lifestyles News

தண்ணீரே இல்லாமல் காரை சுத்தம் செய்யும் நிறுவனம்!!

தண்ணீரே இல்லாமல் உங்களது காரை நாங்கள் சுத்தம் செய்து தருகிறோம் இப்படி யாரேனும் சொன்னால் இனி நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் கோ வாட்டர்லெஸ் (Go waterless) என்ற நிறுவனம் இதைத்தான் செய்து வருகிறது.

இந்தியாவில் பெங்களூரு டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தண்ணீர் பிரச்சனை நிலவி வருகிறது. பருவமழை தவறினால் நாட்டின் பல இடங்களில் வறட்சி ஏற்பட்டு விடும். பொதுவாக காரினை சுத்தம் செய்வதற்கு அதிகளவு தண்ணீர் தேவைப்படும்.

வறட்சி காலங்களில் என்ன செய்வது? இவ்வளவு மதிப்புமிக்க தண்ணீரை காரை சுத்தம் செய்வதற்கு என பயன்படுத்தி ஏன் வீணாக்க வேண்டும்?இந்த பிரச்சனைக்கு தீர்வு காணக்கூடிய வகையில் தான் கோ வாட்டர்லெஸ் என்ற ஸ்டார்ட் அப் தொடங்கப்பட்டுள்ளது. நிதின் சர்மா, 2004 ஆம் ஆண்டு எம்பிஏ படித்துக் கொண்டிருந்தவர் படிப்பை பாதியிலேயே விடுத்து தன்னுடைய குடும்பத் தொழிலான கார்களை சுத்தம் செய்யும் தொழிலில் களமிறங்கினார்.




2016 ஆம் ஆண்டு இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் கடுமையான தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் இவர்களது தொழிலுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. எனவே தண்ணீரை தண்ணீர் பயன்பாட்டை குறைக்க கூடிய வகையிலான கார் சுத்தம் செய்யும் தொழிலை தொடங்க வேண்டும் என்று யோசனை இவருக்கு பிறந்தது. அப்போதுதான் நிதினுக்கு தன்னுடைய உறவினர் மூலம் அமெரிக்காவில் தண்ணீர் இல்லாமல் கார்களை சுத்தம் செய்யும் தொழில்நுட்பம் இருப்பது குறித்து கேட்டறிந்தார்.

இந்த தொழில்நுட்பம் குறித்து படிப்படியாக தெரிந்து கொண்ட நிதின் 2017 ஆம் ஆண்டில் சிறிதாக ஒரு குழுவினை அமைத்து பத்து லட்சம் ரூபாயை முதலீடு செய்தார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலம் இந்தியாவில் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான ஆய்வுகளில் ஈடுபட்டார்.

2019 ஆம் ஆண்டு ஒரு கரைசலை உருவாக்கினார் ஐந்து வித்தியாசமான செடிகளில் இருந்து கரைசலை உருவாக்கி அதனை கொண்டு கார்களை சுத்தம் செய்யும் தொழில்நுட்பத்தை அவர் கண்டறிந்தார். இப்படி ஒரு புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்தாலும் பெரும்பாலான மக்கள் இதனை முதலில் ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இல்லை. எனவே மக்களிடம் இதனை கொண்டு போய் சேர்க்க வேண்டும், மக்களுக்கு இதனை புரிய வைக்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டார்.




படிப்படியாக பல்வேறு கார் உரிமையாளர்களும் இவருடைய கார் சுத்தம் செய்யும் முறையை ஏற்றுக் கொள்ள தொடங்கினர். அதாவது இதற்கு தண்ணீரே தேவையில்லை, இவர்களின் கரைசலை கொண்டு துடைத்தால் போதும் கார் பளிச்சென ஆகிவிடும். தற்போது கோ வாட்டர்லெஸ் என்பது இந்தியா முழுவதும் ஒரு பிரச்சார இயக்கமாகவே மாறி உள்ளது. இந்தியாவின் 22 மாநிலங்களில் இவர்களின் கிளை செயல்பட்டு வருகிறது .

இவர்கள் நேரடியாக வீட்டிற்கு வந்து கார்களை சுத்தம் செய்து தருகின்றனர். இவர்களது இணையதளத்திலிருந்து நாம் இந்த பிரத்தியேக கரைசலை 499 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ள முடியும். இவர்கள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் கூட்டு ஒப்பந்தம் செய்ய உள்ளனர். இதன் மூலம் பெட்ரோல் நிலையங்கள் அனைத்திலும் இந்த கரைசல் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை 10 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!