gowri panchangam Sprituality

மௌன நோன்புல இவ்ளோ விஷயங்கள் இருக்கா..?

பொதுவாக மௌன நோன்பில் இருவகை உண்டு. ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டுமென்று மன உறுதியோடு சங்கல்பம் செய்து கொண்டு அவ்வேலை முடியும் வரையில் பேசாமல் இருப்பது. இது மனதையும் உடலாற்றலையும் சிதறாமல் காத்து, தான் விரும்பும் செயலை வெற்றியோடு முடிக்கத் துணை செய்யும்.

ஆன்ம தூய்மைக்காக குறிப்பிட்ட காலத்தை ஒதுக்கி வைத்துக் கொண்டு குடும்பம், பொருளாதாரம், வணிக்ம் இவைகளிலிருந்து விலகிக் கொண்டு மௌனமாக இருந்து அகத்தாய்வு செய்து கொள்ளுதல். இது இரண்டாவது வகை.

இந்த இருவகை மௌன நோன்பு தான் நல்ல நோக்கத்தோடு பயன் விளைக்கத் தக்க வகையில் திட்டமிட்டு ஆற்றுவது.




குண்டலினி யோகத்தில் துரியாதீத தவம் ஆற்றும் போது புலன்கள், அறிவு, இச்சைகள் அனைத்தையும் அடக்கி அறிவை இருப்பு நிலையான சிவமாக்கிக் கொண்டு பேச்சற்று இருக்கின்றோம். இது மௌன நோன்பில் சேராது. இது அறிவின் இயக்கத்தைச் சீரமைக்க நாள்தோறும் சிறிது நேரத்தை ஒதுக்கிக் கொண்டு குறுகிய கால அளவில் செய்யும் உளப்பயிற்சி.

Meditation

நான் பேசாத போது இறைவன் பேசிக்கொண்டிருக்கிறான் என்பது அறிவறிந்தோர் காட்டும் குறிப்பு. நாம் பேசாமல் இருக்கும்போது கண்களை மூடிக்கொண்டு அமர்ந்து கொண்டால் எத்தனை, எத்தனை எண்ணங்கள் எழுச்சி பெற்று உணர்த்துகின்றன. இந்த எண்ணங்கள் நீங்கள் உண்டு பண்ணுகிறீர்களா? நாம் உண்டு பண்ணுவதும் இல்லை. அது நம் விருப்பத்துக்கு அடங்குவதும் இல்லை.




பின்னர் நமது எண்ணங்களை நமது உள்ளங்களிலிருந்து அலையலையாக எழுப்பிக் கொண்டிருப்பது யார் வேலை? யாருமில்லை. இறைவனே தான். எவ்வாறு? உடல் உறுப்புகளின் மூலம் உணரும் இன்ப துன்பங்கள் அனைத்தும் உயிர் மையத்திலுள்ள இருப்பு நிலையாகிய அறிவு சீவ காந்த ஆற்றலால், படர்க்கை நிலை எய்தி மனமாக இயங்கி உணர்கின்றது.

மனத்தால் உணரும் அனைத்தும், அலைவடிவில் உயிர் மையத்திலிருக்கும் இருப்பு நிலையால் ஈர்க்கப்படுகின்றன. அவை உயிர்த் துகள்களில் பதிவாகின்றன. உயிர்த் துகள்கள் சுழற்சியால், உயிரில் பதிந்த பதிவுகளின் தன்மைகள் யாவும் அதன் விரிவு அலை மூலம் எப்போதும் வெளியேறிக் கொண்டே இருக்கின்றன.

மோனத்தின் பெருமையை யாரும் வெறும் வாயால் சொல்வது கடினம். மோனமே அறிவின் அடித்தளமாக உள்ளது. மிக விரிவாகவும், எல்லையில்லாமலும், காலம் இல்லாமலும், அதே நேரம் மோனத்தில் அறிவு கலந்து அதன்பின்னர் மீண்டும் பிறக்க வேண்டும்.

அப்படி முடியுமானால் முன்வினையையும், பின்வினையையும் எப்படிக் களைவது என்று நமக்குத் தெரிந்து விடும். மோன நிலையானது இந்த கடமையைத் தவறாமல் நிறைவேற்றும். அதற்கு மென்மை, இன்பம், நிறைவு, வெற்றி, அமைதி என்று பிற தன்மைகளும் உண்டு.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!