Beauty Tips

தலை முடிக்கு டை அடிக்கும் போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்..!

இன்றைய நாட்களில் இளம் தலைமுறையினருக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது இளநரை. இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல், வயதுக்குவராத சிறுவர், சிறுமிகளுக்கும் இளநரை பெரும் பிரச்சனையாக இருக்கிறது.




இளநரையை மறைப்பதற்காக பல வண்ணங்களை பூசிக் கொள்ள இளைஞர்களும், இளம்பெண்களும் விரும்புகிறார்கள் என்றால், சற்று வயதானவர்களும் டை அடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். முன்பு சலூன் அல்லது பியூட்டி பார்லர்களுக்கு சென்று டை அடித்தவர்கள், கொரோனா காலத்திற்கு பின்பு வீட்டிலேயே டை அடிக்கத் தொடங்கிவிட்டனர்.

அந்த வகையில், இயற்கை மற்றும் செயற்கை என இரண்டு விதங்களில் கிடைக்கும் ஹேர் டைகளை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். இயற்கை ஹேர் டை அனைவருக்கும் சேர்ந்துவிடும் என்றாலும், செயற்கை ஹேர் டை ஒரு சிலருக்கு அலர்ஜியை கொடுக்கும்.




எனவே அவர்கள் முதலில் காதோரம் அல்லது கை முடிகளில் சிறிதளவு கலந்து தேய்ந்து அரிப்பு, நமைச்சல் அல்லது எரிச்சல் என ஏதாவது இருக்கிறதா என்பதை சோதித்து பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி எதுவும் இல்லை என்றால் மட்டுமே தலை முழுவதும் டை பயன்படுத்த வேண்டும். மேலும், தலைக்கு அடிக்கும்போது என்ன வண்ணம் கிடைக்கும் என்பதை அறியவும் இந்த முறையை பயன்படுத்தலாம்.

வீட்டில் இருந்தே டை அடிக்கும்போது உச்சந்தலை மற்றும் முடிகளில் மட்டுமே படும்வகையில் டை அடிக்க வேண்டும். முகம் மற்றும் புருவத்தில் சாயம் தெறிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் முகம் கருத்துப் போவதோடு, புருவங்களும் நரைக்கத் தொடங்கிவிடும்.




எனவே, தலைக்கு டை அடிப்பதற்கு முன்பு எங்கெல்லாம் டை படக்கூடாது என நினைக்கிறோமோ அங்கெல்லாம் பெட்ரோலியம் ஜெல்லி அல்லது தேங்காய் எண்ணெயை சிறிது தடவிக்கொண்டு டை அடிக்க வேண்டும். அதையும் மீறி முகம் அல்லது வேறு இடங்களில் கறை படிந்துவிட்டால், பருத்தி துணியில் சிறிது ஆல்கஹாலை நனைத்து தேய்த்தால் கறை அகன்றுவிடும்.

டை அடித்தபிறகு நீண்ட நேரம் காயவிட்டால் நன்றாக ஒட்டி, நீண்ட நாட்களுக்கு வரும் என்பது பலரின் நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால், அவ்வாறு நீண்ட நேரம் விடுவது பொதுவாக அனைவரும் செய்யும் தவறாகும். அவ்வாறு செய்வது நாளடைவில் உச்சந்தலையில் எரிச்சலை ஏற்படுத்துவதோடு, கொப்புளங்களையும் ஏற்படுத்தும்.

எனவே, முடியை கருமையாக மாற்ற அதிகபட்சம் 30 நிமிடங்கள் வரை தான் டையை வைத்திருக்க வேண்டும். ஒரு சில டைகளுக்கு 15 நிமிடங்கள் மட்டுமே போதுமானது. எனவே, ஒவ்வொரு டை-க்கும் பரிந்துரைக்கப்பட்ட நேரத்திலேயே கழுவிவிடுவது மிகவும் நல்லது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!