lifestyles News

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அயல்நாட்டு உணவுகள்!

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் இந்தியா கடுமையான விதிமுறைகளைக் கொண்டுள்ளது.

நாடு முழுவதும் பல உணவுகள் ருசிக்கப்பட்டு கொண்டாடப்பட்டாலும் சில தயாரிப்புகள் உடல் நலம், சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சங்கத்தால் (FSSAI) தடை செய்யப்பட்டுள்ளன.

அப்படி இந்தியாவில் தடைசெய்யப்பட்ட குறித்தும் தெரிந்துக்கொள்ளலாம்.




சீன பால் மற்றும் பால் பொருட்கள்

சீனாவில் பல உணவு முறைகேடுகள் மற்றும் மாசுபாடு பிரச்னைகளைத் தொடர்ந்து, 2008 ஆம் ஆண்டு முதல் FSSAI ஆல் குழந்தைகளுக்கான பால் மற்றும் பால் பொருட்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. புரத உள்ளடக்கத்தை செயற்கையாக அதிகரிக்கப் பயன்படுத்தப்படும் மெலமைன் சீன பால் பொருட்களில் கண்டறியப்பட்டதையடுத்து தடை செய்யப்பட்டன. . இது நுகர்வோருக்கு கடுமையான உடல்நல அபாயத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

மரபணு மாற்றப்பட்ட (GM) உணவு

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மற்றும் உணவுகளை சாகுபடி செய்வதற்கும் இறக்குமதி செய்வதற்கும் இந்தியா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பிடி பருத்தி போன்ற மரபணு மாற்றப் பயிர்கள் வணிகப் பயிர்ச்செய்கைக்கு அனுமதிக்கப்பட்டாலும், மரபணு மாற்றப்பட்ட உணவுகளுக்கான ஒப்புதல் செயல்முறை கடுமையாகவே உள்ளது.




பொட்டாசியம் ப்ரோமேட்

புற்றுநோய் அபாயம் இருப்பதால் பொட்டாசியம் ப்ரோமேட் என்ற உணவு சேர்க்கையின் பயன்பாட்டை 2016 ஆம் ஆண்டில் FSSAI தடை செய்தது.

பழங்களை செயற்கையாக பழுக்க வைக்கும் முறை

பழங்களை செயற்கையாக பழுக்க வைக்கும் கால்சியம் கார்பைடு மற்றும் எத்திலீன் வாயு போன்ற ரசாயனங்கள் உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன.

சீன பூண்டு

2019 ஆம் ஆண்டில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பூண்டில் அதிக அளவு பூச்சிக்கொல்லி எச்சங்கள் காணப்பட்டதால் இந்தியாவில் சீன பூண்டு இறக்குமதியை FSSAI தடை செய்தது. சீனப் பூண்டில் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டிய பூச்சிக்கொல்லி எச்சங்கள் காணப்பட்டதால் இந்த தடை விதிக்கப்பட்டது.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!