lifestyles

உங்கள் குழந்தைகளிடம் தினசரி கேட்க வேண்டிய 5 கேள்விகள்..!

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுடனான பிணைப்பு மற்றும் உறவை வலுவாக்க தினசரி முறையான தகவல் தொடர்பு முக்கியம். உங்களது குழந்தை பள்ளி செல்லும் பிள்ளை என்றால் அவர்களின் வயது மற்றும் தனிப்பட்ட விருப்பங்களைப் பொறுத்து நீங்கள் சில கேள்விகளை அவ்வப்போது கேட்பது உங்கள் இருவருக்குமிடையேயான உறவை மேலும் வலுவாக்கும்.

ஏற்கனவே குறிப்பிட்டதை போல குழந்தைகளின் வயதை பொறுத்து பெற்றோர்கள் கேட்கும் கேள்விகள் மாறுபடலாம். எனினும் தங்கள் குழந்தைகளிடம் பெற்றோர்கள் தினசரி கேட்க கூடிய வகையில் இருக்கும் ஐந்து பொதுவான கேள்விகளை பற்றி இங்கே பார்க்கலாம். இது அவர்களின் அன்றைய தினம் எப்படி சென்றது, அவர்களின் அனுபவங்கள் என்ன போன்ற முக்கிய விஷயங்களை அறிந்து கொள்ள பெற்றோர்களுக்கு உதவுவதோடு, நம் மீது பெற்றோர் மிகுந்த அக்கறை வைத்திருக்கிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்ளவும் உதவுகிறது.




தவிர நீங்கள் தினசரி அவர்களிடம் கேட்கும் சில கேள்விகள் உங்கள் குழந்தைகள் அவர்கள் சந்திக்கும் அன்றாட அனுபவங்கள் மற்றும் நடவடிக்கைகள், உணர்ச்சிகள் மற்றும் அவர்கள் எதிர்கொண்ட சவால்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள உதவுகிறது.

இன்று உனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய விஷயம் எது.? அன்றைய தினம் அவர்களுக்கு பிடித்த மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய தருணம் பற்றி கேட்பது அவர்களுக்குள் உற்சாகம், புன்னகை மற்றும் ஒரு சிறிய குறும்புத்தனம் போன்ற எதிர்வினையோடு உங்களிடம் அவர்களின் அற்புத தருணங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்த கூடும்.

உன்னை இன்று மகிழ்ச்சியாக சிரிக்க வைத்த விஷயம் எது? குழந்தைகளின் ஒரு புன்னகை ஆயிரம் உற்சாக வார்த்தைகளுக்கு சமமான மதிப்புள்ளது. எனவே அவர்களின் அந்த முத்து சிரிப்பிற்கு காரமாக இருந்த விஷ்யங்களை பற்றி கேட்டு தெரிந்து கொள்ளலாமே..! அன்றைய நாளில் உங்கள் குழந்தையை சிரிக்க வைத்த விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்வதன் மூலம், அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்திய விஷயத்தை நீங்கள் அறிந்து கொள்ளலாம். அது நண்பர்களுடன் இருக்கும் நேரத்தில் நிகழ்ந்த நகைச்சுவையாக இருந்தாலும் அல்லது பஞ்சுபோன்ற நாய்க்குட்டியை பார்த்து உற்சாகத்தில் மகிழ்ந்து சிரித்ததாக இருந்தாலும் சரி, அன்றைய நாளில் அவர்கள் எதிர்கொண்ட நல்ல அனுபவங்களை கேட்பதன் மூலம் அவர்களின் மனதை கவரலாம்.

இன்று ஏதாவது புதிய விஷயங்களை கற்று கொண்டாயா.? நாம் தூங்கி எழுந்த பின் கிடைக்கும் ஒவ்வொரு நாளுமே நமக்கு புதிதாக பல விஷயங்களை கற்று கொள்ளும் வாய்ப்புகளை தருகிறது, இதற்கு உங்கள் குழந்தையும் விதிவிலக்கல்ல. அந்த வகையில் அவர்கள் இன்று புதிதாக கற்று கொண்ட விஷயங்கள் அல்லது அனுபவங்கள், வார்த்தைகள் பற்றி நீங்கள் கேட்டு தெரிந்து கொள்வதன் மூலம், நீங்கள் அவர்களின் கற்றல் ஆர்வத்தை தூண்டுகிறீர்கள்.




இன்று நீ எப்படி மற்றவர்களுக்கு உதவியாக இருந்தாய் அல்லது உதவி செய்தாய்.? கருணை, இரக்கம் என்பது நம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய குணம். வளரும் குழந்தைகளுக்கு இந்த நற்குணங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். பிறருக்கு உதவுவது பற்றிய கற்பித்தலை உங்கள் குழந்தைக்கு பயிற்சி அளிப்பது சிறந்தது. அன்றைய தினம் அவர்கள் ஒருவருக்கு எப்படி உதவினார்கள் என்று கேட்பதன் மூலம், அவர்களின் இரக்க குணம் மற்றும் பச்சாதாப செயல்களில் நீங்கள் கவனம் செலுத்தலாம்.

தேவைப்படும் நண்பருக்கு சிறிதாக இருந்தாலும் கூட உதவியது, அழுத அல்லது சோகமாக இருந்த உடன்பிறந்தவரை ஆறுதல்படுத்தியது அல்லது அவர்களுக்கு பிடித்தமான சிற்றுண்டியை பிறரோடு பகிர்ந்து சாப்பிட்டது போன்ற சிறிய விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டால் கூட அவர்களின் உதவும் குணத்தை ஊக்கப்படுத்த மறக்காதீர்கள்.

இன்று உனக்கு புதிதாக நண்பர்கள் யாரேனும் கிடைத்தார்களா.? நட்புக்கு எல்லையே இல்லை.! அன்றைய தினம் அவர்களுக்கு யாரேனும் புதிய நம்பர்கள் கிடைத்தார்களா என விசாரிப்பதன் மூலம் அவர்களுக்கு நட்பின் முக்கியத்துவத்தை உணர்த்த முடியும். விளையாட்டுக்காக அணி சேர்ந்ததாக இருக்கட்டும் அல்லது சக பள்ளி அல்லது வகுப்பு தோழனிடம் நன்கு பழகியதாக இருக்கட்டும் உங்கள் கண்களுக்கு முன்பாக அவர்கள் ஏற்படுத்தி கொள்ளும் புதிய மற்றும் நல்ல நட்பை ஊக்குவிக்கவும்.




What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!