Samayalarai

ராஸ்பெரா ஸ்வீட்

நமது வீட்டில் உள்ள  ரவையை வைத்து ராஸ்பெரா ஸ்வீட் செய்வது எப்படி.? என்பதை பார்க்கலாம். பொதுவாக ரவையை வைத்து கேசரி மட்டும் தான்  செய்திருப்போம். ஆனால்  ரவையை வைத்து ராஸ்பெரா ஸ்வீட்  எளிமையாக செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த பதிவில் கூறியிருப்பது போல் ஒருமுறை ராஸ்பெரா ஸ்வீட்  செய்து பாருங்கள் மீண்டும் மீண்டும் செய்து சுவைப்பீர்கள். பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.




தேவையான பொருட்கள் :

ரவை _1கப்,

நெய் _1/4 கப்,

காய்ச்சி ஆறவைத்த பால் _3/4 கப்,

சர்க்கரை _300 கிராம்,

ஏலக்காய் தூள் _1/2 ஸ்பூன்,

பால் பவுடர்_2 ஸ்பூன்,

பேக்கிங் சோடா _1/2 ஸ்பூன்




செய்முறை விளக்கம் :

  • முதலில் வாணலியில் 2 ஸ்பூன் நெய் விட்டு 1 கப் ரவை சேர்த்து சிறு தீயில் வைத்து வறுக்கவும். வறுபட்டதும் பாலை சேர்த்து நன்றாக கலக்கவும். ரவை பாலை உறிஞ்சி நன்கு கெட்டியாக வந்தவுடன்  இறக்கி வேறு பாத்திரத்தில் வைத்து ஆறவைக்கவும்.

  • சர்க்கரை பாகு செய்ய 11/2 கப் சர்க்கரையில் 11/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து கொதிக்கவிடவும். சர்க்கரை கரைந்ததும் அத்துடன் ஏலக்காய்தூள் சேர்த்து இறக்கி தனியாக வைக்கவும்.

  • பின்னர் கெட்டியாக இருந்த ரவை நன்கு ஆறிய பின் கை கொண்டு நன்றாக பிசைந்து இதில் பால் பவுடர் சேர்த்து நன்றாக 3 நிமிட நேரம் பிசைந்து மாவு மிருதுவாக இருக்க வேண்டும். இதிலிருந்து சிறிய மாவு உருண்டை எடுத்து உள்ளங்கையில் வைத்து உருட்டி லேசாக சப்பி விடவும். இதே போல் எல்லா மாவையும் உருண்டைகளாக செய்து சப்பி எடுக்கவும். 

  • பின்னர் எண்ணெய் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கொதித்ததும் சிறு தீயில் வைத்து எல்லா உருண்டை களையும் போட்டு பொரித்து மறுபக்கம் திருப்பி போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுத்துவிட வேண்டும்.  அனைத்தையும் பொரித்து சர்க்கரை பாகில் சேர்த்து 3 மணி நேரம் ஊறவிடவும்.

  • தேவை என்றால்  முந்திரி பருப்பு எல்லா ஸ்வீட்டிலும் மேலே வைத்து அழகுபடுத்தலாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!