16

அடிக்கத்தான் போகிறான் …கமலியின் வெகு நிச்சயத்திறகு பின் அவள் தனது தவறான புரிதலுக்காக   அந்த அவனது கோபத்தை கூட எதிர்கொள்ள தயாரானாள். இறுக கண்களை மூடி அசையாமல் நின்றிருந்தவளின் இரு காதுகளையும் இரு கைகளால் பற்றினான் விஸ்வேஸ்வரன் .

” எவ்வளவு மட்டமாக என்னை நினைத்திருக்கிறாய் ? நான் அந்த அளவு மோசமானவனா …? ம் …” மெல்ல காதுகளை பிடித்தே அவளை ஆட்டினான் .

அவனது ஆட்டலை கண் மூடி வாங்கிக் கொண்டிருந்தவள் , மெல்ல விழி திறந்து அவனை பார்த்தாள். தனக்கு மிக அருகே   தெரிந்த அவனது முகத்தை பார்த்தவள் , பரிதவித்திருந்த அவன் விழிகளில் இளகி கண்ணுக்கு கண் ஆழ்ந்து நோக்கினாள் .உணர்வு பொங்க சொன்னாள் .

” சாரி விஸ்வா “

விஸ்வேஸ்வரனின் உலுக்கல் நின்றது . விழிகளை விழிகளுக்குள் ஊடுறுவி பார்த்தவன் மெல்ல தன் கைகளை எடுத்துக் கொண்டான் . மெனமையான தலையசைவு ஒன்றுடன் அவளது சாரியை ஏற்றுக் கொண்டான் .

” போய் கஸ்டமர்களை கவனி ” கடை உட் பக்கம் கை காட்டினான் .

தளர்வுடன் சேரில் சரிந்தவனை திரும்பி திரும்பி பார்த்தபடி அறையை விட்டு வெளியேறினாள் கமலினி . அவளால் விஸ்வேஸ்வரனின் மனநிலையை உணர்ந்து கொள்ள முடிந்த்து .” சாரி விஸ்வா ” மீண்டும் மீண்டும் மனதிற்குள் அவனிடம் வேண்டியபடி கஸ்டமர்களுக்கு நகைகளை காட்டியபடி  இருந்த போது அவளது போனில் அழைத்தான் விஸ்வேஸ்வரன் .

” சார் …”



” அண்ணியிடம் என்ன உளறி வைத்திருக்கிறாய் ? ” நெற்றியில் அடிப்பது போல் அழுத்தமாக அவன் குரல் போனில் .

” இல்லை சார் .இது போல் தவறாக எதுவும் கேட்டு விடவில்லை சார் .அவர்கள் பேச ஆரம்பிக்கும் முன்பே நானே  உணர்ந்து கொண்டு வாயை மூடிக் கொண்டேன் “

” சந்தோசம் ” நக்கல் கலந்து கிண்டலாக பேசி விட்டு போனை கட் செய்துவிட்டான்.

” தங்க கட்டிகள் வேண்டுமே மேடம் .எங்கே பார்க்கலாம் ,?” எடுத்துக் காட்டிய வைர நகைகள் எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு தங்க கட்டிக்கு வந்திருந்தனர்  அந்த இருவரும் .

” தங்கம் நான்காவது மாடியில் சார் . இந்த நகைகளில் எதுவும் பிடிக்கவில்லையா …?” பவ்யமாக கேட்டாள் .

” இல்லையே மேடம் .உங்கள் கழுத்தில் இருக்கும் நகையை தவிர வேறு எதுவும் பிடிக்கவில்லை ….” அவர்களது கண்கள் கமலினியின் நகையில் போல் மேனியில் படிய அருவெறுத்த உடலை சமாதானம் செய்தபடி இதழ்களை இழுத்து புன்னகைத்தாள் .

