Beauty Tips அழகு குறிப்பு

ஆண்கள் மட்டும் படிங்க பிளீஸ்!-9

அழகு குறிப்பு  

ஆண்கள் மட்டும் படிங்க பிளீஸ்!-9

 




அத்திப்பழம் அழகா என் அத்தை பெண் அழகா என்று கேட்கக் கூடிய அளவுக்கு அழகில் ஜொலிக்க வேண்டும் என்ற மனநிலையில் திகழும் பெண்களுக்கு இணையாக ஆண்களும் இன்று அழகாக மாறி பெண்களுக்கே டஃப் கொடுக்கலாம். மேலும் இதனை வாரத்தில் ஒருமுறையாவது நீங்கள் கடைப்பிடிப்பது அவசியமாகும் அவ்வாறு கடைபிடிப்பதின் மூலம் தான் உங்கள் அழகு கூடும்.வீட்டிலேயே இருக்கும்  இயற்கையான  அழகு குறிப்புகள் மூலம் மேலும் தங்களை அழகாக்கி கொள்ளக்கூடிய சில அழகு குறிப்புகளை  எந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

  • அதிகாலையில் நீங்கள் எப்போதும் அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உங்கள் அழகு ஜொலிக்கும்.

  • ஆண்களுக்கு இருக்கும் முக பிரச்சினைகளில் முதன்மையானது இந்த முகப்பருக்கள்தான். இவற்றை போக்க 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன், தயிர், ஆரஞ்ச் பழ சாறு, ரோஸ் நீர் போன்றவற்றை நன்றாக கலக்கவும். பின் முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் அலசினால் முக பருக்கள் நீங்கும்.




  • தேங்காய் எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் தூள் தேய்த்து குழைத்து உடல் முழுவதும் தேய்த்து விட்டு பின் பயத்த மாவு கொண்டு தேய்த்துக் கொடுத்தால் உங்கள் தோல் கடினத்தன்மையில்லாமல் மிருதுவாகவும் பல பளப்பாக மாறும்.

  • அன்னாசி பழத்தின் சாறு, தர்பூசிணி மற்றும் பப்பாளி பழ சாறுகளும் சரும நிறத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

  • பசும்பாலில் நெய்யை 1/2 டீஸ்பூன் எடுத்து கொண்டு சிறிது பாலுடன் சேர்த்து முகத்தில் பூசி மசாஜ் செய்தால் முகம் இளமையாக இருக்கும். அத்துடன் முகத்தில் உள்ள செல்களை மறு உற்பத்தி செய்யும்.

இந்த குறிப்புகளை ஆண்கள் அனைவரும் பயன்படுத்துவதன் மூலம் பெண்களை விட அழகாக நீங்கள் மாறலாம். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முக ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!