lifestyles

வாகன டிசைனில் ஜொலிக்கும் மதுரை பெண்மணி கிருபா ஆனந்தனின் வெற்றி பயணம்

இந்தியாவில் எஸ்யூவிகளை கார்கள் என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது தார் (Thar), எக்ஸ்யூவி700 மற்றும் ஸ்கார்பியோ போன்ற கார்கள். இந்த வாகனங்களுக்கு பொதுவானது அம்சம் என்ன என்றால், அதற்கான பதில்தான் ராம்கிருபா ஆனந்தன். அதெப்படி இதன் பின்னால் மஹிந்திரா என்று தானே சொல்ல வேண்டும்? என்று நீங்கள் கேட்கலாம். இந்த கார்கள் மஹிந்திரா கம்பெனி மாடல்கள் என்று நீங்கள் கேட்கலாம். ஆம், மஹிந்திரா கார்கள்தான் இவை.

ஆனால், இந்த கார்கள் வடிவமைப்பில் முக்கியப் பங்காற்றி மஹிந்திராவின் எஸ்யூவி செக்மென்ட்டில் புரட்சியை ஏற்படுத்திய பெண்மணிதான் இந்த ராம்கிருபா ஆனந்தன். இந்தியாவின் ஆட்டோமோட்டிவ் டிசைனில் ராம்கிருபா ஆனந்தனின் பயணமும், அவர் ஏற்படுத்திய தாக்கமும்தான் வியப்புக்குரியவை. ராம்கிருபா ஆனந்தனின் பயணம் கிருபா ஆனந்தன் என்று அழைக்கப்படும் ராம்கிருபா ஆனந்தன் மதுரையில் பிறந்து வளர்ந்தவர்.




இவர் 1997-ல் மஹிந்திரா நிறுவனத்தில் இன்டீரியர் டிசைனராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பிட்ஸ் பிலானியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டமும், ஐஐடி பாம்பேயில் டிசைன் மாஸ்டர் பட்டமும் பெற்ற ராம்கிருபா, ஆட்டோமொபைல் துறையில் முத்திரை பதிக்க தேவையான தொழில்நுட்பம் திறனோடு கிரியேட்டிவ் திறன்களையும் கொண்டிருந்தார். பொலேரோ, ஸ்கார்பியோ மற்றும் சைலோ போன்ற கார்களின் உட்புறங்களை வடிவமைப்பது தான் மஹிந்திராவில் அவரது ஆரம்பகால பணி. தனது கிரியேட்டிவ் திறமைக்காக வெகுவிரைவாகவே சரியான அங்கீகாரமும் பெற்றார் ராம்கிருபா. 2005-ல் அவர் மஹிந்திரா நிறுவனத்தின் வடிவமைப்புத் துறை தலைவராக நியமிக்கப்பட்டார்.

மஹிந்திராவின் ஹிட் அடித்த கார்களில் ஒன்று மஹிந்திரா XUV500. வடிவமைப்புத் துறை (டிசைனிங்) தலைவராக நியமிக்கப்பட்ட பின்பு ராம்கிருபா டிசைன் செய்த காரே XUV500. அடுத்ததாக, 2019-ல் தலைமை வடிவமைப்பாளராக மாறிய ராம்கிருபாவின் பணி மஹிந்திராவின் எதிர்கால வாகனங்களின் தோற்றத்தை டிசைன் செய்ய உதவியது. மஹிந்திராவில் டிசைன் புரட்சிக்கு தலைமை தற்போது இந்தியாவில் அதிக விற்பனையாகும் கார்கள் வரிசையில் மஹிந்திரா தார், XUV700 மற்றும் ஸ்கார்பியோவின் அப்டேட் வெர்சன்கள்.

