lifestyles News

UPI மோசடியில் சிக்கி கொள்ளாமல் இருக்க சூப்பர் டிப்ஸ்..

யூனிஃபைடு பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் என்று அழைக்கப்படும் ‘UPI’ ஸ்மார்ட்போன் மூலமாக வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை பரிமாற்றம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் ஒரு எளிமையான முறையாகும். இது ஒரு வகையான டிஜிட்டல் வாலட் போல செயல்பட்டாலும் இதனை பல்வேறு வங்கி கணக்குகளுடன் இணைக்கலாம். மேலும் வெவ்வேறு அப்ளிகேஷன்களில் பயன்படுத்தலாம்.

2016 ஆம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்வதற்கு RTGS, IMPS, மற்றும் NEFT போன்றவை பயன்படுத்தப்பட்டது. ஆனால் இவை அனைத்தையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு நொடிகளில் பேமெண்ட் செலுத்துவதற்கு தற்போது UPI உதவி வருகிறது.




இந்தியாவின் பேமெண்ட் முறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் 2016 ஆம் ஆண்டு நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) UPI பேமெண்ட் முறையை அறிமுகப்படுத்தியது. ஆன்லைன் பேமெண்டுகளை எளிதாக்குவதற்கும், சீரமைப்பதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பேமெண்ட் முறை இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த டிஜிட்டல் பேமெண்ட் முறை இ-காமர்ஸ் மற்றும் பிற ஆன்லைன் செயல்பாடுகளை பெரிய அளவில் ஊக்குவித்து வருகிறது. எனினும் இதனை சரியான முறையில் பாதுகாப்பாக பயன்படுத்தாவிட்டால் இழப்புகளை சந்திக்க நேரிடலாம்.

UPI ஒரு அற்புதமான கண்டுபிடிப்பாக இருந்தாலும் பிறரது பணத்திற்கு ஆசைப்படும் நபர்களிடமிருந்து தப்பிக்க ஒரு சில முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

UPI சிஸ்டத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கான ஒரு சில குறிப்புகளை இப்பொழுது பார்ப்போம்:-

உங்களுடைய அக்கவுண்டில் இருந்து பணத்தை டெபிட் செய்வதற்கு மட்டுமே UPI PIN என்டர் செய்யுங்கள். பிறரிடம் இருந்து பணத்தை பெறுவதற்கு UPI PIN அவசியம் இல்லை.

நீங்கள் பணம் அனுப்ப நினைக்கும் நபரின் UPI ID ஐ வெரிஃபை செய்யாமல் பணம் அனுப்ப வேண்டாம்.

அப்ளிகேஷனின் UPI PIN பக்கத்தில் மட்டுமே UPI PIN நம்பரை என்டர் செய்யவும்.

UPI PIN நம்பரை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

பேமெண்ட்களை செலுத்துவதற்கு மட்டுமே QR கோடை ஸ்கேன் செய்ய வேண்டுமே தவிர பணத்தை பெறுவதற்கு அது அவசியம் இல்லை.

PIN நம்பரை பாதுகாப்பாக வைக்கவும். உங்களுடைய UPI PIN நம்பரை யாரிடமும் சொல்ல வேண்டாம். அது உங்களுடைய ATM PIN அல்லது இன்டர்நெட் பேங்கிங் பாஸ்வேர்ட் போல ரகசியமாக பராமரிக்கப்பட வேண்டும். எப்பொழுதும் உங்களுடைய UPI PIN நம்பரை தனிமையில் பிறர் காணாத வகையில் என்டர் செய்யுங்கள்.




மோசடிகளில் இருந்து எச்சரிக்கையாக இருக்கவும். உங்களது வங்கி அல்லது UPI சேவை வழங்குனர் என்று சொல்லி உங்களுடைய PIN, OTP, அல்லது பிற ரகசியத்திற்கு உட்பட்ட தகவலை கேட்கும் இமெயில்கள், SMS அல்லது போன் கால்களை எச்சரிக்கையுடன் கையாளவும். தெரியாத நபரிடமிருந்து வரும் சந்தேகத்திற்கு உட்பட்ட லிங்குகளை கிளிக் செய்யவோ அல்லது அட்டாச்மென்ட்களை ஒருபோதும் டவுன்லோட் செய்ய வேண்டாம்.

அதிகாரப்பூர்வ அப்ளிகேஷன்களை பயன்படுத்தவும். UPI அப்ளிகேஷன்களை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் போன்ற அதிகாரப்பூர்வ தளங்களில் இருந்து மட்டுமே டவுன்லோட் செய்யுங்கள்.

ஒரு ட்ரான்ஸாக்ஷனை செய்வதற்கு முன்பு பெறுநரின் UPI ID அல்லது மொபைல் நம்பரை ஒரு முறைக்கு இருமுறை சரிபார்க்கவும். அதிகப்படியாக பேமெண்ட் செலுத்துவதை தவிர்க்க நீங்கள் என்டர் செய்துள்ள தொகை சரிதானா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பாதுகாப்பு சம்பந்தப்பட்ட மேம்பாடுகள் மற்றும் புதிய அம்சங்களை பயன்படுத்துவதன் பொருட்டு உங்களுடைய UPI அப்ளிகேஷன் சமீபத்திய பதிப்பில் இருக்க வேண்டும்.

வழக்கமான முறையில் உங்களுடைய பேங்க் ஸ்டேட்மெண்டுகள் மற்றும் UPI ட்ரான்ஸாக்ஷன்களை கண்காணிக்கவும். ஏதேனும் சந்தேகத்திற்கு உட்பட்ட செயல்பாடுகளை கண்டறிய நேர்ந்தால் உடனடியாக அதுகுறித்து வங்கியிடம் தெரிவிக்கவும்.




ஒருவேளை உங்களுடைய UPI அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டிருந்தால் அதனால் ஏற்படும் அபாயத்தை குறைப்பதற்கு தினசரி ட்ரான்ஸாக்ஷன் லிமிட்டுகளை அமைத்து வைப்பது உதவும்.

UPI அப்ளிகேஷன்களில் கூடுதல் பாதுகாப்பு அடுக்காக இருக்கும் அப்ளிகேஷன் லாக் அம்சங்களை பயன்படுத்துங்கள்.

UPI ட்ரான்ஸாக்ஷன்களை பொது அல்லது பாதுகாப்பற்ற Wi-Fi நெட்வொர்க்களில் செய்ய வேண்டாம். நாட்டில் அவ்வப்போது நடந்து வரும் UPI மோசடிகள் குறித்து தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!