Cinema Entertainment

நடிகை மனோரமா-13

ஆச்சி நடித்ததில் எல்லோருக்கும் பிடித்த படம் ‘தில்லானா மோகனாம்பாள்’. ஆச்சிக்கே பிடித்தது ‘சின்னக் கவுண்டர்’, ‘நடிகன்’. “ஒரு துளி விரசம் இல்லாமல் ‘நடிகன்’ படத்தில் நடிச்சது எனக்குப் பெருமையான விஷயம்” என்பார்!

பேச்சில் புலி. அவ்வளவு விவரமாக எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருப்பார். வார இதழ்கள் ஒன்றுவிடாமல் படித்துவிடுவார். படித்தது மூன்றாம் வகுப்பு வரைதான். ஆனால், ஆச்சிக்குத் தெரியாதது எதுவும் இல்லை!

மனச் சோர்வு இருந்தால்கூட பட்டுப் புடவை, திருநீறு மணக்கும் நெற்றி, அகலப் பொட்டுடன் மங்களகரமாகத்தான் வெளியே கிளம்புவார்.

அரசியல் சார்பு இல்லை என்பதால் கருணாநிதி, ஜெயலலிதா இருவரிடமும் அன்பு பாராட்டுவார்!

‘ஆச்சி இன்டர்நேஷனல்’, ‘அல்லி ராஜ்யம்’, ‘காட்டுப்பட்டிச் சத்திரம்’ என சின்னத்திரை தொடர்களிலும் வெற்றிவலம் வந்தவர்!

இவரது நடிப்புத் திறமை, நாடகக் கலைக்கான பங்களிப்பைப் பாராட்டி அண்ணா, நெடுஞ்செழியன், கருணாநிதி, அன்பழகன், ஈ.வி.கே.சம்பத், கண்ணதாசன் போன்றோர் பேசியதை இன்னமும் மனதில் சேமித்துவைத்துள்ளார் ஆச்சி!

‘வணக்கம், ஆச்சிதாங்க பேசுறேன். பேசலாமா’ என முன் அனுமதி வாங்கிப் பேசுகிற நயத்தக்க நாகரிகம் ஆச்சி ஸ்பெஷல். சொல்ல வந்ததை ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிடுவார்!

மஞ்சள் குங்குமம்’ என்ற படத்தில் நடிக்கும் போது, மனோரமாவை கட்டுவிரியன்’ பாம்பு கடித்து விட்டது. சிகிச்சைக்கு பின் மனோரமா உயிர் பிழைத்தார்.




நடிகை மனோரமா குறித்தும் அந்த பேட்டியில் வெண்ணிற ஆடை மூர்த்தி பேசியிருந்தார். அதில் மனோரமா போல ஒருத்தங்களை நான் பார்த்ததே கிடையாது. அவங்க ரொம்ப பாசமானவங்க. நான் அவங்க கூட நிறைய முறை வேலை பார்த்து இருக்கேன் என்னை எல்லா இடங்களிலும் தம்பி என்று தான் கூப்பிடுவார். ஒருமுறை நான் சூட்டிங் ஸ்பாட்டில் போய் இருந்தபோது அவங்க இருந்ததை கவனிக்கல… எல்லாரிடமும் பேசிக் கொண்டிருந்தேன்.

அப்போ என்னை கூப்பிட்ட மனோரமா நீ என்னை மட்டும் ஒதுக்கி வச்சுட்டியா? அப்போ என்னை பத்தி ஏதோ உனக்கு கோபம் இருக்கு.. அதனால தான் நீ என்கிட்ட பேசல. நீ என்னைக்குமே என்னுடைய தம்பி தான். நீ என்னிடம் பேசலைன்னா எனக்கு கஷ்டமா இருக்கு என்று பேசிக் கொண்டிருக்கும்போது கண்கலங்கி விட்டார். அவர் அழுவதை பார்த்து நான் பதறிப் போய் விட்டேன். அதுபோல அவர் நடிப்பிலும் ரொம்பவே கெட்டிக்காரர்.

அவர் நடித்த காட்சிகள் அவருக்கு பிடிக்கும் வரை இயக்குனரிடம் இன்னொரு முறை நான் நடிக்கவா என்று கெஞ்சி கொண்டிருப்பார். நம்மிடம் யாராவது ஒரு காட்சி நடித்தது போதும் என்று சொன்னால் விட்டுவிடுவோம். ஆனால் மனோரமா அவருக்கு திருப்தி ஆகுற வரைக்கும் அதே காட்சியில் மூன்று முறை நான்கு முறை கூட நடித்து சரி பண்ணுவார் என்று வெண்ணிற ஆடை மூர்த்தி பேசியிருக்கிறார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!