News

ரூ.1000 கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை…. தமிழக அரசின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ் இதோ….

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.




குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தில் 1.6 கோடி பெண்கள் விண்ணப்பித்து 1.15 கோடி பேர் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டது.பின்னர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள், புதிதாக விண்ணப்பிப்பவர்களும் இந்தத் திட்டத்தின் கீழ் மீண்டும் இணைக்கப்பட்டனர்.

Rejection of magalir urimai thogai ...

இந்நிலையில் இந்தத் திட்டம் மீண்டும் விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் அதன் மூலம் மேலும் 2.50 லட்சம் பெண்கள் பயனடைவார்கள் எனவும் கூறப்பட்டது. மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் அதற்கான பணிகள் நடைபெறும் எனச் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்தத் திட்டத்தின் விரிவாக்கத்தில் முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவி, புதிதாகத் திருமணமானவர்கள், புதிதாக விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் மக்களவைத் தேர்தல் காரணமாகப் புதிதாக ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்தப்பட்டிருந்ததால் இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுவது தாமதமாகி வந்தது.




இந்நிலையில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்து புதிதாக ரேஷன் கார்டு வழங்கும் பணி துவங்கியுள்ளதால் இந்த மாதம் மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம் குறித்து அறிவிப்பு வெளியாகும் எனக் கருதப்பட்டது. ஆனால் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் குறித்து அறிவிக்கப்படாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் திட்டம் விரிவாக்கம் குறித்து அறிவிக்கப்படாது எனவும், தற்சமயம் விண்ணப்பங்கள் மட்டும் விநியோகிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் குறித்த அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இந்தக் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்கத்தின் மூலம் முதலில் விண்ணப்பித்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள், முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவி, புதிதாகத் திருமணமானவர்கள் என பல்லாயிரம் பெண்கள் பயனடைவார்கள் எனக் கூறப்படுகிறது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!