gowri panchangam Sprituality

மாவட்ட கோவில்கள்:பூவராக சுவாமி திருக்கோவில்

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ பூவராக சுவாமி திருக்கோயில். 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான திருக்கோயிலாகும். பெருமாளின் தசாவதாரங்களில் மூன்றாம் அவதார தலமாகும்சுவாமி : பூவராக சுவாமி (தானே தோன்றியவர்).

அம்பாள் : அம்புஜவள்ளி தாயார்.

விமானம் : பாவன விமானம்.

தீர்த்தம் : நித்ய புஷ்கரணி.

தலவிருட்சம் : அரச மரம்.




தலச்சிறப்பு : இக்கோவிலில் நாராயணன் வராஹ அவதாரத்தில் காட்சியளிக்கிறார்.  தினமும்  காலை மூலவருக்கு திருமஞ்சனம், மக்கட்பேறு வேண்டுபவர்கள் அரச மரத்தை வலம் வந்து  ஸ்ரீசந்தான கிருஷ்ணனை மடியில் எழுந்தருளச் செய்துகொள்வதினால் பயன் பெறுவார்கள்.   நெய்  தீபம் ஏற்றுவதினால் ஐஸ்வர்யம் உண்டாகும், குடும்பம் தழைக்கும், பெண்களுக்கு திருமணம்  நடக்கும். தானே தோன்றிய மூர்த்திகளை கொண்டவைணவ தலங்களில் இதுவும் ஒன்று  (1. ஸ்ரீரங்கம் 2. ