Cinema Entertainment

திக்கி திணறும் ஆனந்தி-சிங்க பெண்ணே சீரியல் அப்டேட்

சன் டிவியின் சிங்க பெண்ணே சீரியலில் நான்கு முனைக் காதல் போட்டி பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. போலியான அழகனை நம்பி ஏமாறாதே என எவ்வளவோ தடவை அன்பு சொன்னாலும் அதை ஆனந்தி கேட்பதாக இல்லை.

சொல்லப்போனால் அன்புவை பார்த்தாலே ஆனந்தி எரிந்து விழுந்து கொண்டிருக்கிறாள். நேற்றைய எபிசோடில் நந்தா ஆனந்தியை திரௌபதி அம்மன் கோவிலுக்கு வர சொல்லி இருந்தான். அங்கே ஏற்கனவே செட் பண்ண மாதிரி தன் தலையில் 108 தேங்காவை உடைத்து ஆனந்தியின் அக்காவுக்கு கல்யாணம் ஆக நேர்த்திக்கடன் செய்வதாக பயங்கரமாக சீன் போட்டான்.

ஆனந்தி அதை உண்மையாகவே நம்பி. நந்தா மீது பரிதாபப்பட்டால். இதுதான் சரியான சமயம் என்று நினைத்த நந்தா தனக்கு வீட்டில் பெண் பார்த்து வருவதாகவும், கல்யாணத்திற்கு வற்புறுத்துவதாகவும் ஆனந்தியிடம் சொன்னான்.




நான்கு முனை காதலில் ஜெயிக்கப்போவது யார்?

நாம் இருவரும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக் கொள்ளலாம். நீ ஹாஸ்டலுக்கு போய்விடு நான் என் வீட்டிற்கு போய் விடுகிறேன். என்னைக்காவது பிரச்சனை என்று வரும் போது நாம் திருமணம் செய்து கொண்டதை வீட்டில் சொல்லலாம் என ஆனந்த இடம் சொன்னான். ஆனந்தி நந்தாவின் வலையில் சிக்குவதா இல்லை. மேலும் அழகனுடனான தன்னுடைய ஒரு உறவை காதலாகவும் உறுதிப்படுத்தவில்லை.

இது நந்தாவுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. அடுத்து ஆனந்தியை என்ன சொல்லி சிக்க வைக்கலாம் என ஒரு பக்கம் நந்தா யோசித்துக் கொண்டிருக்கிறான். அதே நேரத்தில் மகேஷ் தன்னுடைய அப்பா அம்மா கல்யாண நாள் கொண்டாட்டத்திற்கு அழகான புடவை ஒன்றை வாங்கி அதை ஆனந்திக்கு கொடுக்கப் போவதாக மித்ராவிடம் சொல்கிறான்.




மகேஷின் இந்த செயலை பார்த்து மித்ராவுக்கு கதிகலங்கி போய்விட்டது. அந்த கல்யாண நாள் பார்ட்டி வருவதற்கு முன்பே மகேஷ் ஆனந்தியை வெறுத்து ஒதுக்கும் படி ஏதாவது ஒரு திட்டம் கண்டிப்பாக போடுகிறேன் என மனதுக்குள்ளேயே உறுதியாக சொல்லிவிட்டு கிளம்புகிறாள்.

இந்த நான்கு முனை காதல் போட்டியில் இறுதியில் அன்பு ஜெயிப்பான் என்பது ஓரளவுக்கு தெரிந்தாலும் இடையில் நடக்கும் இந்த நாடகங்களை பார்க்கும் பொழுது வெறுப்பாகத்தான் இருக்கிறது. அதிலும் ஆனந்தியை அவமானப்படுத்த மித்ரா அடுத்து என்ன செய்வான் என்று சிங்க பெண்ணே சீரியல் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!