” இதுவும் நியூ மாடல்தான் சார் .பார்க்கிறீர்களா ? “

” பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம் .கொஞ்சம் பக்கத்தில் வந்தீர்களானால் நன்றாக பார்ப்போம் …” அவர்களது பார்வைக்கு உடலில் ஆயிரம் கம்பளிகள் ஊர்ந்தன .

” இதோ அதே மாடல் நகைகள் சார் .பாருங்கள்…” நொட்டென்ற சத்தத்துடன் அவர்கள் எதிரே இரண்டு நகை ஸ்டாண்டுகள் வைக்கப்பட்டன  .

இவன் எப்போது வந்தான் …? திடுமென வந்து நிறகிறானே …ஆச்சரியமாக பார்த்தவளின் கையை லேசாக தொட்டு நகர்த்தினான் .” நீங்கள் போகலாம் கமலினி .இவர்களை நான் கவனித்துக் கொள்கிறேன். ” என்றவன் உச்சரித்த   கவனிப்பு உள்ளூர குளிர் பரப்புவதாக இருந்த்து .

இவர்களுக்காகத்தானே அவளை தயாராக இருக்க சொன்னான் . இப்போது ஏதாவது உதவி தேவைப்படுமோ …அவள் லேசாக தயங்கி நிற்க ” உன்னை போகச் சொன்னேன. ” கடித்த பற்களிடையே வார்த்தைகளை துப்பினான் .அந்த பற்களுக்கு தன்னையும் சேர்த்து மெல்லும் ஆவல் இருப்பதை உணர்ந்தவள்  விழுந்தடித்து ஓடி வந்துவிட்டாள் .

அரைமணி நேரம் கழித்து கமலினி பாதரூம் போன போது …அங்கே …அதிர்ந்தாள் . ஆண் – பெண் என பிரித்திருந்த பாத்ரூம்களிடையே இருந்த இடைவெளியில் அந்த இருவரையும் தரையில் தள்ளி ஒரே சேர அவர்கள் மார்பில் மிதித்துக் கொண்டிருந்தான் விஸ்வேஸ்வரன் .

இவனென்ன இப்படி செய்கிறான. …கமலினி வேகமாக அங்கே ஓட சத்தம் கேட்டு நிமிர்ந்தவனின் கண்களில் ரௌத்ரம் . வராதே ….போ…எச்சரித்த அவனது பார்வையில் கமலினி திரும்ப தன் இடத்திற்கே வந்துவிட்டாள் .

இவனென்ன இப்படி ஒரு முட்டாள் முதலாளியாக இருக்கிறான் …? வாடிக்கையாளர்களிடம் இப்படி நடந்து கொண்டானானால் தொழில் எப்படி நடக்கும் ? தவிப்புடன் நகம் கடித்தாள் .  விஸ்வேஸ்வரனுக்கு தொழில் முக்கியம் . வாடிக்கையாளர்கள் அதி முக்கியம் .வாடிக்கையாளர்கள் நம் தெய்வங்கள் என்பான் . அப்படிபட்டவன் இன்று நகை அதுவும் வைரம் வாங்க வந்தவர்களை இப்படி செய்கிறானே …ஒரு வேளை இது என்னால்தானோ …என் மீதுள்ள கோபத்தைத்தான் இப்படி அடுத்தவரிடம் காட்டுகிறானா ? கமலினி குழப்பத்துடன் நெற்றியை பிடித்துக் கொண்டாள் .

அப்போது கடையின் ஓரம் இருந்த லிப்ட் இனிய இசையுடன் கீழே வந்த்து .அதனுள் விஸ்வேஸ்வரன் நின்றிருந்தான் .இரு பேன்ட் பாக்கெட்டுகளினுள்ளும் இரண்டு கைகளையும் நுழைத்துக் கொண்டு நிமிர்ந்து நின்றபடி …அவனது தோற்றம் வினை முடித்து திரும்பும் வீரனை நினைவு படுத்தியது . அவனருகே …கமலினியின் விழிகள் விரிந்தன .

