gowri panchangam Sprituality

வெற்றிகளைத் குவியச் செய்யும் 108 அனுமன் போற்றி!

ஸ்ரீ ராம பக்தரான ஆஞ்சநேயரை போற்றி வணங்குபவர்களுக்கு எப்பொழுதும் துன்பம் என்பது வராது. என்றும் சிரஞ்சீவியாக வரம் பெற்ற ஆஞ்சநேயர் இவ்வுலகில் ராமருடைய பக்தர்களுக்கு இன்றும் கண்கண்ட  தெய்வமாக அருள் புரிகின்றார் என்பது பக்தர்களுடைய நம்பிக்கை. அவருடைய இந்த 108 தமிழ்ப் போற்றிகளை சனிக்கிழமையில் உச்சரிப்பவர்களுக்கு வாழ்வில் எந்த துன்பமும் நெருங்காது. வருகின்ற துயரமும் எளிதாக நீங்கிவிடும்! அத்தகைய ஆஞ்சநேயருடைய 108 போற்றிகளை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற சனிக்கிழமைகளில் ஜெபிக்க வேண்டிய 108 அனுமன் போற்றி…




hanuman-heart

ஓம் அனுமனே போற்றி
ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி

ஓம் அறக்காவலனே போற்றி
ஓம் அவதார புருஷனே போற்றி

ஓம் அறிஞனே போற்றி
ஓம் அடக்கவடிவே போற்றி
ஓம் அதிகாலை பிறந்தவனே போற்றி
ஓம் அசோகவனம் எரித்தவனே போற்றி
ஓம் அர்ஜுனக்கொடியில் நின்றவனே போற்றி
ஓம் அமாவாசையில் பிறந்தாய் போற்றி
ஓம் ஆனந்த வடிவே போற்றி
ஓம் ஆரோக்கியம் தருபவனே போற்றி
ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
ஓம் இகபர சுகமளிப்பவனே போற்றி
ஓம் இசை ஞானியே போற்றி
ஓம் இறை வடிவே போற்றி
ஓம் ஒப்பிலானே போற்றி
ஓம் ஓங்கி வளர்ந்தோனே போற்றி
ஓம் கதாயுதனே போற்றி
ஓம் கலக்கம் தீர்ப்பவனே போற்றி
ஓம் களங்கமிலாதவனே போற்றி
ஓம் கர்மயோகியே போற்றி
ஓம் கட்டறுப்பவனே போற்றி
ஓம் கம்பத்தருள்பவனே போற்றி
ஓம் கடல் தாவியவனே போற்றி
ஓம் கரை சேர்ப்பவனே போற்றி
ஓம் கீதாபாஷ்யனே போற்றி
ஓம் கீர்த்தியளிப்பவனே போற்றி
ஓம் கூப்பிய கரனே போற்றி
ஓம் குறுகி நீண்டவனே போற்றி
ஓம் குழப்பம் தீர்ப்பாய் போற்றி
ஓம் கவுண்டின்ய கோத்திரனே போற்றி




ஓம் சிரஞ்சீவி ஆனவனே போற்றி
ஓம் சலியாத மனம் படைத்தாய் போற்றி
ஓம் சஞ்சலம் தீர்ப்பாய் போற்றி
ஓம் சிரஞ்சீவி கொணர்ந்தவனே போற்றி
ஓம் சிந்தூரம் ஏற்பவனே போற்றி
ஓம் சீதாராம சேவகனே போற்றி
ஓம் சூராதி சூரனே போற்றி
ஓம் சுக்ரீவக் காவலனே போற்றி
ஓம் சொல்லின் செல்வனே போற்றி
ஓம் சூரியனின் சீடனே போற்றி
ஓம் சோர்வில்லாதவனே போற்றி
ஓம் சோக நாசகனே போற்றி
ஓம் தவயோகியே போற்றி
ஓம் தத்துவஞானியே போற்றி
ஓம் தயிரன்னப் பிரியனே போற்றி
ஓம் துளசியில் மகிழ்வோனே போற்றி
ஓம் தீதழிப்பவனே போற்றி
ஓம் தீயும் சுடானே போற்றி
ஓம் நரஹரியானவனே போற்றி
ஓம் நாரத கர்வ பங்கனே போற்றி
ஓம் நொடியில் அருள்பவனே போற்றி
ஓம் நொடித்தோர் வாழ்வே போற்றி
ஓம் பண்டிதனே போற்றி
ஓம் பஞ்சமுகனே போற்றி
ஓம் பக்தி வடிவனே போற்றி
ஓம் பக்த ரட்சகனே போற்றி
ஓம் பரதனைக் காத்தவனே போற்றி
ஓம் பக்த ராமதாசரானவனே போற்றி
ஓம் பருதியைப் பிடித்தவனே போற்றி
ஓம் பயம் அறியாதவனே போற்றி
ஓம் பகையை அழிப்பவனே போற்றி
ஓம் பவழமல்லிப் பிரியனே போற்றி
ஓம் பிரம்மச்சாரியே போற்றி
ஓம் பீம சோதரனே போற்றி
ஓம் புலனை வென்றவனே போற்றி
ஓம் புகழ் சேர்ப்பவனே போற்றி
ஓம் புண்ணியனே போற்றி
ஓம் பொட்டிட மகிழ்பவனே போற்றி
ஓம் மதி மந்திரியே போற்றி
ஓம் மனோவேகனே போற்றி
ஓம் மாவீரனே போற்றி
ஓம் மாருதியே போற்றி
ஓம் மார்கழியில் பிறந்தவனே போற்றி
ஓம் மணம் கூட்டுவிப்பவனே போற்றி
ஓம் மூலநட்சத்திரனே போற்றி
ஓம் மூப்பில்லாதவனே போற்றி
ஓம் ராமதாசனே போற்றி
ஓம் ராமநாமப் பிரியனே போற்றி
ஓம் ராமதூதனே போற்றி
ஓம் ராம சோதரனே போற்றி
ஓம் ராமபக்தரைக் காப்பவனே போற்றி




ஓம் ராமனுயிர் காத்தவனே போற்றி
ஓம் ராமனை அணைந்தவனே போற்றி
ஓம் ராமஜெயம் அறிவித்தவனே போற்றி
ஓம் ராமாயண நாயகனே போற்றி
ஓம் ராமாயணப் பிரியனே போற்றி
ஓம் ராகவன் கண்மணியே போற்றி
ஓம் ருத்ர வடிவனே போற்றி
ஓம் லட்சியப் புருஷனே போற்றி
ஓம் லட்சுமணனைக் காத்தவனே போற்றி
ஓம் லங்கா தகனனே போற்றி
ஓம் லங்காவை வென்றவனே போற்றி
ஓம் வஜ்ர தேகனே போற்றி
ஓம் வாயுகுமாரனே போற்றி
ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
ஓம் வணங்குவோரின் வாழ்வே போற்றி
ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி
ஓம் விளையாடும் வானரனே போற்றி
ஓம் விஸ்வரூபனே போற்றி
ஓம் வியாசராஜருக்கு அருளியவனே போற்றி
ஓம் வித்தையருள்பவனே போற்றி
ஓம் வைராக்கிய மூர்த்தியே போற்றி
ஓம் வைகுண்டம் விரும்பாதவனே போற்றி
ஓம் வெண்ணெய் உகந்தவனே போற்றி
ஓம் வெற்றிலைமாலை ஏற்பவனே போற்றி
ஓம் வெற்றியளிப்பவனே போற்றி




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!