தோட்டக் கலை

வீட்டிற்குள்ளேயே தக்காளி செடி வளர்ப்பது எப்படி.?

நாம் எந்த உணவும் செய்தாலும் வெங்காயம், தக்காளி இல்லாமல் செய்ய முடியாது. அந்த அளவிற்கு வெங்காயம் தக்காளி முக்கியமான ஒன்றாக இருக்கிறது. வெங்காயம் கூட வாங்கி வைத்தால் நாள்பட இருக்கும். ஆனால் தக்காளியை மொத்தமாக வாங்கி வைத்தாலும் கெட்டு போகிவிடும்.

அதனால் வாரத்தில் ஒரு முறை தக்காளியை வாங்குவோம். பெரும்பாலும் தக்காளியை கடையில் வாங்கி தான் பயன்படுத்துவார்கள். கடையில் விற்கும் தக்காளியில் கெமிக்கல் கலந்து பழுக்கவைத்திருப்பார்கள். வீட்டிலேயே  ஆரோக்கியமான முறையில் தக்காளி செடியை வளர்த்து பயன்படுத்தலாம். சில பேர் வீட்டில் வெளிப்புறம் இடம் இல்லை நான் எப்படி வளர்ப்பது என்று நினைப்பார்கள். அவர்களுக்காக இந்த பதிவில் வீட்டிற்குள்ளேயே தக்காளி செடி வளர்ப்பு பற்றி அறிந்து கொள்வோம்.




வீட்டிற்குள்ளேயே தக்காளி செடி வளர்க்கும் முறை:

வீட்டிற்குள்ளேயே தக்காளி செடியை வளர்ப்பது எப்படி வளர்ப்பது வெயில் வேண்டுமே செடி வளர்வதற்கு என்று பலரும் யோசிப்பது புரிகிறது.  ரொம்ப யோசிக்காதீங்க ஈசியான முறையில் வளர்க்கலாம் அது எப்படி என்று அறிந்து கொள்வோம்.

மண்:

முதலில் உங்கள் வீட்டில் உள்ள எந்த மண்ணாக இருந்தாலும் எடுத்து கொள்ளவும். இதனை ஒரு பக்கெட் அல்லது வாளியில் எடுத்து 3/4 அளவு நிரப்பி கொள்ளவும்.

அடுத்து இரண்டு தக்காளியை எடுத்து கொள்ள வேண்டும. இதனை வட்ட வடிவில் நறுக்கி கொள்ள வேண்டும். இந்த நறுக்கிய தக்காளியை நாம் ரெடி செய்து வைத்துள்ள மண்ணில் பதிக்க வேண்டும்.

வீட்டிற்குள்ளேயே தக்காளி வளர்ப்பது எப்படி

இடம் விட்டு பதிய வேண்டும். அதற்காக உள்ளாரே குழி தோண்டி வைக்க தேவையில்லை, மேல் புறமாகவே வைக்கலாம். பின் அதன் மேல் மண்ணை சேர்த்து மூட வேண்டும். நீங்கள் பதித்த தக்காளி தெரியாத அளவிற்கு மண்ணை சேர்த்து மூடு கொள்ள வேண்டும்.

தண்ணீர்:

பின் அதன் மேல் ஈர்ப்பததிற்காக தண்ணீரை ஊற்ற வேண்டும். இதனை எடுத்து சென்று வீட்டில் ஜன்னல் ஓரமாக வைக்க வேண்டும். ஜன்னல் ஓரம் வைப்பதன் மூலம் காலை மற்றும் மாலை நேரத்தில் வெயில் படும், அதனால் தான் ஜன்னல் ஓரத்தில் வைக்க சொல்கின்றோம்.




வீட்டிற்குள்ளேயே தக்காளி வளர்ப்பது எப்படி

நீங்கள் இப்படி வைத்து ஒரு வாரம் கழித்து பார்த்தால் செடிகள் முளைத்து வந்திருக்கும். முக்கியமாக தண்ணீர் ஊற்ற மறந்து விடாதீர்கள். அதற்காக தண்ணீர் தேங்கி நிற்பது போல் ஊற்றாமல் ஓரளவிற்கு ஊற்ற வேண்டும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!