Serial Stories

விளக்கேற்றும் வேளையிலே – 3

      3

சுற்றிக் கொண்டிருந்த உன் நினைவுகளை 
சேர்த்தெடுத்து கோர்த்துதான் 
வட்ட வட்டமாய் மெத்தென தோசை வார்த்தேன் .

 

 

 




அந்த ” நிப் பெயின்டிங் ” முடிந்த்தும் அதனை தன் னிடமிருந்து சற்று விலக்கி வைத்து அழகு பார்த்தாள் அமுதவாணி . மிகவும் அழகாக அவளுக்கு திருப்திகரமாக வந்திருந்த்து அது .கண்களை சுழற்றி அந்த அறையை அளந்து அந்த பெயின்டிங்கை மாட்ட வேண்டிய இடத்தை தேர்ந்தெடுத்த பின்பு , அதனை டீப்பாயில் வைத்துவிட்டு ஸ்டூல் எடுத்து வர உள்ளே சென்றாள் .

ஸ்டூலுடன் வந்த போது சந்தனா அதனை கைகளில் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தாள் .சந்தனா .அமுதவாணி போல் சிவராமன் ,மங்கலதேவி தம்பதியின் பேத்தி  .சந்தனாவின் தாய் சௌந்தர்யாவும் , அமுதாவின் தாய் கலைவாணியும் உடன் பிறந்தவர்கள் .அப்பா சொன்ன மகேந்திரனுக்கு வாய் திறக்காமல்  கழுத்தை நீட்டியதால் சௌந்தர்யா இன்றும் அப்பாவிற்கு செல்லமாகி , அவள் மகள் தாத்தாவிற்கு இன்னமும் செல்லமாகி , அதிகாரமாக அந்த வீட்டில் வளைய வருபவர்கள் .

மனம் விரும்பிய சுதாங்கனை  மணமுடிக்க , பெற்றோரை எதிர்த்து துணிந்து வீட்டை விட்டு வெளியேறிய  கலைவாணி வீட்டிற்கு அந்நியமாகி , உயிர் போன பின்பும் அவர்களுக்கு அலட்சியமாகி , இன்று அவள் மகள் அமுதா அந்த வீட் டினர் அனைவருக்கும்  அனர்த்தமாகிவிட்டாள் .

ஊர் உலகத்தின் பேச்சிற்கு பயந்துதான் சிவராமன் அமுதாவை அவர் வீட்டிற்குள் கொண்டு வந்து வைத்திருந்தார் .இல்லாவிட்டால் மகளையும்  மருமகனையும் எரித்த கையோடு அமுதாவையும் அங்கேயே தலைமுழுகி விட்டு வந்திருப்பார் .

சந்தனாவை பார்த்தபடி இதை நினைத்துக் கொண்டே வந்தவள் “நல்லாயிருக்கா சந்தனா ..? ” எனக் கேட்டாள் .நிமிர்ந்து அவளை பார்த்தவள் தனது இரண்டு கைகளையும் விட்டாள் .கையிலிருந்த அந்த பெயின்டிங் கீழே விழுந்து சிதறியது. சந்தனா தன்  கைகளை தட்டிவிட்டுக் கொண்டாள் .” சாரி தவறிடுச்சு “

ஐந்து மணி நேர உழைப்பில் இதனை உருவாக்கியிருந்தாள் அமுதா .” ஏய் எத்ற்காக கீழே போட்டாய. ? ” சத்தமாய் கேட்டாள் .

” தெரியாமல் விழுந்திடுச்சு “

” இல்லை நீ வேண்டுமென றுதான் போட்டாய் .நான் பார்த்தேன் “

” ஏய் குட்டி …என்ன சத்தம் வாசல் வரை கேட்குது …? “என்றபடி வந்து நின்றார் சிவராமன் .




” தாத்தா இவள் என் பெயின்டிங்கை வேண்டுமென்றே கீழே போட்டு உடைத்துவிட்டாள ” அமுதாவின் குரலில் அழுகை வரத்துவங்கியது .

” ஆமா …பெரிய கலையரசி இவா ….வரைந்து தள்ளிட்டா …அதை என் செல்லக்குட்டி உடைச்சிட்டாளாக்கும் ..? தெரியாமல் விழுந்திருக்கும் .கூட்டி அள்ளி வெளியே எறிஞ்சிட்டு வயித்துக்கு கொட்டிக்க வா .வாடா செல்லம் சாப்பிடலாம் ” ஆதரவாய் சந்தனாவை அழைத்தபடி நடந்தார் சிவராமன் .

