Cinema Entertainment

ஈஸ்வரி, ராதிகா மோதல்.. பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா உங்க அம்மா நாளைக்கே இங்க இருந்து போய் ஆகணும் என்று சொல்ல கோபி அதெல்லாம் முடியாது.. எங்க அம்மா என் கூட இந்த வீட்டில் தான் இருப்பாங்க என்று சொல்கிறார்.

கோபி மற்றும் ராதிகா என இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது கமலா சூட்கேஸிடன் வந்து இனிமே நான் இருக்க மாட்டேன். நான் சந்துரு வீட்டுக்கு கிளம்புறேன் என்று சொல்ல ராதிகா நீ ஏமா போற நீ என்கூடவே இரு நீயும் போயிட்டா நான் ரொம்ப கஷ்டப்படுவேன் என்று தடுத்து நிறுத்துகிறார்.




கமலா இவங்க அம்மாவுக்கு தான் நான் இந்த வீட்ல இருக்கிறது குடிக்க மாட்டுதே என்று சொல்கிறார். கோபி நீங்க என்ன பண்ணாலும் எங்க அம்மா என்கூட தான் இருப்பாங்க என்று சொல்லி வெளியே வருகிறார்.

பிறகு ஈஸ்வரி ரூமுக்குச் செல்ல ஈஸ்வரி உன் பொண்டாட்டி நான் இந்த வீட்ல இருக்க கூடாதுன்னு சொல்றா, நான் எங்கேயாவது போயிடுறேன் என்று அழுது புலம்புகிறார். கோபி நீங்க என்கூட தான் இருக்கணும் என்ன பிரச்சனை நடந்தாலும் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்கிறார்.

அதேபோல் மறுபக்கம் கமலா கால் வலி என்று சொல்ல ராதிகா மயூவை கூப்பிட்டு நீங்க இங்கேயே படுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல அப்போ மாப்பிள்ளை என்று கமலா கேட்க அவரே ஹால்ல படுத்து தூங்கட்டும் என்று சொல்லி கதவை சாற்றுகிறார்.




பிறகு கோபி ராதிகா ரூமின் கதவை தட்ட கதவை திறந்த ராதிகா பெற்று தலையில் முகத்தில் வீசுகிறார். அடுத்த நாள் மறுபக்கம் ரெஸ்டாரன்ட் இருக்க பக்கத்தில் பார் வைப்பதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடக்கும் இதை பார்த்த செல்வி பக்கத்துல பார் வைக்க விடக்கூடாது என்று பேசுகிறார்.

 

 

 

 

பிறகு பக்கத்து கடை ஓனர் பாக்கியராஜ் வந்து ஜூஸ் குடிக்க செல்வி பேச்சை கேட்டுக் கொண்டு பாக்கியா பக்கத்துல பார் வர்றதால இங்க வேலை செய்யறவங்க பயப்படுறாங்க, இது பொம்பளைங்க எல்லாரும் சேர்ந்து நடக்கிற ஓட்டல் உங்க பாரை வேற எங்கேயாவது வச்சிக்க முடியாத என்று கேட்கிறார். இதைக் கேட்ட அந்த ஓனர் நீங்க சொல்றது நல்ல கதையா இருக்கு உங்களுக்கு ரெஸ்டாரன்ட் நடத்த பயமா இருந்தா இந்த ரெஸ்டாரன்ட்டை என்கிட்ட கொடுத்துடுங்க நானே நடத்துகிறேன் என ஷாக் கொடுக்கிறார்.

அடுத்ததாக பாக்யா வீட்டுக்கு வந்ததும் செல்வி ஜெனிக்கும் அமிர்தாவுக்கும் ஏதோ மோதல் இருக்கு என்று சொல்ல பாக்கியா அதை நானும் கவனிச்சேன் என்று சொல்கிறார். அதன் பிறகு அமிர்தாவிடம் உனக்கும் ஜெனிக்கும் என்ன பிரச்சனை என்று கேட்க அமிர்தா நடந்த விஷயங்களை சொல்லவும் ஜெனி இப்போ பழைய துணி கிடையாது அவள நாம தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும் என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!