Beauty Tips அழகு குறிப்பு

வீட்டு வைத்தியத்தின் மூலம் இதய படபடப்பை எப்படி கட்டுப்படுத்துவது?

இதய படபடப்பை கட்டுப்படுத்தும் வீட்டு வைத்தியம்

பொதுவாக இதயம் வேகமாக துடிக்கும் பொழுது படபடப்பாக உணர்வது இயல்பானது. உடற்பயிற்சி, தியானம், மன அழுத்தம் அல்லது ஒரு சில உடல் நல பிரச்சனைகள் காரணமாகவும் இதய படபடப்பை உணரலாம்.

பெரும்பாலான சமயங்களில் இதய படபடப்பு பாதிப்பில்லாதது என்றாலும், ஒரு சில சந்தர்ப்பங்களில் அவை தீவிர இதயப் பிரச்சினையையும் குறிக்கலாம். உங்களுக்கு தொடர்ந்து சீரற்ற இதயத் துடிப்பு இருந்தாலோ அல்லது சில வினாடிகளுக்கு மேல் படபடப்பு தொடர்ந்தாலோ மருத்துவரை ஆலோசனை செய்ய வேண்டியது அவசியம். இருப்பினும் இவை தொடர்ச்சியாக இல்லையெனில், இதய படபடப்பை கட்டுப்படுத்த பின்வரும் உதவி குறிப்புகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

உலர்ந்த ரோஜா இதழ்கள் ஒழுங்கற்ற இதயத் துடிப்பை சீராக்கும் ஒரு இயற்கை மருந்து என்பது உங்களுக்கு தெரியுமா? இதை பயன்படுத்தும் முறை குறித்து இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • ரோஜா இதழ்கள்

  • கல்கண்டு

  • பால்




செய்முறை

உலர்ந்த ரோஜா இதழ் பொடியில் உள்ள குளிர்விக்கும் பண்புகள் வாதம் மற்றும் பித்த தோஷத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் அஜீரணம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அதுமட்டுமின்றி அசிடிட்டி, அதிக உடல் சூடு, வாய் மற்றும் உடல் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளுக்கும் இது நல்ல தீர்வாக அமைகிறது.

1. ரோஜா இதழ்களை நிழலில் உலர்த்திய பின் அதை பொடியாக்கி கொள்ளவும்.

2. இதனுடன் பொடி செய்யப்பட்ட கல்கண்டையும் சேர்க்கவும்.

3. ரோஜா இதழ்கள் மற்றும் கல்கண்டை சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

4. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலுடன் ஒரு டீஸ்பூன் ரோஜா இதழ் கலவை சேர்த்து தினமும் குடிக்கலாம்.

5. இதை தினமும் குடித்து வந்தால் உங்கள் இதயத் துடிப்பு சீராகும்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!