Samayalarai

வெங்காயத் தொக்கு! இட்லி, தோசை, தயிர் சாதத்துக்கு பெஸ்ட் காம்போ!

இட்லி தோசை இவற்றிற்கெல்லாம் பல வகையான சைடு டிஷ் இருந்தாலும் வெங்காயத்தை வைத்து செய்யப்படும் வெங்காய தொக்கு நல்ல ருசியான ஒரு காம்பினேஷன் தான். ஆனால் என்ன? இதில் பலருக்கும் வெங்காயத்தின் வாடையை பிடிக்காது. இதனால் வெங்காய சட்னி, தொக்கு என்றாலே அலறி அடித்து ஓடுவார்கள். அப்படியானவர்கள் கூட இந்த முறையில் தொக்கு செய்து கொடுத்தா போதும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அது மட்டும் இன்றி ஒரு முறை இந்த சட்னி செய்து வைத்து ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாது வாங்க இப்ப இந்த வெங்காய தொக்கு ரெசிபி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

Small onion thokku recipe : சின்ன வெங்காய தொக்கு - Tamil BoldSky




வெங்காயத் தொக்கு செய்முறை விளக்கம் இந்த இந்தத் தொக்கு செய்ய முதலில் அரை கிலோ சின்ன வெங்காயத்தை தோலுரித்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் இட்லி பாத்திரம் வைத்து கொஞ்சமாக  தண்ணீர் ஊற்றிய பிறகு இட்லி தட்டு வைத்து அதன் மேல் வாழை வேண்டும் வைத்துக் கொள்ளுங்கள் இல்லை என்றால் அப்படியே கூட வெங்காயத்தை வைத்து மூடி போட்டு இரண்டு நிமிடம் வரை வேக விட்டு பிறகு வெங்காயத்தை எடுத்து தனியாக ஆற வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அடுப்பில் பேன் வைத்து சூடான உடன் ஒரு டேபிள் ஸ்பூன் தனியா, ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் கடுகு இவை அனைத்தையும் சேர்த்து மிதமான தீயில் வாசம் வரும் வரை வறுக்க வேண்டும்.

அதன் பிறகு ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து மீண்டும் நன்றாக வறுத்து நன்றாக நிறம் மாறி வந்தவுடன் இதை தனியாக ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு மிக்ஸர் ஜாரில் ஏற்கனவே நாம் வேக வைத்த வெங்காயத்தை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் இன்னொரு ஜாரில் இந்த வறுத்த மசாலாக்களை சேர்த்து பிறகு இரண்டு டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள், அரை ஸ்பூன் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் ஃபைன் பவுடராக அரைத்து எடுத்து விடுங்கள்.




இப்பொழுது அடுப்பில் அடித்தனமான ஒரு கடாய் வைத்து மூன்று டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானவுடன் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்த பிறகு ஏற்கனவே அரைத்து வைத்த வெங்காய விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் வரை நன்றாக வதக்கி விடுங்கள். அதன் பிறகு அரைத்து வைத்த மசாலாவை இதில் சேர்த்து மீண்டும் கைவிடாமல் நன்றாக கலந்து கொண்டே இருங்கள். இப்பொழுது இந்த மசாலாவில் இருக்கும் பச்சை வாடை அனைத்தும் போகும் வரை வதக்க வேண்டும்.

இவையெல்லாம் நன்றாக வதங்கிய பிறகு மூன்று எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு மட்டும் எடுத்து அதன் சாரி இந்த வெங்காய தொக்கு ஊற்றி மீண்டும் ஒருமுறை நன்றாக கலந்து விடுங்கள். வெங்காய தொக்கிலிருந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் ஒரு டேபிள் ஸ்பூன் வெல்லத்தை பொடித்து சேர்த்த பிறகு மீண்டும் ஒரு முறை நன்றாக கலந்து தொக்கு சுருண்டு வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். சுவையான வெங்காய தொக்கு அட்டகாசமாக தயாராகி விட்டது.

இந்த முறையில் வெங்காயத் தொக்கை செய்து பாருங்கள் சுவை வித்தியாசமாக இருப்பதுடன் வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி வாங்கி சாப்பிடுவார்கள். ஒருமாதம்  ஆனாலும் கெட்டுப் போகாத இந்த வெங்காய தொக்கை நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.




 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!