Beauty Tips Entertainment அழகு குறிப்பு

மூக்கு, உதட்டுக்கு கீழ் உள்ள சொரசொரப்பு நீங்க இப்படி செய்யுங்க..

மூக்கின் மீது சொரசொரப்பு, உதட்டிற்கு கீழ் அதிகம் இருக்கும் வெண்புள்ளிகள், கரும்புள்ளிகள் 1 நாளில் மறைய கண்டிப்பா இதை செய்து பாருங்கள்.

 

பொதுவாக முகம் முழுவதும் பிரகாசமாக இருந்தாலும் ஒரு சிலருக்கு மூக்கின் மீது மட்டும் ஏனோ சொரசொரவென்று வெண்புள்ளிகள் நிறைந்து காணப்படும். இந்த வெண்புள்ளிகளை கவனிக்காமல் அப்படியே விட்டு விட்டால் காலப்போக்கில் கரும்புள்ளிகள் ஆக மாறிவிடும் அபாயமும் உண்டு. மூக்கின் மீது, உதட்டிற்கு கீழே இருக்கும் பகுதிகளில் அதிகம் பரவும் இந்த வெண்புள்ளிகளை ஒரே நாளில் மறைய செய்யக் கூடிய அற்புத குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.




முகத்தில் இருக்கும் முகப்பருக்களை விட, இந்த வெண்புள்ளிகள், கரும்புள்ளிகள் மிகவும் அசிங்கமாக தோற்றம் தரும். முகத் தோல்களுக்குள் வேர்க்கால்கள் வரை பரவியிருக்கும் கரும்புள்ளிகளும், தோலின் மீது படர்ந்து இருக்கும் வெண்புள்ளிகளும் ரொம்ப ரொம்ப சுலபமான முறையில் நம் வீட்டில் இருக்கும் ரவையை வைத்தே விரட்டி அடித்து விட முடியும்.

தேவையான பொருட்கள்

ரவை- 1  ஸ்பூன்

தேங்காய் எண்ணெய்- 1/4 ஸ்பூன்

தயாரித்து மற்றும் உபயோகிக்கும் முறை

  • இதற்கு ஒரு சிறிய பௌலில் எடுத்துக் கொள்ளுங்கள்.

  • அதில்  ரவையைப் போட்டுக் கொள்ளுங்கள். வறுத்த ரவை, வறுக்காத ரவை என்று எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.

  •  ரவையுடன்,  சுத்தமான தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணெய் கலந்தவுடன் ரவை தளர்ந்து விடக்கூடாது, உதிரியாக அப்படியே இருக்க வேண்டும். அந்த அளவிற்கு தேங்காய் எண்ணெய் கலந்து கொண்டால் போதும். அதிகம் கலந்து விட்டால் பிரயோஜனம் இல்லாமல் போய்விடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.




  • பயன்படுத்தும் முறை:  முதலில் முகத்தை நன்கு கழுவி சுத்தம் செய்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த கலவையை கொண்டு மூக்கு மற்றும் உதடுகளுக்கு கீழ்ப்பகுதியில் இருக்கும் வெண்புள்ளிகள், கரும்புள்ளிகளின் மீது நன்கு கைகளை வைத்து மிகுந்த அழுத்தம் கொடுக்காமல், இலேசாக, வேகமாக தேயுங்கள். எல்லா இடங்களிலும் இது போல் நீங்கள் தேய்த்து வரும் பொழுது உங்கள் முகத்தில் இருக்கும் வெண் புள்ளிகள், கரும்புள்ளிகள் எளிதாக வந்துவிடும்.

  • குறிப்பாக வெண்புள்ளிகள் உடனே நீங்கும். பின்னர் சோப்பு போடாமல் தண்ணீர் கொண்டு கழுவி விடுங்கள். அந்த ஈர பதம் முகத்தில் இருக்கும் பொழுதே ஒரு சேஃப்டி பின்னை எடுத்துக் கொள்ளுங்கள். பின்-னால் நன்கு அழுத்தம் கொடுத்து மூக்கு மற்றும் உதடுகளுக்கு கீழே தேய்த்து கொடுங்கள்.




  • இப்படி செய்யும் பொழுது தளர்வாக இருக்கும் வெண் புள்ளிகள் வெளியில் வந்து விடும். நீங்கள் தேய்த்த இடங்கள் ரொம்பவே மிருதுவாக மாறி விடும். அதற்கு பிறகு மீண்டும் தண்ணீர் கொண்டு துடைத்துக் கொள்ளுங்கள். ஒரு மணி நேரம் கழித்து சோப்பு போட்டு கழுவி கொள்ளலாம். அதற்குள் கழுவி விடாதீர்கள்.

  •  தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம். வேறு எந்த பொருட்களையும் பயன்படுத்த வேண்டாம். தொடர்ந்து இது போல் ஒவ்வொரு வாரமும், வாரம் ஒரு நாள் செய்து வாருங்கள். உங்கள் முகத்தில் வெண்புள்ளிகள், கரும்புள்ளிகள் என்கிற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடும், முகம் பட்டு போல மிருதுவாக மாறும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!