சற்று முன் அவனிடம் அடி வாங்கியவர்கள் அவனுக்கு இரு புறமும் நின்றிருந்தனர் .குலசாமியை காக்க வந்த காவல் தெய் வங்கள் போல் அவர்கள் தோன்றினர் .அப்படி ஒரு பவ்ய பார்வையைத்தான் அவர்கள் விஸவேஸ்வரனுக்கு கொடுத்துக் கொண்டிருந்தனர் .

லிப்ட் நின்றதும் மூவரும் வெளியே வர விஸ்வேஸ்வரன் அவர்கள் இருவருக்கும் கை கொடுத்தான் . முகம. நிரம்பிய சிரிப்புடன் கடைக்கு வந்த மற்ற சாதாரண கஸ்டமர்களை போல் அவர்களையும் வழியனுப்பினான் . அவர்கள் கைகளில்…. கமலினி விழி விரித்தாள் .அவர்கள் கைகளில் ஸ்வர்ணகமலம் நகை கடை கட்டை பை .அதாவது அவர்கள் இங்கே நகை வாங்கியிருக்கின்றனர் என்ற அர்த்தம் அதற்கு .அதுவும் லட்சங்களை தாண்டி .அவ்வளவு வாங்குபவர்களுக்குத்தான் இந்த மாதிரி பை கொடுக்கப்படும் 
கீழே போட்டு ஏறி மிதித்து விட்டு எப்படி நகைகளும் வாங்க வைத்தான் ? .

” அவர்களை ஏன் அடித்தீர்கள். ? ” அன்றாட ரவுண்ட்சுக்கு அவன் வந்த போது விற்ற நகைகளின் கணக்கை சொல்லுவது போன்ற பாவனையில் கேட்டாள் .

” ஏன் …உனக்கு தெரியாதா …? “

” அது …அவர்கள் நம் கஸ்டமர்கள் இல்லையா ? அதுவும் அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வேறு …”

” அதற்காக …?” சூழ்நிலை மறந்து தலை நிமிர்ந்து சீறியவனை பார்வையாலேயே அமர்த்தினாள் .

” ரிலாக்ஸ் சார் .நான் உங்கள் வியாபாரத்தை நினைத்தே சொன்னேன். “

” வியாபாரம் நடக்கவில்லை …? “

” ஆங் …அதுதான் சார் என் ஆச்சரியம் .அதெப்படி அடியும் வாங்கிக் கொண்டு , நகையும் வாங்கிக் கொண்டு போனார்கள் .? மிரட்டினீர்களோ ? ” கேட்டுவிட்டு அவனது பார்வையில் வாயை மூடிக் கொண்டாள் .” சாரி ” உடனடி மன்னிப்பும் கேட்டுக் கொண்டாள் .

” மிரட்டி வியாபாரம் செய்ய வைக்கும் நிலையிலா நம் கடை இருக்கிறது ? தங்க கட்டிகள்தானே கேட்டார்கள் .அதையே வாங்க வைத்து அனுப்பினேன் . கூடவே வீட்டுப் பெண்கள் இல்லாமல் இனி நகை வாங்க கடைப் பக்கம் வரக் கூடாதென்று எச்சரித்தும் அனுப்பினேன் “

அவர்கள் தங்க கட்டி கேட்டது சும்மா கலாட்டாவுக்கு என்பது நினைவு வர ….” இது மிரட்டல் இல்லாமல் வேறு என்னவாம் ? ” முணுமுணுத்து விட்டு …அவனது அதட்டலான ” என்ன ? ” வுக்கு பேச்சை மாற்றினாள் .

” அவர்கள் அரசியல் குடும்பம் என்று சொன்னீர்களே சார் .அவர்களால் உங்களுக்கு ஏதும் …” கேட்கும் போதே அந்தக். கவலையும் அவளுக்கு வந்திருந்த்து .

