Cinema Entertainment

முத்துவின் கோபத்தை தூண்டிம் சுருதி அம்மா.. சிறகடிக்கும் ஆசை சீரியல்

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜ் முதல் நாள் பிசினஸ் பண்ணி ரோகினியுடன் வீட்டிற்கு வருகிறார். வந்ததும் விஜயா அவர்களை வாசலில் நிற்க வைத்து ஆரத்தி எடுக்கிறார். இதை பார்த்து வழக்கம் போல் முத்து கிண்டல் அடித்து நக்கல் பண்ணுகிறார். ஆனாலும் விஜயா கண்டுகொள்ளாமல் மனோஜ் பெரியதாக சாதித்து விட்ட போது போல் பெருமை பீத்தி கொள்கிறார்.




அதற்கேற்ற மாதிரி மனோஜும் ரொம்பவே சோர்வாக இருக்கிறது என்று ஒரு தொழிலதிபர் போல் ஓவராக பில்டப் கொடுக்கிறார். அத்துடன் நேரடியாக ரூமில் போய் படுத்து தூங்குகிறார். ஆனால் முத்து மீனா தான் இந்த வாரம் ரூம்குள் தூங்குவதற்கு பாட்டி சொல்லி இருக்கிறார். அதன்படி முத்து ரூமுக்கு வெளியே நின்று கத்துகிறார். அப்பொழுது உள்ளே இருந்த ரோகிணி நாம் ஏன் வெளியே போய் தூங்கணும்.

ஓவர் கெத்து காட்டும் மனோஜ்

அதெல்லாம் போக வேண்டாம் உள்ளே தூங்கலாம் என்று முடிவெடுத்து விட்டார். அதன்படி வெளியே வந்த ரோகினி முத்துவிடம் மனோஜ் ரொம்ப அசதியாக தூங்குகிறார். அதனால் எங்களால் வெளியே படுக்க முடியாது என்று காரராக சொல்கிறார். இதைக் கேட்டு பிரச்சினை பண்ணும் முத்துவிடம் அண்ணாமலை அவனை விட நீங்க எங்க ரூம்ல வந்து தூங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்.

இவர் இப்படி சொன்னதை பார்த்து விஜயா அப்படியே பயத்துடன் நிற்கிறார். எங்கே நம் ரூம் நம்மை விட்டுப் போய் விடுமோ என்று பதட்டம் அடைகிறார். ஆனால் முத்து மீனா, அதெல்லாம் வேண்டாம் அப்பா நீங்க உள்ள தூங்கிக் கொள்ளுங்கள். நாங்கள் இருவரும் மொட்டை மாடியில் படுத்து கொள்கிறோம் என்று மாடிக்கு போய் விடுகிறார்கள்.




இதுதான் இவர்களுக்கு விதித்த விதி போல் புலம்பி கொண்டு இருக்கிறார் முத்து. உடனே மீனா இருப்பதிலேயே ரொம்பவே தியாகி செம்மல் மாதிரி இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை. நாம் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளலாம் என்று சொல்கிறார். எல்லாத்துக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டிருந்தால் கடைசி வரை இப்படித்தான் இவர்களின் நிலைமை இருக்கும்.

இதனைத் தொடர்ந்து சுருதி அம்மா மனோஜ் கடையில் வாங்கின ஏசியை முத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார். இதை வெளியில் இருந்து பார்த்த முத்து, ஸ்ருதி அம்மாவிற்கு ஃபோன் பண்ணி எங்களால் வாங்க முடியும். எங்களுக்கு தேவை என்றால் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்களுடைய உதவியும் அனுசரணையும் எங்களுக்கு தேவையில்லை என்று ஸ்ருதி அம்மாவிடம் கரராக பேசுகிறார்.

அத்துடன் கொண்டு வந்த ஏசியையும் திருப்பி அனுப்பி விடுகிறார். சுருதி அம்மாவுக்கு இதுவே ஒரு பெரிய வேலையா போச்சு. முத்துவை சீண்டிப் பார்த்து அதன் மூலம் பிரச்சினை வெடிக்க வேண்டும் என்று அல்பத்தனமாக நினைக்கிறார். ஆனால் முத்து பண்ணினதில் எந்த தவறும் இல்லை என்று குடும்பத்தில் இருப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். இந்த விஜயாவை தவிர, எப்பொழுதுதான் முத்துவை தன் பிள்ளை போல் பாசம் காட்டப் போகிறாரோ என்பது தெரியவில்லை.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!