Samayalarai Uncategorized

வித்தியாசமான சுவையில் -வேர்க்கடலை சட்னி

சுவையில் தனி ரகம் கொண்ட வேர்க்கடலை சட்னியில் வைட்டமின்களும் ஊட்டச் சத்துக்களும் அதிக அளவில் உள்ளன.மேலும், உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் அற்புத சட்னியாகவும் இது உள்ளது. இந்த டேஸ்டி சட்னியை தயார் செய்ய வெறும் 10 நிமிடங்கள் போதும். இப்போது வேர்க்கடலை சட்னி எப்படி தயார் செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

சுவையான வேர்க்கடலை சட்னி




தேவையான பொருள்கள் –

வறுத்த வேர்க்கடலை – 3/4 கப்

பொட்டுக்கடலை – 1/4 கப்

மிளகாய் வத்தல் – 2

புளி – சிறிய கோலி அளவு

பூண்டுப்பல் – 1

பெருங்காயம் -1 சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

தாளிக்க –

நல்லெண்ணெய் – 3 மேஜைக்கரண்டி

கடுகு – 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை – சிறிது




செய்முறை விளக்கம்

  • முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, அதில் உள்ள தோலை நீக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். மிளகாய் வத்தல், புளி இரண்டையும் தண்ணீரில் 10 நிமிடம் வரைஊற வைக்கவும்.

  • பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,  பூண்டு, வரமிளகாய்  சேர்த்து பொன்னிறமாக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

  • ஊறிய பிறகு அதனுடன் வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை, பெருங்காயம்,  பூண்டுப்பற்கள், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.

  • அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து சட்னியில் நன்றாக கலக்கி விடவும்.இட்லி, தோசைக்கு சுவையான வேர்க்கடலை சட்னி ரெடி.

வீட்டு குறிப்புகள்

  • வெள்ளை வினிகர் முதல் 4 டீஸ்பூன் எடுத்து ஒரு கப் தண்ணீரில் கலந்துக்கொள்ளவும். பிறகு ஒரு துணி கொண்டு நனைத்து ஃபிரிட்ஜ் கதவில் துடைக்கவும். சுத்தமாக காணப்படும். அதோடு, துற்நாற்றம் வீசாமல் இருக்க வாசனை மணக்க புதினா இலைகளை போட்டு வைக்கலாம்.

  • முதலில் அனைத்து முட்டைகளிலும் மினரல் ஆயில் தடவவும். பின்பு அனைத்து முட்டைகளையும் சிறிது நேரம் வெயிலில் வைத்து, அதனை அட்டைப்பெட்டியில் போட்டு சமையலறையில் வைக்கவும். இதனால் ஒரு மாதத்திற்கு மேல் முட்டைகள் கெடாமல் இருக்கும்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!