இப்போது பெயினடிங் உடைந்த்து கூட பெரிதாக தெரியவில்லை அமுதாவிற்கு .என்ன அலட்சியம் …? தாத்தாவுடன் போகும் போது திரும்பி இவளை பார்த்து நக்கலாக சிரித்து விட்டு போனாள் சந்தனா.எவ்வளவு அவமானம் …? மனம் உடைந்து நின்றாள் அமுதா .

அன்று அவள் சாப்பிட போகவில்லை .” ஏய் சாப்பிட வரலையா ? ” வாசலில் நின்று கத்தினாள் மங்கலதேவி .

” எனக்கு பசிக்கலை ” அழுகையை அடக்கியபடி கம்மலான குரலில் கூறினாள் .” சரிதான் ..சும்மா அங்கேயும் ..இங்கேயும் நடந்துக்கிட்டே வீட்டில் இருக்கிற தின்பண்டத்தையெல்லாம் தின்னுகிட்டே திரிந்தால் பசி எப்படி எடுக்கும் .ஒரு வேளை வயிற்றை காயப் போட்டால் தப்பில்லை ” என போய்விட்டாள் .

நான் எப்போது தின்பண்டம் தின்றேன் ..?அதைத்தான் உயரே செல்பில் வைத்து பூட்டி வைத்து விடுகிறீர்களே .்..மனதிற்குள்ளே சொல்லக் கொண்டு சத்தமின றி அழ ஆரம்பித்தாள் .அவளாக நேரத்திற்கு சாப்பிட போகாவிட்டால் அந்த வீட்டில் அவளுக்கு சாப்பாடு கிடையாது .பிறகு பட்டினிதான் கிடக்க வேண்டுமென்பதை சீக்கிரமே உணர்ந்து கொண்டவள் ,தனது தன்மானத்தை சிறிது தள்ளி வைத்துவிட்டு அரைகுறையாக உணவுண்ண பழகிக் கொண்டாள் .

ஒருநாள் சமையல்காரி லீவ் போட்டுவிட தற்செயலாக அமுதா சமைத்த சமையல் அனைவருக்கும் பிடித்து விட மெல்ல மெல்ல அந்த வீட்டில் சம்பளம் வாங்காத சமையல்காரியாகிவிட்டாள் .

மூர்த்திக்கும் , சாருலதாவிறகும் அமுதா மிகப்பெரிய எதிரிதான் .ஆனால் அவர்கள் இருவருக்கும அமுதாவை திட்ட வாயை திறக்கும் அவசியமே கிடைக்காது .அதுதான் முதலிலேயே சிவராமனும் , மங்கலதேவியுமே அவளை உண்டு இல்லையென்று பண்ணிக் கொண்டிருப்பார்களே …

இன்னமும் கொட்டிக் கொண்டிருந்த மழையை பார்த்தபடி தனது அநாதரவான நிலைமையை நினைத்து கொண்டிருந்தாள் .

” வாம்மா சாப்பிடலாம் ்…” அனுராதா அழைத்தாள் .சிறு கூச்சம் வந்து ஒட்டிக் கொண்டது அமுதாவிற்கு .இப்படி அடுத்த வீட்டில் வந்து சாப்பாடு , காபி என உட்கார்ந்திருக்கிறோமே …? அனுராதா டீச்சராக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் .அவளது பள்ளியில் ஒரு தற்காலிக டீச்சர் வேலை காலியிருப்பதாக கூறியதால் , அந்த வேலையில் சேர்ந்து கொள்ளுமாறு கூறிதான் காயதரி அமுதாவை அனுப்பியிருந்தாள் .




இந்த மழை நான்கு நாட்களாக விடாமல் பெய்து எல்லா வேலையையும் நாசமாக்கிக் கொண்டிருந்த்து .தோசை ஊற்றிக் கொண்டிருந்த அனுராதாவிடம் கரண்டியை வாங்கிய அமுதா ” நான் ஊத்துறேன் .நீங்க போய் சாப்பிடுங்க மேடம் ” என்றாள் .

