Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று- 1

பத்மா கிரகதுரை

எழுதிய

கற்பூர பொம்மை ஒன்று

                                                                             1

இளஞ்சிங்கமாய் நீ நின்று 
இளவட்டகல் தூக்கிய பொழுதுகளின் கனத்தில் 
மஞ்சள் பூசிய காலை கன்னங்கள் 
கனிந்து குவிகின்றன.

காது மடல்களை உரசி சிவக்கடித்து காதுக்குள் நுழைந்து தலை வரை ஆணியடித்தது போல் இறங்கும் அந்த குளிர் அவனை பாதிக்கவில்லை .பைக்கின் ஆக்ஸிலேட்டரை திருகும் கைகளை விறைக்க வைக்கும் குளிருக்கும் எந்த பாதுகாப்பையும் அவன் எடுத்துக் கொள்ளவில்லை .இந்த குளிரெல்லாம் அவனுக்கு சாதாரணம் .இதை விட மிக அதிகமாக உடலை உறைந்து போக வைக்கும் குளிரிலெல்லாம் நாட்டின் எல்லையில் பணியாற்றியிருக்கிறான் .
இரவு முழுவதும் இமை மூடாமல் எல்லையை காத்திருந்திருக்கிறான் .காஷ்மீர் குளிரில் ௧உறைந்து  கிடந்தவனை இந்த குன்னூர் குளிர் என்ன செய்யும் …?

உயர்ந்து வளர்ந்து நின்றிருந்த அந்த இரும்பு கதவின் முன் அவன் பைக்கை நிறுத்தி இறங்கினான் .வாசலில் நின்ற செக்யூரிட்டியிடம் தனது கம்பெனி கார்டை காட்டினான் .கார்டை  செக் செய்து திருப்தியாகிவிட்டு அந்த செக்யூரிட்டி அந்த கதவிற்கான ரிமோட்டை அழுத்த , ஓசையின்றி கதவு சுவருக்குள் உள்வாங்கி திறந்த்து . மீண்டும் பைக்கில் ஏறி உள்ளே செல்ல …செல்ல அந்த மகா பெரிய அரண்மனை கண்ணில் விழுந்த்து .தனை மீறி அதன் அழகில் கண்களை விரித்தபடி போர்ட்டிகோவில் இருந்த காருக்கு பின்னால் பைக்கை நிறுத்தினான் .

” யோவ் அறிவிருக்கா உனக்கு …? யார் நீ …? இங்கே வந்து ஏன் பைக்கை நிறுத்துகறாய் …? உன் ஓட்டை வண்டியை தூக்கிட்டு அந்த பக்கம் போ ….”

பைக்கில் அமர்ந்தபடியே அந்த வீட்டின் பிரம்மாண்டத்தில் பார்வையை பதித்திருந்தவன் இந்த உதாசீனத்தில் கோபம் அடைந்தான் .

” ஏய் …மரியாதை .நான் யாராக இருந்தாலும் …எந்த இடத்திலும் எனக்கு மரியாதை முக்கியம் ….” இடுப்பில் கை வைத்து நிமிர்ந்து நின்று ஒரு அரசகுமரன் தோரணையில் பேசியவனை ஆவென பார்த்தவன் …பிறகு வாயை மூடிக்கொண்டு போலி பவ்யத்துடன் ….

” மன்னிச்சுங்க முதலாளி …நீங்க யாருன்னு எனக்கு தெரியாமல் போயிடுச்சுங்க .இப்போ செல்லுங்கங்க …எந்த நாட்டு ராசா நீங்க …? எந்த ராஜ்ஜியத்தை பரிபாலனம் பண்ண வந்திருக்கீங்க …? ” கிண்டலாக கேட்டான் .




வாய் மூடியிருந்த அவன் கைகளை எடுத்துவிட்டவன் ” இந்த அளவு மரியாதை தேவையில்லை .ஆனால் அளவான மரியாதை நிச்சயம் வேண்டும் ” என்றான் .

” அடிங் …என்னாய்யா கொழுப்பா …? நான் உன்னை கிண்டல் பண்ணினால் நீ என்னை காலை வாருகிறாயா …? ஐயாவை பார்க்கத்தானே வந்தாய் .பார்த்திடேறேன்யா .இன்னைக்கு நீ எப்படி ஐயாவை பார்க்கிறாய்னு நான் பார்த்திடுறேன் .நான் ஒரு வார்த்தை சொன்னால் நீ இந்த வாசப்படி மிதிக்க முடியாது . இந்த வீட்டில் என் சர்வீஸ் தெரியுமா …? இருபது வருசம் .அதனால் என் பேச்சுக்கு மறு பேச்சு ஐயா பேசமாட்டார் .வர்றியா …வச்சு பார்ப்போமா …? ” சண்டியர் தோரணையில் அவன் கை , கால்களை தட்ட ஆரம்பிக்க …

” டேய் அடங்குடா ….” அதட்டல் குரலுடன் வீட்டினுள்ளிருந்து ஒருவன் வெளியானான் .சபாரி சூட்டில் மிடுக்காக இருந்தான் .

