருக்கலாம். இந்த நோய்  முற்றிய பிறகு எலும்புகளில் வலி, திடீரென குரலில் மாற்றம், தோள் பட்டையில் வலி, நகங்களில் பிரச்சனை போன்றவை ஏற்படும்.

சிகிச்சை முறைகள்: நுரையீரல் பாதிப்புக்கு, இரண்டு முறைகளில் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. முதற்கட்ட பரிசோதனையில், நுரையீரலில் பாதிப்பு  ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்தவுடன் ரிலீவர் மருந்து அளிக்கப்படும். பாதிப்பு முற்றிய நிலையில் இருந்தால், ‘கன்ட்ரோலர்’ மருந்து அளிக்கப்படும்.




நுரையீரலில் சேரும் கார்பனை அகற்றும் வெல்லம்!

வெல்லம் ஒரு இயற்கை இனிப்பு என்று அறியப்படுகிறது. சுவாசம் அல்லது நுரையீரல் தொடர்பான கோளாறுகள் வரும் போது, ​​இது ஒரு சிறந்த டானிக்காக செயல்படுகிறது.பல சந்தர்ப்பங்களில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை விட வெல்லம் அதிகம் விரும்பப்படுகிறது. நுரையீரலை சுத்தப்படுத்தும் தன்மை வெல்லத்தில் உள்ளது என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளது.

இந்திய தாய்மார்கள் எப்போதும் தங்கள் குழந்தைகளுக்கு வெல்லத்தை கொடுக்கும் பழக்கம் உள்ளது. ஒரு சிறிய துண்டு வெல்லம் குழந்தைகளுக்கு மென்று சாப்பிட கொடுப்பார்கள், இது தவிர, வெல்லம் பாயசம், அதிரசம் போன்ற இனிப்பு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது, வெல்லம், இஞ்சி மற்றும் துளசி இலைகள் இருமல் மற்றும் ஜலதோஷத்தின் போது கொடுக்கப்படுகின்றன. சிமென்ட் தொழிற்சாலைகள், நிலக்கரி சுரங்கம் அல்லது தூசி – மண் போன்ற இடங்களில் வேலை செய்பவர்களுக்கு வெல்லம் கொடுக்கப்படுவதற்கான காரணம் இதுதான்.

வெல்லத்தில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், சோடியம், எனர்ஜி, சர்க்கரை போன்ற சத்துக்கள் இருப்பதால், பல பிரச்சனைகளில் இருந்து காத்து ஆரோக்கியத்தை வழங்கும். வெல்லத்தில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. எனவே, வெல்லம் சாப்பிடுவதன் மூலம் ரத்த சோகை  பிரச்சனையை தவிர்க்கலாம்.




இரத்த அழுத்தத்தை சீராக்கும்

வெல்லத்தில் நிறைந்துள்ள இரும்புச்சத்து இரத்த அழுத்தத்தை சீராக்குவதில் பெரும் உதவியாக இருக்கும். இதன் மூலம், உயர் ரத்த அழுத்த பிரச்சனையையும் தவிர்க்கலாம். வெல்லத்தில் காணப்படும் பொட்டாசியம் மற்றும் சோடியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த பயனுள்ளதாக இருக்கும்.

வெல்லத்தை உணவில் சேர்த்துக் கொள்ளும் முறை

வெல்லத்தை பானகமாக தயாரித்து குடிக்கலாம். வெல்லம், நெய், கருப்பட்டி கலந்த லட்டுக்களை செய்து சாப்பிடுவதும் சிறந்தது. அதோடு, சாப்பிட்டவுடன் ஒரு துண்டு வெல்லம் சாப்பிடுவதும் பலன் கொடுக்கும். எனினும் எப்போதும் ரசாயனம் இல்லாத வெல்லத்தை பயன்படுத்துங்கள். அப்போது தான் முழுமையான ஆரோக்கிய நன்மைகளை அடைய முடியும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!