” என்னம்மா சும்மா மேடம் …மேடம்னுட்டு சும்மா அம்மான்னு சொல்லு .நீயும் என் பொண்ணு மாதிரிதான் ” கடைசி வார்த்தையை டைனிங்டேபிளில் அமர்ந்து ,உள்ளே எட்டி பார்த்துக் கொண்டு தோசைக்கு பதிலாக அமுதாவை கண்ணால் சாப்பிட்டுக் கொண்டிருந்த திலீபை நோக்கியபடி கூறினாள் அனுராதா.

” இல்லையாடா திலீப் …? ” என்று மகனிடம் அபிப்ராயம் வேறு கேட்டாள் .” ஆமாம் ..ஆமாம் ” என அமுதாவை பார்த்தபடி அம்மாவிடம் பூம் பூம் மாடாகிவிட்டு , திடீரென யோசித்து ” என்னம்மா சொன்னாய் ..? நான் கவனிக்கவில்லை ” என்றான் சந்தேகத்தோடு .

” இல்லைடா ..நீயும் திலீப் போல எனக்கு மகள் போலத்தான் .அதனால் அம்மான்னு கூப்பிடுன்னு அமுதாகிட்ட சொல்லிட டு இருந்தேன் .சரிதானே ” மகனருகில் டேபிளில் அமர்ந்தபடி கேட் டாள் .

” என்னது …? இல்லையில்லை …அது எப்படி ..? ஊஹூம் …நான் ஒத்துக்க மாட்டேன் ” திலீப்பின் அலறலை கிச்சனிலுருந்து கேட்ட அமுதா இவன் எதற்கு இப்படி கத்தி தொலைகிறான் ? என எண்ணியபடி அடுத்த தோசையை ஊற்றினாள் .மொறுமொறுப்பாக  தோசை சுட்டு அதனை ஓரமாக கீறி  கல்லில் வைத்தே அழகாக தொப்பி போல் சுருட்டி லாவகமாக எடுத்து தட்டில் வைத்து கொண்டு வந்து அனுராதா தட்டில் வைத்தாள் .

” அட அழகா ஹோட்டல்ல சுடற மாதிரியே சுட்டிருக்கியே .பார்த்தாலே சாப்பிடனும்னு தோணுதும்மா ” அனுராதா பாராட்டினாள் .

” உங்க கையில் எதுவும் மாயாஜாலம் இருக்குதாங்க …? எப்படி இப்படி அழகா சுட்டீங்க ..? தோசையும் உங்களை மாதிரி அழகாக இருக்குங்க …” குடம் குடமாய் திலீப் வழிய விட்ட ஜொள்ளுக்கு ஒரு அரைப் புன்னகையை அரை நொடி மட்டும் அளித்துவிட்டு அடுத்த தோசைக்காக உள்ளே போய்விட்டாள் அமுதா.

” திலீப் …” என எச்சரித்த அனுராதாவை ” அம்மா நீயும் அப்பாவும் எனக்கு லவ்மேரேஜுக்கு பர்மிசன் கொடுத்திருக்கீங்க.அதனால் பேசாமல் பார்த்துக்கிட்டு இரு .இல்லை அப்பா நைட் போன் பண்ணும் போது நீ எனக்கு வில்லி மாதிரி ் இடையில் நிற்கிறதை சொல்லிடுவேன் ” மிரட்டலாக சொன்னான் .
அவன் தந்தை துபாயில் வேலை பார்ப்பதால் இங்கே அம்மாவும் , மகனும் மட டும்தான் .

உனக்கெல்லாம் அந்த பொண்ணு அதிகம்டா .சொன்னா கேட்கவா போகிறாய் ..? நீ படடுத்தான் திருந்துவ போல தனக்குள் நொந்தபடி தொப்பி தோசைக்குள் நுழைந்தாள் அனுராதா .

இவர்கள் மட்டுமல்ல அமுதாவின் சமையலை சாப்பிட்ட யாருமே பாராட்டாமல் இருக்க மாட்டார்கள் .அவளுக்கு அப்படி ஒரு கை பக்குவம் வாய்த்திருந்த்து. வெறும் ரசம் வைத்தாலும் வாசல் வரை அது மணக கும் .தனக்கு சமையல் இப்படி ருசியாக வாய்த்திருப்பதால்தான் தாத்தா தன னை இந்த வீட்டில் வைத்திருக்கிறார் என்று கூட அவள் நினைத்ததுண்டு .சாப்பாட்டை மட்டும் அந்த வீட்டில் யாரும் குறை சொன்னதில்லை .