” அவர்களது அரசியல் குடும்பத்தின் முக்கிய ஆளை எனக்கு தெரியும் .இவர்கள் சிறு பையன்கள் . என்னிடம் வாங்கிய அடியைக் கூட வெளியே சொல்லமுடியாது .அவர்களை விடு …இனி அடுத்தடுத்து கல்யாண  முகூர்த்த நாட்கள்தான் . நகை வாங்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் . சரோஜா மேடத்திடமும் சொல்லியிருக்கிறேன். நீயும்  அவர்களோடு சேர்ந்து  கொஞ்சம் கவனமாக பார்த்துக் கொள் “

இது அவளது வேலைதான் .சரிதான் சார் என ஒப்பிவிட்டு வேலையை தொடர ஆரம்பித்து விடலாம் .ஆனால் அப்படி வேலையில் மட்டுமாக முழுக முடியாமல் அவளுக்கு ஒரு தேவை அவனிடம் இருந்த்து .அதனால் அவனது தேவைகளை கேட்க விழைந்தாள் .



” ஏதோ …உதவி என்றீர்களே சார் …? ” இழுத்தாற் போல் கேட்டவளை கூர்ந்தான் .

” ஆமாம் .அது …அதில் உனக்கேதும் ஆட்சேபங்கள் இல்லையே ? “

இப்போதுதான் அவன் இரண்டு நாட்களுக்கு முன்பு கேட்ட உதவி நினைவில் வந்த்து . நிகிதா …

எனக்கு ஆகாத வேலை இது… கை ஆட்டி விட்டு போய்விடத்தான் நினைத்தாள் .ஆனாலும் …

” முயற்சிக்கிறேன் சார் ” தலையசைத்து கமலினி ஒப்புதல் தர விஸ்வேஸ்வரனின் முகம் மலர்ந்த்து

What’s your Reaction?
+1
24
+1
17
+1
2
+1
2
+1
3
+1
0
+1
0

Padma Grahadurai

Website Admin

View Comments

Recent Posts

மகாபாரதக் கதைகள்/நாயினும் கடையேன் நான் (சிறுகதை 1)

நான் ஒரு நாய்தான், அதிலும் சொறி பிடித்த ஒரு தெருநாய்தான். யார் சிறிது சோறு போடுவார்கள், எந்தக் குழந்தை சாப்பாட்டில்…

55 mins ago

மாவட்ட கோவில்கள்: திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில்

ஒவ்வொரு மாவட்டம் வாரியாக உள்ள கோவில்களை இனி வரும் பதிவுகளில் பார்க்கலாம். அந்த வரிசையில் முதல் மாவட்டமாக சென்னையில் உள்ள …

56 mins ago

நாள் உங்கள் நாள் (08.05.24) புதன்கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள் இன்று மே 08.05.24 புதன்கிழமை குரோதி வருடம் தமிழ் மாதம் - சித்திரை 25 ஆம்…

1 hour ago

இன்றைய ராசி பலன் (08.05.24)

இன்றைய நாள் நமக்கு எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள நாம் பொதுவாக ராசி பலன் பார்ப்போம். அவ்வாறு ராசி…

1 hour ago

ஓ…வசந்தராஜா…!-12

12 சைந்தவியின் திருமணத்தின் போது அணிந்து கொள்ளப் போகும் பட்டுச்சேலைகளுக்கான சட்டைகளை  வாங்கிக் கொண்டு வந்தாள் அஸ்வினி. லிப்ட்டிலிருந்தே வெளியே…

12 hours ago

விதவிதமாக குளு குளு குல்ஃபிஸ்!

‘குல்ஃபி' 16ஆம் நூற்றாண்டில் டெல்லியில் முகலாய ஆட்சியிலேதான் முதன் முதலில் உருவானது. இது இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, மியான்மர் போன்ற…

12 hours ago