Beauty Tips அழகு குறிப்பு

பாதவெடிப்பை ஈசியாக சரி செய்யலாம்..




பாதவெடிப்புகள் என்பது மோசமான ஒன்று. எல்லோருக்கும் குதிகால் வெடிப்பில்லாமல் பொலிவாக இருப்பதில்லை. சரியான பராமரிப்பு இருந்தால் குதிகால் வெடிப்பு இல்லாமல் செய்துவிடலாம். வெடிப்பு தீவிரமாகாமல் கட்டுப்படுத்தலாம்.

எப்போதும் தண்ணீரில் பாதங்களை நனைத்துகொண்டே இருப்பவர்களுக்கு குதிகால் வெடிப்பு வரலாம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் தண்ணீரே அதிகம் படாத கால்களில் கூட வெடிப்பு என்பது அதிகரிக்கவே செய்கிறது.
இந்த குதிகால் வெடிப்பு தீவிரமாகும் போது விரிசலிலிருந்து இரத்தக்கசிவு வரை வரலாம். இதற்கு சிம்பிளான வீட்டு வைத்தியத்துலயே சரி செய்யலாம்.

தேவையான பொருட்கள்

எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

பன்னீர் – 1 டீஸ்பூன்

கிளிசரின் – 1 டீஸ்பூன்





எப்படி பயன்படுத்துவது?

  • அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி வையுங்கள்

  • அதில் எலுமிச்சை சாற்றை கலந்து 10-15 நிமிடங்கள் வரை கால்களை வைத்தெடுத்த பின் ப்யூமிக் ஸ்டோனை கொண்டு பாதங்களை சுத்தம் செய்யவும்.

  • பிறகு பாதங்களை கழுவி டவல் வைத்து நன்றாக துடைத்து விட்டு பன்னீர் மற்றும் க்ளிசரீன் இரண்டையும் கலந்து பாதங்களில் மசாஜ் செய்து விட்டு படுக்கவும்.

  • இப்படி தொடர்ந்து 1 வாரம் செய்தால் பாத வெடிப்பு படிப் படியாக குறையும்.




What’s your Reaction?
+1
1
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!