lifestyles News

ரிலையன்ஸ் ஜியோ 5ஜி கட்டணங்கள் உயர்வு.. முழு விவரம்

 நாடு முழுவதும் செல்போன் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி உள்ளது ஜியோ நிறுவனம். 5 ஜி பிளானோடு அனிலிமிடெட் சேவைகளை தரும் ஜியோ நிறுவனம் உயர்த்தியுள்ள புதிய கட்டண உயர்வுகள் வரும் ஜூலை 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.அதனை பற்றி பார்ப்போம்.




நாட்டில் தற்போது தொலைத்தொடர்பு சேவை என்றால், அது ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்களே மேற்கொள்கின்றன. இதில் ஜியோ தான் நாட்டில் முன்னணியில் உள்ள நிறுவனமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியா ஏர்டெல் இருக்கிறது.

முன்பெல்லாம் இன்கம்மிங் கால் இலவமாக இருந்தது. வருடத்திற்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் கூட இன்கம்மிங் கால் வசதி இருக்கும். வெறும் 10 ரூபாய் போட்டு மிஸ்டு கால் போட்டு வாழ்க்கை ஓட்டியவர்கள் இன்று கட்டாயமாக ஒரு மாதம் 200 ரூபாய் வரை ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. அதேபோல் இண்டர்நெட்டே தேவை இல்லை என்றாலும் கட்டாயமாக 2 ஜிபி நெட் தருகிறார்கள். அதேநேரம் மாதம் மாதம் 300 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே இப்போது உள்ள நிலையில் சமாளிக்க முடியும் என்று உருவாகி உள்ளது.




இந்நிலையில் செல்போன் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. செல்போன் சேவை கட்டணங்களை 12 முதல் 15% உயர்த்தி உள்ளது ஜியோ. ரூ. 155 ஆக இருந்த மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ரூ. 189 ஆக உயர்ந்துள்ளது. புதிய கட்டண உயர்வு ஜூலை 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது

1.5 ஜிபி டேட்டா உடன் கூடிய அன்லிமிடெட் பேக் (28 நாளைக்கு) 239 ரூபாயில் இருந்து 299 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல்
2 ஜிபி டேட்டா உடன் கூடிய அன்லிமிடெட் பேக் (28 நாளைக்கு) 299 ரூபாயில் இருந்து 349 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் 3 மாத பிளான்கள் 479, 779, 859, 1199 ஆகிய அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு உயர்த்தப்பட்டுள்ள கட்டண விவரங்களை இதில் பாருங்கள். ஜியோ வாடிக்கையாளர்கள் இந்த கட்டண உயர்வை கேட்டு அதிர்ச்சியில் உள்ளனர். அதேநேரம் ஏர்டெல் வாடிக்கையாளர்களும் அடுத்து கட்டண உயர்வு இருக்குமோ என்று கலக்கத்தில் உள்ளார்கள்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!