Cinema Entertainment

எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு முன்பே சாதனை படைத்த நாயகன்

எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு முன்பே சாதனை படைத்த நாயகன்.. தொழில்நுட்பம் இல்லாமலேயே இரட்டை வேடத்தில் நடித்த சுவாரஸ்யம்




இன்றைய கால தொழில்நுட்பத்தில் ஒரு நடிகரோ, நடிகையோ யாராக இருந்தாலும் சரி இரட்டை வேடத்தில் ஒரு படத்தை இயக்குவது சுலபமாக உள்ளது. அந்த அளவிற்கு தமிழ் சினிமா உலகளவில் தொழில்நுட்பத்தில் முன்னேறி வருகிறது. இதனிடையே இரட்டை வேட கதாபாத்திரத்தில் ஏற்று அன்றைய காலகட்டங்களில் நடிக்க வேண்டும் என்றால் அது சாதாரண விஷயமல்ல.

1960 காலகட்டங்களில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் உள்ளிட்டோர் இரட்டை வேடங்களில் சவாலாக பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்கள். அப்போதே இரட்டை வேட காட்சிகளில் ஒன்றாக எடுக்கும் போது எடிட்டர்களுக்கும், இயக்குனர்களுக்கும் பல சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் இவர்களுக்கு முன்பாகவே 1940-ஆம் ஆண்டு வெளியான ஒரு திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்த நடிகரை பற்றிதான் தற்போது பார்க்கப் போகிறோம்.




இந்தியா சுதந்திரம் ஆவதற்கு முன் தமிழ் சினிமாவில் பேசும் படங்கள், ஊமை படங்கள் என பல திரைப்படங்கள் வந்ததுண்டு. ஆனால் முதன் முறையாக தி மேன் இன் தி ஐயன் மாஸ்க் என்ற ஆங்கில நாவலை தழுவி இயற்றப்பட்ட திரைப்படம் தான் உத்தமபுத்திரன். 1940 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் நடிகர் பி.யு சின்னப்பா, எம்.வி.ராஜம்மா உள்ளிட்டோர் நடித்திருப்பார்.




செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற பாரதியார் எழுதிய பாடல் வரிகள் இத்திரைப்படத்தில் தான் முதன்முதலாக ஒலிபரப்பப்பட்டது. அப்போது சுதந்திர தாகத்தில் இருந்த நம் இந்திய தமிழ் மக்களுக்கு இப்பாடல் தான் மிகப்பெரிய ஊக்கத்தை அளித்தது என்று சொல்லலாம். அப்படிப்பட்ட உத்தமபுத்திரன் திரைப்படத்தில் நடிகர் பி.யு சின்னப்பா இரட்டை வேட கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

நகைச்சுவையும், சுதந்திர போராட்டத்தையும் முன் வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் வரும் ஒரு பாடல் காட்சி பார்க்கும் அனைவருக்கும் அன்றைய காலத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இரட்டை கதாபாத்திரம் என்றால் தனித்தனி காட்சிகள் வைத்து படத்தை முடித்து விடலாம் என்பதுதான் அன்றைய காலத்தில் அவர்களுக்கு இருந்த சவாலாக இருந்தது.




ஆனால் பி.யு.சின்னப்பா இரண்டு கெட்டப்புகளில் ஒரே காட்சியில் இடம் பெறுவதை பார்த்து அப்போது இருந்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் தங்களை மெய் மறந்து போனார்கள் . இந்த காட்சிதான் தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட மிகவும் கடினமான காட்சியாகும். 175 நாட்களுக்கும் மேலாக தியேட்டர்களில் ஓடி அன்றைய காலத்திலே வெள்ளி விழா கண்ட இத்திரைப்படம் தான் பிற்காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், அஜித் , தனுஷ் என இரட்டை வேடத்தில் நடிகர்கள் நடிக்க வேறாக இருந்த திரைப்படம் எனலாம்.

 

முதல் மரியாதை படம் வேஸ்ட் என்று சொன்ன இரண்டு முக்கிய பிரபலங்கள்.. டென்ஷனான சிவாஜி கணேசன்




 தமிழ் சினிமாவைப் பொருத்தவரை நடிப்பின் நாயகன் என்றால் சிவாஜி கணேசன் தான். இன்று சினிமாவுக்கு புதிதாக வரும் நடிகர் நடிகைகளுக்கு பலரும் நடிப்பு பயிற்சி செய்ய பரிந்துரை செய்வது சிவாஜி கணேசன் படங்கள் தான்.

அப்படிப்பட்ட சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான பல படங்களில் முதல் மரியாதை படத்திற்கு எப்போதுமே முதலிடம் உண்டு. எதார்த்தமான நடிப்பில் அனைவரையும் ரசிக்கும் படி செய்தார். மேலும் முதல் மரியாதை படத்தில் இளையராஜா இசையில் இடம் பெற்ற பாடல்கள் இன்றும் பலரது பேவரைட்.

பாரதிராஜா இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி, சத்யராஜ் போன்றோர் நடிப்பில் உருவாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் முதல் மரியாதை. அதுவரை வந்த சிவாஜி படங்களில் சற்று மாறுபட்ட படமாக வெளிவந்தது.




பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய முதல் மரியாதை படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. சிவாஜிக்கு மிகவும் பிடித்த படம் என்றால் அது முதல் மரியாதை தானாம்.

அப்பேர்பட்ட முதல் மரியாதை படத்தை தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலங்களாக அந்த காலகட்டத்தில் இருந்த இருவர் படம் சரியில்லை என்று கூறியது பாரதிராஜாவையும் சிவாஜியையும் சோகத்தில் ஆழ்த்தியதாம். அவர்கள் வேறு யாருமில்லை.




தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியராக இருந்த பஞ்சு அருணாசலம் மற்றும் இசைஞானி இளையராஜாதான். பஞ்சு அருணாச்சலம் படம் பார்த்துவிட்டு படம் சரியில்லை என இளையராஜாவிடம் கூறியதால் அவரும் படம் பார்த்துவிட்டு படம் ஓடுமா என யோசித்தாராம்.

ஆனால் சிவாஜிகணேசன் கண்டிப்பாக இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என சவால் விட்டதை தொடர்ந்து படம் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பி வசூல் மழை பொழிந்து விட்டதாம். இந்த தகவலை சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!