lifestyles

ஓம வாட்டர் தரும் ஒப்பற்ற பயன்.. ஓம வாட்டரை தயாரிப்பது எப்படி?

குழந்தைகள் முதல் கர்ப்பிணிகள் வரை உதவக்கூடிய ஓம வாட்டரின் பயன்கள் என்னென்ன தெரியுமா? ஓம வாட்டரை எப்படி தயாரிக்க வேண்டும்?

ஓம விதைகளில் கார்போஹைட்ரேட், கொழுப்புகள், சோடியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கின்றன..




சத்துக்கள்: கொழுப்பு, டானின்கள், கிளைகோசைடுகள், ஈரப்பதம், சபோனின்கள், ஃபிளாவோன், இரும்பு, கோபால்ட், தாமிரம், அயோடின், மாங்கனீசு, தியாமின் மற்றும் ரைபோஃப்ளேவின் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதைவிட முக்கியமாக நார்ச்சத்தும், புரதச்சத்தும் அபரிமிதமாக உள்ளன. பெரும்பாலும், அஜீரண கோளாறுகளுக்கே பயன்படுத்தப்படுகிறது ஓம விதைகள்.. ஆனால், வயிறு உப்புசம், வாயு உள்ளிட்ட நச்சுக்களையும், கழிவுகளையும் ஓம விதைகள் நீக்கக்கூடியவை. நார்ச்சத்து அதிகம் என்பதால், மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள், வெறும் வயிற்றில், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஓமத்தை கலந்து குடிக்கலாம். இதனால் குடல் பாதுகாப்பும் தழைக்கும். 

உபாதைகள்: வயிற்று வலி, வயிறு கோளாறு இருந்தால், 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, அது பாதியாக சுண்டியதும் வடிகட்டி குடித்தால், வயிறு சம்பந்தமான உபாதைகள் விலகிவிடும். குடல் புண் மற்றும் வயிற்றுப்புண் தொடர்பான பிரச்சினைகளுக்கும் ஓமம் விதைகள் மருந்தாவதாக ஆய்வுகள் கூறுகின்றன. 

இயற்கை மருத்துவத்தில் ஓமம் எப்படியெல்லாம் பயன்படுகிறது...!Herbs Well Watered Lemon Balm plant, For Garden at Rs 140/piece in Ballabhgarh | ID: 25275230355

சளி, காய்ச்சலை குணப்படுத்தி நுரையீரலை காக்கிறது ஓம விதைகள். மூக்கடைப்பு இருந்தால், ஒரு துணியில் ஓமவிதைகளை கட்டி நுகர்ந்தாலே போதும், நிவாரணம் கிடைத்துவிடும். ஓமத்தை பவுடர் செய்து நெற்றியில் தேய்த்தாலும், தலைவலி நீங்கும். மூட்டுவலி, முழங்கால் வலி உள்ளவர்கள், ஓம விதைகளை அரைத்து தடவ வேண்டும்.. ஆயுர்வேதம்: ஓமத்திலிருந்து தயாரிக்கப்படும் ஓம வாட்டருக்கு ஈடு இணையே இல்லை.. இன்றுவரை ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த ஓம வாட்டருக்கான முக்கியத்துவம் பெருகியே காணப்படுகிறது.

ஓம வாட்டர் எப்படி தயாரிப்பது தெரியுமா?

  • ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் ஓமவிதைகளை சேர்த்து பாதியாக சுண்டும்வரை கொதிக்க வைக்க வேண்டும்.

  • இந்த தண்ணீரை வடிகட்டி எடுத்து கொண்டு, அதனுடன் எலுமிச்சம் சாறு அல்லது ஆப்பிள் சிடார் வினிகர், தேன் மற்றும் கருப்பு உப்பு சேர்த்து கலந்தால் ஓம வாட்டர் ரெடி.




இந்த தண்ணீரை தினமும் வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

கர்ப்பிணிகள்: நார்ச்சத்து அதிகம் உள்ளதால், உடலிருக்கும் கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்கிறது ஓம வாட்டர்.. கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படக்கூடிய வீக்கம் குறையும். மாதவிலக்கு நேரங்களில் வலி அதிகமாக இருந்தால், இந்த ஓம வாட்டரை குடிக்கலாம்.. இருமல், சளி, காதுவலி, வாய் தொற்றுகள் இருந்தாலும் நீங்கிவிடும். இதனால் ஆஸ்துமா நோயாளிகளும் நன்றாக சுவாசிக்க முடியும்.. மூட்டு எலும்பு சம்பந்தமான அழற்சியை குறைக்கக்கூடிய தன்மை இந்த ஓமவாட்டருக்கு உண்டு..

இடுப்பு வலி: அதுமட்டுமல்ல, பெண்களுக்கு இடுப்பு வலி ஏற்பட்டால், சிறிது தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஓமத்தை கலந்து கொதிக்கவைத்து, 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மறுபடியும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ள வேண்டும். இதில், கற்பூர பொடியை கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் தேய்த்தால், இடுப்பு வலி உடனே நீங்குமாம்.

காது வலிகளை போக்கக்கூடிய மருந்தாக ஓமம் எண்ணெய் பயன்படுகின்றது… பல்வலியில் இருந்தாலும், ஓம விதையுடன் உப்பை சேர்த்து கொப்பளித்து வரலாம்.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!