mahindra

குறிப்பாக மஹிந்திரா தார், இந்திய வாகன வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. தற்போதைய மார்டன் உலகத்துக்கு ஏற்ற ஸ்டைலான டிசைன் உடன் `தார்` செக்மென்ட்டுக்கே உரித்தான ஆஃப்-ரோடு அம்சம், இந்தியாவில் அதன் விற்பனையை அதிகமாக்கியது. இந்த மாடல்கள் அனைத்தும் ராம்கிருபாவின் தொலைநோக்கு பார்வை மற்றும் கிரியேட்டிவிட்டிக்கு அடையாளம். இப்படியாக ராம்கிருபா தலைமையின் கீழ் மஹிந்திரா வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் வாகனங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தியது. அதற்கு எடுத்துக்காட்டுதான் XUV700, ஸ்கார்பியோ. குறிப்பாக, ஸ்கார்பியோ தனது பல ஆண்டுகால பாரம்பரியத்தை தக்கவைத்து கொண்டிருக்கிறது.




ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் ஒரு புதிய அத்தியாயம்: 2022-ல் யாரும் எதிர்பாராத வண்ணம், ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் டிசைன் பிரிவின் தலைவராக இணைந்தார் ராம்கிருபா. இது அவருக்கு புதிய சவால் தரும் தளம். தற்போது ஓலாவின் டூவீலர் மற்றும் வரவிருக்கும் எலக்ட்ரிக் கார்களுக்கான டிசைன்கள் இவரது தலைமையில் நடந்து வருகிறது. இந்த நடவடிக்கை, ஆட்டோமொபைல் துறையில் மாறிவரும் போக்குகளுக்கு ஏற்ப அவரது திறனை பிரதிபலிக்கிறது. மின்சார வாகனங்களில் புதுமையான அணுகுமுறைக்கு புகழ்பெற்ற ஓலா எலக்ட்ரிக், எதிர்காலத்துக்கென பல லட்சிய திட்டங்களைக் கொண்டுள்ளது. இதில் டிசைன் பிரிவில் இணைந்துள்ள ராம்கிருபாவின் பங்கு ஓலாவின் லட்சிய திட்டங்களுக்கான விரிவான பார்வையை வழங்கும் என நம்பப்படுகிறது.

வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது மட்டுமின்றி, மின்சார வாகன வடிவமைப்பின் எல்லைகளை தாண்டி வாகனங்களை டிசைன் செய்ய வேண்டும் என்பதும் இதில் அடங்கும். இந்திய ஆட்டோமொபைல் டிசைனின் எதிர்காலம்? ஆட்டோமொபைல் துறையில் ராம்கிருபா ஆனந்தனின் பயணம் அவரின் கடுமையான அர்ப்பணிப்பையும், அதேநேரம் அவரின் பல்துறைத் திறனையும் நமக்கு காட்டுகிறது. மஹிந்திராவில் தொடங்கி தற்போது ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் வரை ஆட்டோமொபைல் துறையில் தொடர்ந்து புதுமையான மற்றும் பயனுள்ள டிசைன்களை கொடுத்துள்ளார்.




ஆட்டோமொபைல் துறையில் அவரை மரியாதைக்குரிய நபராக மாற்றியுள்ளது அவரது டிசைனிங் திறனே. வருங்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கள் முக்கிய நீரோட்டமாக மாறும்போது, ​​ராம்கிருபா போன்ற வடிவமைப்பாளர்கள் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பர்.

மஹிந்திரா நிறுவனத்துடனான அவரது அனுபவம் மற்றும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் அவரின் தற்போதைய பணி ஆகியவை அடுத்த தலைமுறை இந்திய ஆட்டோமொபைல்களில் செல்வாக்கு செலுத்த அவர் தயாராக இருப்பதாகவே தெரிகிறது. சின்னச் சின்ன எஸ்யூவிகளை உருவாக்கினாலும் சரி, எலக்ட்ரிக் வாகனங்களை வடிவமைப்பதிலும் சரி, ராம்கிருபா டச் என்றைக்கும் நிலைத்திருக்கும். ராம்கிருபா ஆனந்தன் ஒரு வடிவமைப்பாளர் மட்டுமல்ல; அவர் ஒரு தொலைநோக்கு பார்வை கொண்டவர். அதனால் தான், ராம்கிருபா இந்திய ஆட்டோமொபைல் டிசைனின் எதிர்காலம் என்று அழைக்கப்படுகிறார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!