Entertainment தோட்டக் கலை

உங்க வீட்டு ரோஜா செடி டார்க் கலர்ல பூக்கனுமா!

வீட்டில் வளர்க்கும் ரோஜா செடிகளுக்கு வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு நல்ல ஒரு பராமரிப்பு கொடுக்க முடியும். வீணாக போகக்கூடிய பொருட்களிலிருந்து நாம் சமைக்கும் உணவிலேயே செடிகளுக்கு தேவையான அத்துணை சத்துக்களும் ஒளிந்து கொண்டுள்ளது. எனவே 10 பைசா செலவில்லாமல் நம்ம ரோஜா செடி லைட் கலர்ல இல்லாம டார்க் கலர்ல எப்படி பூக்க செய்வது? என்பதைத் தான் இந்த தோட்டக் குறிப்பு பதிவின் மூலம்  தெரிந்து கொள்ள இருக்கிறோம்.




  • பீட்ரூட்டில் ஏராளமான சத்துக்கள் இருக்கிறது. பீட்ரூட் மனிதனுக்கு மட்டுமல்லாமல், தாவரங்களுக்கும் கூட அதன் சத்துக்களை கொடுத்து உதவுகிறது. அந்த வகையில் ரோஜா செடியின் நிறம் பொதுவாக ஊட்டச்சத்து இல்லாமல் அடர்த்தி குறைவாக இருக்கும். வாங்கி வந்த புதிதில் அடர்த்தியான நிறமாக இருந்திருக்கும். அதன் பிறகு பராமரிப்பு இல்லாமல் பூக்கள் பூக்கும் பொழுது லைட் கலரில் பூத்திருக்கும்.

  • இந்த மாதிரியான ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு ஒரு கைப்பிடி பீட்ரூட்டை துருவி எடுத்துக் கொள்ளுங்கள். சமையலுக்கு பயன்படாமல் தூக்கி எறியக்கூடிய பீட்ரூட்டை கூட, நீங்கள் பயன்படுத்தலாம். துருவிய பீட்ரூட்டை முக்கால் லிட்டர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஒரு டப்பாவில் இறுக மூடி போட்டு, மூடி வைத்து விடுங்கள். அரை மணி நேரத்தில் இருந்து முக்கால் மணி நேரம் வரை நன்கு ஊறி இருக்க வேண்டும்.

  • சிறிது நேரத்திற்கு பிறகு தண்ணீர் முழுவதும் நல்ல ஒரு சிவப்பு நிறமாக மாறி இருக்கும். பீட்ரூட் அடியில் தேங்கி இருக்கும். இந்த சமயத்தில் நீங்கள் இரண்டு லிட்டர் அளவிற்கு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஊற வைத்த பீட்ரூட் உடைய தண்ணீரை மட்டும் கால் லிட்டர் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள் போதும், பிறகு நன்கு கலந்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரை அரை மக்கு வீதம் ஒவ்வொரு செடிகளுக்கும் கொடுத்து வந்தால் போதும்.




  • வாரத்திற்கு ஒரு முறை இதை கொடுத்தால் உங்களுடைய செடிகள் அத்தனையும் இனி நல்ல ஒரு அடர்த்தியான டார்க் கலரில் பூக்க ஆரம்பிக்கும். குறிப்பாக சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள்,  ரோஸ் என்று அடர்த்தியான நிறங்களில் பூக்கக்கூடிய செடிகளுக்கு இதை கொடுத்து பாருங்கள் ,உங்களுக்கே வித்தியாசம் தெரிய ஆரம்பிக்கும்.

இது போன்ற தோட்டாக்குறிப்புகளை உங்களுக்கு தெரிந்தவர்களுக்குப்  பகிரலாமே! அவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே.




What’s your Reaction?
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!