gowri panchangam Sprituality

ஜூலை மாத பலன்கள் (தனுசு, மகரம்)

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்)

தனுசு ராசி பலன்

கிரகநிலை – தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) – சுக ஸ்தானத்தில் ராகு – பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் – ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு – களத்திர ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் – அஷ்டம ஸ்தானத்தில் புதன் – தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்: 07-07-2024 அன்று சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 11-07-2024 அன்று செவ்வாய் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 16-07-2024 அன்று சூரியன் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத உத்தமர் என்பதற்கேற்ப மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசாத குணமுடைய தனசு ராசி அன்பர்களே! இந்த மாதம் தன்னம்பிக்கை வளரும். பணவரவு திருப்தி தரும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். வாக்குவன்மை அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். ஆனாலும் தேவையற்ற வீண் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. அறிவுத்திறன் அதிகரிக்கும். பெயருக்கும், புகழுக்கும் பங்கம் வரலாம்.

தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இது வரை இருந்த தொய்வு நீங்கும். லாபம் அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும் பணவரத்து கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.




குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளைகள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். பெண்களுக்கு திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோதிடம் கூடும். கலைத்துறையினருக்கு ராசியில் சனி இருப்பதால் கவனமாக பேசுவது நல்லது. வீண்பழி உண்டாகலாம். வேலைகளில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம்.

அரசியலில் உள்ளவர்களுக்கு கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். புதிய பதவிகள் வரும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். சக மாணவர்களுடன் நல்லுறவு காணப்படும்.

மூலம்: இந்த மாதம் தடைகள் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தது போல் இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கலாம். பாதியில் நின்ற காரியங்களை தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். திடீர் குழப்பம் ஏற்படலாம். தீ, எந்திரம் ஆகியவற்றை கையாளும்போது கவனம் தேவை.

பூராடம்: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது நல்லது. குடும்பத்தில் சிறு சண்டைகள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நன்மை தரும்.

உத்திராடம்: இந்த மாதம் மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சமையல் செய்யும் போதும் மின் சாதனங்களை இயக்கும் போதும் கவனம் தேவை. முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். தொழில் தொடர்பான காரியங்களை யோசித்து செய்வது நல்ல பலன் தரும். வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். பணவரத்து திருப்தி தரும். புத்தி சாதூர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையில் நெய்தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். செயல் திறமை அதிகரிக்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 7, 8 | அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 28, 29




மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்)

மகரம் ராசி பலன்

கிரகநிலை – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) – தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு – சுக ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் – பஞ்சம ஸ்தானத்தில் குரு – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் – களத்திர ஸ்தானத்தில் புதன் – பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்: 07-07-2024 அன்று சுக்கிரன் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 11-07-2024 அன்று செவ்வாய் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 16-07-2024 அன்று சூரியன் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்று சொல்லக்கூடிய எதிலும் பின்வாங்காத அஞ்சாநெஞ்சம் உடைய மகர ராசி அன்பர்களே! இந்த மாதம் வீண் செலவுகள் குறையும். பணவரத்து அதிகரிக்கும். காரியங்களில் இருந்து வந்த தாமதம் அகலும். மிகவும் வேண்டியவரை பிரிய நேரிடும். கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் யோசித்து செய்வது நல்லது. இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டி இருக்கும்.

 

தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் தாமதப்படும். ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகலாம். வீண் அலைச்சலும், பணவிரயமும் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன் செய்வது நல்லது.




குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. நண்பர்கள் உறவினர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. தாய், தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. எதிலும் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அரசியலில் உள்ளவர்களுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தனலாபம் அதிகரிக்கும். சிறப்பான பலன் கிடைக்க பெறுவீர்கள். புதிய பொறுப்புகள் சேரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை. எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.

உத்திராடம்: இந்த மாதம் மேலிடம் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். நீங்கள் மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் தயங்க மாட்டீர்கள். பேச்சு திறமை அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சிறிது மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் குறையாத நிலை இருக்கும்.

திருவோணம்: இந்த மாதம் போட்டிகள் பற்றிய கவலையை விட்டுவிட்டு தொழில் வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் மாற்றங்கள் உண்டாகலாம். சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது நன்மை தரும்.

அவிட்டம்: இந்த மாதம் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பேசும் போது நிதானமாக பேசுவது நல்லது. வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கவனம் தேவை.

பரிகாரம்: சனிக்கிழமையில் சனி பகவானை வணங்கி காகத்திற்கு எள் சாதம் வைத்து வர உடல் ஆரோக்கியமடையும். வீண் அலைச்சல் குறையும். கடினமான பணிகள் எளிதாக முடியும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: 9, 10, 11 | அதிர்ஷ்ட தினங்கள்: 3, 4, 30, 31




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!