” ஹலோ ….நீங்கள் B.T யிலிருந்துதானே வருகிறீர்கள் …? உங்கள் பெயர் ….? ” குலுக்குவதற்காக கை நீட்டியபடி கேட்டான் .

” ஆமாம் .வீரேந்தர் …நீங்கள் …? ” கை குலுக்கினான் .

” நான் ஸ்ரீநாத் .சண்முகபாண்டியன் சாரின் பி.ஏ ..இது சௌந்தர் .டிரைவர் ….” முதலில் கத்தியவனையும் சேர்த்தே அறிமுகப்படுத்தினான் .

” வணக்கம் …நான் இங்கே இருபது வருசம் …'” வந்திருப்பவன் ஏதோ முக்கியமானவன் போல என்றெண்ணி , அவனிடம் இந்த வீட்டுடனான தனது பாரம்பரியத்தை நிரூபிக்கும் அவசரத்தில் சௌந்தர் முதலிலிருந்து வர ஆரம்பிக்க …

” இவர் இருபது வருடம் இங்கே டிரைவராக இருக்கிறார் .இன்றோடு வேலையை விட்டு நிற்க போகிறார் அவரது இடத்தில் வேலை பார்க்கத்தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள் ….” ஸ்ரீநாத் நக்கலாக சௌந்தரை பார்த்தபடி வீரேந்தருக்கு விளக்கினான் .

இவனா….டிரைவரா …? ம் ….டிரைவரா இவன் …? இவனை ஆச்சரியமாக பார்ப்பதா…அலடசியமாக பார்ப்பதா …? சௌந்தர் குழம்ப ஆரம்பித்து தெளிவற்ற முடிவுடன் தலையை சொறிய ….

அவன் கைகளை இழுத்து பற்றி குலுக்கி ” உங்கள் வேலையை எனக்காக விட்டுக் கொடுத்ததற்கு நன்றி சௌந்தர் …” என்றான் வீரேந்தர் .

” ஓ…நன்றி …நீங்கள் டிரைவரா …? ஏன் வேறு வேலை ….” என்றவன் நிறுத்தி …” என் கையை விட்டுடுங்களேன் …” என்றான் கெஞ்சலாக .

இறுதியாக ஒரு அழுத்தத்தை அவன் கைகளுக்கு கொடுத்துவிட்டு தனது கைகளை விலக்கிக் கொண்ட வீரேந்தர் …” நான் காரை பார்க்கலாமா …? ” என்றான் .

” உங்களை பார்த்தால் டிரைவர் போல் தெரியலையே ….? ” ஸ்ரீநாத் உள்ளே போய்விட்டானா எனப் பார்த்துக்கொண்டு கேட்டான் சௌந்தர் .

” இந்த காரை பற்றி சொல்லுங்களேன் ..நான் ஓட்ட வேண்டுமே …”

” ஏன் சார் வேறு வேலை கிடைக்கலையா …? “

” அப்படியே உங்கள் ஐயாவை பற்றியும் சொன்னீர்களானால் நன்றாக இருக்கும் ….”

” உங்கள் தோரணையை பார்த்தால் டிரைவர் போல் தெரியவில்லை …”

” ம் …பரவாயில்லை காரை நன்றாக பராமரித்திருக்கிறீர்கள் ….ஒரு ரவுண்ட் ஓட்டிப் பார்க்கட்டுமா …? “

” இப்போது வேண்டாம் .ஐயா வருகிற நேரம் . காலையில் வீட்டை ஒரு ரவுண்டு வருவார் .அவர் வந்துவிட்டு உள்ளே குளிக்க போவார் .அப்போது ஓட்டி பார் …பாருங்க ….நீ …உன்…உங்களை எப்படி கூப்பிட …? மரியாதை தரவேண்டிய தோற்றத்திலிருக்கும் இவனை  டிரைவராக எப்படி நினைக்க …?

” நான் டிரைவர்தானே …உங்களை மாதிரியே நானும் தொழிலாளிதான் . என்னை உங்கள் சகாவாகவே நினைத்து கூப்பிடுங்கள் .பெயர் சொல்லி …” புன்னகைத்தான் .

” ம் …அப்படி கூப்பிடத்தான் யோசனையாக இருக்கிறது …” முணுமுணுத்தான் .

” ஏன் சௌந்தர் உங்கள் வேலையை எனக்கு கொடுத்திருக்கிறார்களே …என் மேல் கோபம் வரவில்லையா …? “

” எதற்கு கோபம் ..? மூன்று மாதங்கள் மட்டும்தானே .அந்த மூன்று மாதமும் எனக்கு சம்பளத்தோடு சேர்த்து லீவ் கொடுத்திருக்கிறாரே ஐயா …”

ஓ…சார் முன்யோசனையுடன்தான் எல்லாவற்றையும் செய்திருக்கிறார் …தனக்குள் தலையாட்டிக்கொண்டான் வீரேந்தர் .

