Beauty Tips

மருதாணி பயன்படுத்துகிறீர்களா..? இதன் பாதிப்புகள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்!

தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வர நரை முடி பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். முடியை இயற்கையாக கருப்பாக்க சந்தையில் பல்வேறு பொருட்கள் உள்ளன. இன்னும் சிலர் கெமிக்கல் நிறைந்த டையை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் இது பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் இயற்கை சார்ந்த பொருளை வாங்கி பயன்படுத்த பலரும் ஆர்வம் கொள்கின்றனர்.




மருதாணி ஹேர் கலர்

இவர்களில் பெரும்பாலானோர் மருதாணி சிறந்த தேர்வாக நினைத்து பயன்படுத்துகின்றனர். தலைமுடிக்கு மருதாணி பூசுவது பாதுகாப்பானது என பலரும் நினைத்து கொண்டிருக்கின்றனர், ஆனால் இது பல கடுமையான பாதிப்புகள் ஏற்படுத்தும் என்பது யாருக்கும் தெரியாது. தலைமுடியை கருப்பாக்க மருதாணியை பயன்படுத்துபவர்கள் அதில் உள்ள ஆபத்து குறித்தும் இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.,

மருதாணியால் முடிக்கு ஏற்படும் பாதிப்புகள் :

  • மருதாணி பாக்டீரியா மற்றும் ஆண்டிமைக்ரோபியல் முகவராகவும் உள்ளது. இப்படி பல நன்மைகளை கொண்டிருந்தாலும் பல தீமைகளையும் கொண்டுள்ளது. நீங்கள் மீண்டும் மீண்டும் உங்கள் தலைமுடிக்கு மருதாணி தடவி வந்தால், உங்கள் முடியின் இயற்கையான நிறம் கெட்டுவிடும். இதனால் உங்கள் முடி சேதமடையும்.




  • மருதாணியின் நிறம் மங்கும்போது உங்கள் முடி ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறமாகத் தோன்றும். இதனால் உங்கள் கூந்தல் வித்தியாசமாக காட்சியளிக்கும்.

  • தலைமுடிக்கு மருதாணியை தடவுவதால், முடியில் உள்ள இயற்கையான எண்ணெய் தன்மை நீக்கப்பட்டு, முடி உயிரற்றதாக தோன்றத் தொடங்குகிறது. மேலும் நாளடைவில் பொடுகு, வறட்சி உள்ள பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

  • நீங்கள் தினமும் உங்கள் தலைமுடியில் மருதாணி தடவி வந்தால் நாளடைவில் முடி ஈரப்பதத்தை இழந்து விடும். அதன் காரணமாக உங்கள் முடியில் அதிக சிக்குகள் ஏற்பட தொடங்கும். இதனால் முடி உதிர்வு அதிகரிக்கும்.

  • மருதாணியை தடவி குளிக்கும் போது முடியை சரியாக சுத்தம் செய்யவில்லை என்றால், மருதாணி முடியின் வேர்களில் ஒட்டிக்கொள்கிறது, இது முடி வளர்ச்சியை நிறுத்தி அதிக முடி உதிர்வை ஏற்படுத்துகிறது.

  • மருதாணியை தலைமுடியில் தொடர்ந்து தடவுவதன் மூலம் முடி வலுவிழந்து முடி அதிகமாக கொட்ட ஆரம்பிக்கும்.

  • நரை முடியை மறைக்க மருதாணியை பலரும் தடவி வருகின்றனர் . ஆனால் அடிக்கடி மருதாணியை தலையில் தடவி வருபவர்களுக்கு கருப்பாக உள்ள முடியும் விரைவில் நரைத்துவிடும்.

  • சிலருக்கு மருதாணி அலர்ஜியாகவும் இருக்கலாம். எனவே மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இல்லையென்றால் அரிப்பு மற்றும் எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. மேலும் மருதாணி குளிர்ச்சி என்பதால் சளி, ஜலதோஷம் உள்ளிட்ட பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். மேலும் தோலில் அரிப்பு, சிவப்பு போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.




What’s your Reaction?
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!