ஆனால் அதையும் அவன் …அமிர்தன் குறை சொல்லிக் கொண்டே இருப்பான் .உப்பிலை…உரைப்பில்லை …ருசியில்லை …ஏதாவது ஒன்று இல்லாமலிருக்கும் அவனுக்கு .இதையெல்லாம் சாப்புடனும்னு என் தலையெழுத்து …முணுமுணுத்தபடி தட்டை தள்ளிவிட்டு அரைகுறை சாப்பாட்டில் எழுந்து விடுவான் .

அவனுக்காக மேலும் பார்த்து பார்த்து சமைத்து வைத்துவிட்டு …இன்னும் இன்னும் அவனது குறைகளை கேட்டு நிறைய மனதை புண்ணாக்கிய பின்புதான் அமிர்தனுக்கு பிடிக்காத்து தனது சமையலை அல்ல …தன்னை  என்பது அமுதாவிற்கு புரிந்த்து .பிறகு தனது முயற்சிகளை அவள் விட்டுவிட்டாள் .




தனக்காக மெத்தென்ற மாத்தோசை ஒன்றை ஊற்றிக் கொண்டு வந்தாள் .அவளுக்காக ஆர்வ பார்வையுடன் டேபிளில் காத்துக் கொண்டிரந்த திலீபை கவனக்காது தனது தட்டுடன் ஜன்னலருகே சென்று மழையை வேடிக்கை பார்ப்பது போல் அமர்ந்து கொண்டாள் .கேலியுடன் தன்னை பார்த்த அம்மாவை முறைத்தான் திலீப் .

கம்பியாய் விழுந்த மழைத்துளியை பார்த்தபடி இருந்த அமுதா தான் வந்த விபரத்தை காயத்ரிக்கு சொல்ல வேண்டுமென்பது நினைவு வர தனது போனை தேடினாள் .அதனை காணவில்லை .எங்கே வைத்தேன் …? ஒரு வேளை வழியில் மிஸ் பண்ணி விட்டேனா …? யோசித்தாள்.

” அம்மா உங்கள் போன் குடுங்களேன் .என் போனை காணோம் .அங்கே காயத்ரி சித்தி வீட்டில் விட்டுட்டு வந்துட்டேன்னு நினைக்கிறேன் .அவுங்களுக்கு போன் பண்ணி கேட்கிறேன் ” அனுராதா நீட்டிய போனை தள்ளிக் கொண்டு தன் போனை நீட்டினான் திலீப் .

” இந்தாங்க இதில் பேசுங்க …”

” பரவாயில்லைங்க உங்க போன் ரொம்ப லேட்டஸ்ட் மாடலாக தெரியுது .அதை எனக்கு யூஸ் பண்ண தெரியாது ” புன்னகையோடு கூறிவிட்டு அனுராதாவின் போனை வாங்கிக் கொண்டு நகர்ந்தாள் ்

அனுராதாவின் கேலி பார்வையை மீண்டும் சந்திக்க விரும்பாது தலையை குனிந்து கொண்டு உள்ளே சென்றான்  திலீப் .

போனை கண்டுபிடிப்பதற்காக தனது போனிற்கே போன் பண்ண முடிவெடுத்து நம்பரை அழுத்தினாள் அமுதா .மணி ஒலித்து எதிர்முனை எடுத்து அமைதி காக்க , மெல்ல ஹலோ சொன்ன அமுதாவிற்கு பதில் ஹலோ சொன்னது….




அமுதாவிற்கு …திக்கென்றது . சந்தேகமின்றி அமிர்தனின் குரல் .
சந்தேகம் தெளிய மீண்டுமொரு முறை ஹலோ சொல்லிவிட்டு போனை காதோடு ஒட்டிப் பிடித்துக் கொண்டுகுரலை கவனித்தாள.

” எங்கே இருக்கிறாய் …? ” என்னவோ இவன்தான் போய் வான்னு அனுப்பி வைத்தது போல் எவ்வளவு இலகுவாக கேட்கிறான் …

உடனே போனை கட் பண்ணிய அமுதா எனது போன் இவன் கைகளுக்கு எப்படி போனது ..? குழம்ப தொடங்கினாள் .

What’s your Reaction?
+1
3
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!