lifestyles

மாரடைப்பு ஏற்படும் போது வலி எப்படி இருக்கும் ..? நெஞ்சு வலி தானா அல்லது என்ன வலி என்று எப்படி கண்டறிவது?

மாரடைப்பு என்பது பொதுவா க சுருக்சுருக்கென்று கூர்மையாக இருக்கும் வலி மட்டுமல்ல, மாறாக இது உடலில் பரவலான அசௌகரிய உணர்வையும் ஏற்படுத்துகிறது. மாரடைப்பு வலி பொதுவாக நெஞ்சில் ஆரம்பித்து, தாடை, கை, கழுத்து என்று பரவும், சில சமயங்களில் முதுகுக்கும் பரவும், வலியும் தொடர்ந்து இருக்கும்.

இந்த அசௌகரியமான வலி உடல் முழுவதும் பரந்திருப்பதால், ஒரு குறிப்பிட்ட இடத்தில் தான் வலிக்கிறது என அதை சுட்டிக்காட்ட முடியாது. திடிரென நெஞ்சு வலி ஏற்பட்டால் அவர்கள் பதறிப் போகிறார்கள். சிலர் சாதாரண அல்சர் வலி அல்லது வாயு தொந்தரவு என்று அலட்சியமாக இருந்து விடுகிறார்கள். திடீரென நெஞ்சு வலி வந்தால் அது உண்மையில் நெஞ்சு வலி தானா.!! அல்லது என்ன வலி என்று எப்படி கண்டறிவது?. அசிடிட்டி காரணமாக வரும் வலிக்கும் இதய வலிக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்ளுங்கள்.




News18

ஆன்டாசிட்களை எடுத்துக் கொள்ளுங்கள் :

நெஞ்சு வலி கடுமையாக இருக்கும்போது உடனடியாக தண்ணீர் குடிக்கவும் அல்லது ஆன்டாக்சிட் எடுத்துக் கொள்ளவும். இந்த இரண்டையும் எடுத்துக் கொள்ளும் போது வலி குறைய ஆரம்பித்தால் வலி இதயத்துடன் தொடர்புடையது அல்ல, வயிற்றுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று அர்த்தம். ஏனெனில் வயிறு இதயத்தை விட வேகமாக செயல்படுகிறது. தண்ணீர் அல்லது ஆன்டாக்சிட்களை குடிப்பதால் அமில அனிச்சையிலிருந்து நிவாரணம் கிடைக்கும். இருப்பினும், ஆன்டாக்சிட்களை எடுத்துக் கொண்ட பிறகும் நிவாரணம் இல்லை என்றால், அது உடனடியாக மருத்துவ கவனிப்பு தேவைப்படும் இதய பிரச்சனையைக் குறிக்கிறது.

குருகிராமில் உள்ள மாரெங்கோ ஆசியா ஹாஸ்பிடல்ஸ் கார்டியாலஜியின் மருத்துவ இயக்குனர் டாக்டர் சஞ்சீவ் சவுத்ரி கருத்துப்படி, மாரடைப்பை கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான காரணம் என்னவென்றால், வலிக்கும், உடல் உழைப்புக்கும் உள்ள தொடர்பு ஆகும். ஏதாவது செய்யும் போது இதயம் இருக்கும் பகுதிக்கு அருகில் அசௌகரியம் ஏற்பட்டாலோ அல்லது மார்பில் கடுமையான வலி ஏற்பட்டாலோ அது மாரடைப்புடன் தொடர்புடையதாகும். அந்த வலி வரும்போது கைகளை அசைக்க முடியாது. அதனால் நெஞ்சில் கடுமையான வலி வரும்போது கையை அசைக்கக்கூட முடியவில்லை என்றால், மாரடைப்பு என்று சந்தேகித்து உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.




வேறுபாடுகளை உணர்ந்து சிகிச்சை பெறுவது :

மாரடைப்பு வலி மற்றும் அமிலத்தன்மையை வேறுபடுத்துவதில் உள்ள சிரமம் பெரும்பாலும் தாமதமான சிகிச்சைக்கு வழிவகுக்கிறது. மாரடைப்பு அறிகுறிகளை அசிடிட்டி என்று தவறாக எண்ணி, ஆன்டாக்சிட்களைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வதால், பிரச்சனை தானே தீர்ந்துவிடும் என்று நினைத்து பலர் இம்முறையை கையாள்கின்றனர். முறையான மருத்துவ சிகிச்சை பெறுவதில் ஏற்படும் இந்த தாமதமானது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, வலியின் தன்மை குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், எச்சரிக்கையுடன் மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியமாகும். இந்த வேறுபாடுகளை உணர்ந்து, உடனடியாக சிகிச்சை பெறுவது உயிர் காக்க வழிவகுக்கிறது.

அசிடிட்டியால் ஏற்படும் வலி மற்றும் மாரடைப்பு & நெஞ்சு வலியை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மாரடைப்புக்கு முன் தோன்றும் சில அறிகுறிகளும் உள்ளன. வலி இடது பக்கத்தில் தொடங்குகிறது. தோள்பட்டை மற்றும் கைகளில் கடுமையான வலி. கழுத்தில் கடுமையான வலியும் ஏற்பட கூடும். இந்த வலிகள் மார்பு வலியுடன் இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியது அவசியம். வேறு எந்த அறிகுறியும் இல்லாமல் வலி வரும் போது… தண்ணீர் அல்லது ஆன்டாசிட் சாப்பிட்ட பிறகு குறைந்தால் வலி அசிடிட்டியால் என்று முடிவு செய்து கொள்ளலாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!