Cinema Entertainment விமர்சனம்

லாந்தர் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

laandhar-vidharth

விதார்த் நடிப்பில் சமீபத்தில் அஞ்சாமை வெளிவந்திருந்தது. நீட் தேர்வை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த அப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து தற்போது அவர் நடித்துள்ள லாந்தர் இன்று வெளியாகி உள்ளது.

ஷாஜி சலீம் இயக்கத்தில் சஸ்பென்ஸ் திரில்லர் கலந்து எடுக்கப்பட்டுள்ள படத்தின் டிரைலர் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அதை தொடர்ந்து வெளியாகி உள்ள இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா என்பதை விமர்சனத்தின் மூலம் இங்கு காண்போம்.

போலீஸ் அதிகாரியாக இருக்கும் விதார்த் மனைவியுடன் அழகான வாழ்வை வாழ்ந்து வருகிறார். அப்போது ஒரு நாள் இரவு நேரத்தில் காவலர் ஒருவர் சந்தேகப்படும் படியான ஒரு நபரை ரோட்டில் பார்க்கிறார்.

உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்து இன்னும் சில காவலர்களை வரவழைக்கிறார். அவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த மர்ம நபரை பிடிக்க முயற்சிக்கும் போது அந்த மனிதர் அவர்களை தாக்கி விட்டு தப்பித்து விடுகிறார்.

லாந்தர் விமர்சனம்

அதையடுத்து விதார்த் அந்த நபரை பிடிக்க முயற்சிக்கிறார். இதற்கு இடையில் மர்மமான முறையில் நடக்கும் கொலை சம்பவங்களும் காவல்துறைக்கு ஆட்டம் காட்டுகிறது. அந்த மர்ம மனிதர் யார்? கொலை சம்பவங்களின் பின்னணி என்ன? விதார்த் சீரியல் கில்லரை பிடித்தாரா? போன்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது லாந்தர்.

வழக்கமாக நாம் பார்த்த கதை தான் என்பதால் இதில் பெரிய சுவாரஸ்யம் ஒன்றும் இல்லை. ஆனால் விதார்த்தத்தின் நடிப்பு வழக்கம் போல் பாராட்ட வைத்திருக்கிறது. இருப்பினும் கதை ஓட்டம் வலுவில்லாத நிலையில் இந்த கதையை அவர் எப்படி தேர்ந்தெடுத்தார் என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.

சில லாஜிக் மீறல்களும் முன்பே யூகிக்கும் படியான காட்சிகளும் இருப்பது படத்திற்கு மைனஸ் ஆக இருக்கிறது. அதுவே ஒருவித சலிப்பையும் கொடுத்து விடுகிறது. அதேபோல் ஹீரோயினுக்கான முக்கியத்துவமும் இல்லை.

பின்னணி இசையும் கவனம் ஈர்க்கவில்லை. இருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சிகளில் ஒளிப்பதிவு பாராட்ட வைத்திருக்கிறது. மற்றபடி பல படங்களில் நாம் பார்க்க கதை என்பதால் தனிப்பட்ட சுவாரசியத்தை கொடுக்க இயக்குனர் தவறி இருக்கிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!