” ஐயா ரொம்ப நல்லவர் தெரியுமா .்ஆனால் அதிக கண்டிப்பு . சிறு குறை கூட அவர் கண்களுக்கு தெரியக்கூடாது .இந்த கார் அவருக்கு மிகவும் விருப்பமானது .இதில் சின்ன கோடு விழுந்தால் கூட அவரால் தாங்க முடியாது .எப்போதும் கொஞ்சம் தூசி கூட இல்லாமல் பளபளன்னு துடைத்து தயாராக வைத்திருக்க வேண்டும் .இனி இதெல்லாம் உன் பொறுப்புதான் .இந்தா …” கார் சாவியை நீட்டினான் .

” ஜாக்கிரதை .ஐயாவிற்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசிவிடாதே .காரில் போகும் போது வரும் போது அவருடைய விசயங்களில் தலையிடாதே .அவர் சொல்லாத்து எதையும் செய்யாதே …அவர் மனதறிந்து நடந்து கொள் …”

” ம் …என்ன சௌந்தர் பெரிய பிரசங்கமே நடத்துகிறீர்களே …? “

” நீ …நீங்கள் வட நாட்டுக்காரரா …? ” சௌந்தரின் கூர்மையை மெச்சினான் .

” எதை வைத்து கேட்கிறீர்கள் …? “

” உங்கள் தமிழ் வித்தியாசமாக இருக்கிறது .இந்தி டப்பிங் சீரியலில் பேசுவது போல் ஒரு மாதிரி பேசுகிறீர்கள் .ஆளும் பார்ப்பதற்கு ஹிந்திகார்ர் போல் தெரிகிறீர்கள் ….”

” இல்லை .நான் தமிழன்தான் .ஆனால் சின்ன வயதிலேயே குடும்பத்தோடு டில்லியில் செட்டிலாகி விட்டோம் .இப்போது வரை என் வேலை கூட அங்கேதான் ..அதனால் என் தமிழ் இந்தி கலந்து இருக்கும் ….”

” ம் …அங்கே நிச்சயம் நல்ல வேலையில்தான் இருந்திருப்பீர்கள் .உங்கள் தோற்றமே அதை சொல்கிறது .பிறகு இங்கே வந்து …இந்த வேலையை ஏன் ….? “

வீரேந்தர் பதிலின்றி சௌந்தரை பார்த்தபடியே இருக்க …

” எனக்கென்ன …என்னவோ பண்ணிக்கொள்ளுங்கள் .அதிசயமாக எனக்கு இந்த லீவ் கிடைத்திருக்கிறது .நான் அதனை என் குடும்பத்தோடு கொண்டாட போகிறேன் …” தோள்களை குலுக்கிக் கொண்டான் .





” வாழ்த்துக்கள் .போய் வாருங்கள் …” குலுக்குவதற்காக நீண்ட வீரேந்தரின் கைகளை பார்க்காத்து போல் தவிர்த்து விட்டு நடந்தான் சௌந்தர் .

ஏற்கெனவே பளபளவென கறுப்பாய் மின்னிக் கொண்டிருந்த அந்த காரை மீண்டும் அழுத்தி துடைத்து பாலீஷ் ஏற்றினான் வீரேந்தர் .சண்முகபாண்டியனிடம் நல்ல பெயர் வாங்கிவிடும் துடிப்பு அந்த துடைப்பில் தெரிந்த்து .

ஸ்ரீநாத்துடன் மெல்லிய குரலில் பேசியபடி தன் பின்னால் வந்த அந்த தோல் செருப்புகளின் சத்தத்தை உணர்ந்தவனின் மனதில் காரணமற்ற படபடப்பு உண்டானது .ஏனோ அவரை நேரில் சந்திக்கும் தைரியம் தனக்கில்லாத்து போல் உணர்ந்தான் .

” இவர்தான் உங்கள் புது டிரைவர் சார் ….” ஸ்ரீநாத் அறிமுகம் செய்ய …இனியும் முதுகு காட்டமுடியாது என உணர்ந்து திரும்பி அவரை பார்த்து கை கூப்பி வணங்கினான் .

அவர் …ஓங்கி வளர்ந்து ஆஜானுபாகுவாக தெரிந்தார் .தலை முடிகளெல்லாம் சுத்தமாக வெண்மையாகியிருந்தாலும் அடர்த்தி குறையாமல் தலை முழுவதும் நிரம்பியிருந்த்து .கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு அவனை தீர்க்கமாக பார்த்த பார்வையில் …இவரிடம் எந்த ரகசியமும் செல்லுபடியாகாது என உணர்ந்தான் வீரேந்தர்




 

What’s your Reaction?
+1
21
+1
17
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!