Samayalarai

சூப்பரான ரோஸ் மில்க் ஷேக்

ரோஸ் மில்க் ஷேக்

ரோஸ் மில்க் ஷேக் என்பது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு பானமாகும். கடந்த சில தினங்கலாவே வெயிலின் தாக்கம் அதிகமாக தான் இருக்கிறது. இதனை மாலை வேளையில் பள்ளி முடிந்து சோர்வுடன் வரும் குழந்தைகளுக்கு கொடுத்தால், அவர்கள் விரும்பி குடிப்பார்கள். இந்த ரோஸ் மில்க் ஷேக் செய்வது மிகவும் ஈஸி. மேலும் இதனை செய்ய தேவையான பொருட்களானது எளிதில் கடைகளில் கிடைக்கக்கூடியவையே.இங்கு அந்த ரோஸ் மில்க் ஷேக்கை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அதன்படி குழந்தைகளுக்கு செய்து கொடுத்து, அவர்களை குஷிப்படுத்துங்கள்.





தேவையான பொருட்கள்:

குளிர்ந்த பால் – 2 கப்

வென்னிலா ஐஸ்க்ரீம் – 2 ஸ்கூப்

சிரப் செய்வதற்கு…

சர்க்கரை – 3/4 கப்
தண்ணீர் – 100 மிலி
ரோஸ் மில்க் எசன்ஸ் – 1 டேபிள் ஸ்பூன்




செய்முறை:

  • முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அதில் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து, சர்க்கரையானது கரைந்ததும், அதில் ரோஸ் மில்க் எசன்ஸ் சேர்த்து கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

  • சர்க்கரை சிரப்பானது குளிர்ந்ததும், அதனை ஒரு சுத்தமான பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து, தேவையான போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • அடுத்து பிளெண்டர் அல்லது மிக்ஸியில் பால் ஊற்றி, அதில் ஐஸ்க்ரீமை போட்டு, 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் சிரப் ஊற்றி, பின் மூடி வைத்து நன்கு அடித்து டம்ளரில் ஊற்றி பரிமாறினால், ரோஸ் மில்க் ஷேக் ரெடி!!!




டிப்ஸ்

  • ரோஸ் சிரப் கிடைக்கவில்லையெனில் அரை தேக்கரண்டி அளவு ரோஸ் எஸ்ஸென்ஸ்  சேர்த்துக் கொள்ளவும்.

  • சர்க்கரை தேவைக்கு தகுந்தவாறு சேர்த்துக் கொள்ளவும்.

  • பாலுடன் ஐஸ் கிரீம் சேர்த்து ரோஸ் மில்க் செய்தால் மேலும் சுவையுடன் இருக்கும்.

வீட்டு குறிப்பு

  • பால் பாத்திரம் கொதிக்கும் போது அதன் மேல் ஒரு மரக் கரண்டி அல்லது மரத்தூண்டை வைப்பது, பால் கொதிக்காமல் தடுக்கும். பாத்திரத்தின் மையத்தில் வைக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

  • நீங்கள் பால் கொதிக்கும் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பாத்திரத்தின் விளிம்பில் வெண்ணெய் தடவி பின்னர் பால் ஊற்றவும். இது உங்கள் பால் கொதிக்காமல் தடுக்கும்.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!