Cinema Entertainment

லைக்காவால் நொந்து போன அஜித்

சாமியே வரம் கொடுத்தாலும் பூசாரிக்கு மனசு வராது என்று சொல்லுவாங்க. அது அஜித்தின் விடாமுயற்சி படத்துக்கு தான் சரியாகப் புரிந்து விட்டது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக இந்த படத்திற்காக அஜித் ரசிகர்கள் வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறார்கள்.




ஆனால் படம் எந்த நிலைமையில் இருக்கிறது என்று கூட சொல்வதற்கு ஆள் இல்லை. படக்குழு தரப்பிலிருந்து இது பற்றி அப்டேட் கொடுக்கக்கூட ஆள் இல்லாமல் இருப்பது தான் கொடுமை. அஜித் அடிக்கடி தமிழ்நாடு வருவதும், பின்னர் அஜர்பைஜானுக்கு செல்வதும் தான் இந்த படத்தின் அப்டேட் ஆக இதுவரை இருக்கிறது.

இந்த நிலையில் விடாமுயற்சி ரிலீஸ் ஆவதற்கே ஆப்பு வைக்கும் வகையில் உட்கட்சி பூசல் நடந்து கொண்டிருப்பது தற்போது தான் வெளிவந்திருக்கிறது. விடாமுயற்சி படம் தொடங்குவதற்கு முன்பே லைக்கா நிறுவனம் இன்கம் டேக்ஸ் துறையிடம் சிக்கியது எல்லோருக்கும் தெரியும்.

லைக்கா பண்ண வேலையால், முரண்டு பிடிக்கும் அஜித்

இதனால் இந்த நிறுவனம் அவர்களுடைய வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை உபயோகிக்க முடியாமல் இருக்கிறார்கள். லைக் பொருளாதார சிக்கலில் இருக்கிறது என்பது வெளியில் தெரியாத அளவிற்கு ஓரளவுக்கு எல்லா விஷயத்தையும் கனகச்சிதமாக முடித்து வருகிறார்கள்.




ஆனால் அவர்கள் அதற்கு கை வைத்திருப்பது நடிகர் அஜித் குமாரின் சம்பளத்தில் தான் என தெரிய வந்திருக்கிறது. கிட்டத்தட்ட படம் முடியும் தருவாயில் இருக்கும் நிலையில் கூட அஜித்துக்கு இன்னும் சம்பளம் போய் சேரவில்லை.

இது பற்றிய அடிக்கடி அந்த நிறுவனத்திடம் கேட்டு அஜித் ரொம்பவே டென்ஷன் ஆகிவிட்டார். படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக உருட்டி பிரட்டி 10 கோடி ரூபாய் ரெடி பண்ணி இருக்கிறார்கள். ஆனால் அதில் தான் இப்போது சிக்கல் தொடங்கி இருக்கிறது.

படப்பிடிப்புக்காக காசு கொடுக்கும் இவர்கள் தன்னுடைய சம்பளத்தை கொடுக்காமல் இழுத்தடிப்பது அஜித்திற்கு ரொம்ப டென்ஷனான விஷயமாக மாறி இருக்கிறது. இதனால் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் வீம்பு பண்ணிக் கொண்டிருக்கிறார். ஆளுக்கு ஒரு பக்கம் தங்களுடைய வீம்பை காட்டிக் கொண்டிருக்க இடையில் தவிப்பது என்னவோ அஜித் ரசிகர்கள் தான்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!