Entertainment Samayalarai

தித்திக்கும் பால் கோவா




பால் கோவா என்பது தமிழ்நாட்டின் பாரம்பரிய இனிப்புச் செய்முறையாகும். பால் கோவா வீட்டிலையே செய்வது மிகவும் எளிமையானது, ஆனால் இதற்கு பொதுவாக நிறைய நேரம் எடுக்கும்.  இந்த ரெசிபி குறைந்த நேரத்தில் எப்படி பால்கோவா செய்வது என்பதை பற்றித்தான் பார்க்கப்போகிறோம். அதானால் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்கள். அடுத்தமுறையும் இது போன்று செய்து தர சொல்லி கேட்பார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த தித்திக்கும் சுவையில்  பால் கோவா எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க.. .

தேவையான பொருட்கள்: (2 பேருக்கு)

  •      பால் – 500 மில்லி

  •      எலுமிச்சை சாறு, 3, 4 சொட்டு

  •      சர்க்கரை – 4 தேக்கரண்டி

  •      நெய் – 2 முதல் 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

  • ஒரு கடாயில்  பாலை ஊற்றி  சூடு பண்ணவும்.  சூடு பண்ணிய பாலில்  எலுமிச்சை சாறு சேர்த்து அதை தனியாக ஒதுக்கி வைத்து விடவும்.

  • ஒரு கடாயை சூடு பண்ணவும். சூடு ஆனதும்   2 அல்லது 3 டேபிள் ஸ்பூன் நெய் சேர்க்கவும். பிறகு அதில் பாலை  ஊற்றி பின்னர் சர்க்கரை சேர்க்கவும்.

  • சர்க்கரை சேர்த்ததும் நன்கு கிளறுங்கள். சர்க்கரை கரைந்து மீண்டும் திரண்டு வரும்போது, இறக்கிவைத்து, நன்கு கிளறுங்கள். பால்கோவா திரண்டு வரும். இப்போது சுவையான பால் கோவா  தயார்.

டிப்ஸ்

  • சர்க்கரை சேர்த்ததும் பால்கோவா திரண்டு வரும் அப்போது பக்குவமாக கை விடாமல் கிளறுங்கள். கவனமாக கிளறவில்லை என்றால் அடி பிடித்து விடும்.




வீட்டு குறிப்பு

  • வீட்டை அழகாக்க லட்சக்கணக்கில் செலவு செய்து பெயின்ட் அடிக்க தேவையில்லை. அழகழகான வால்பேப்பர்களே போதுமானது.

  • வெங்காய சாம்பார் செய்யும்போது, பெரிய வெங்காயம் வைத்துச் செய்யவும். சின்ன வெங்காயம் 7-8 வதக்கி சாம்பாருக்கு அரைக்கும் பொருட்களுடன் அரைத்து சாம்பாரில் கொட்டவும். மணம் வீட்டைத் தூக்கும்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!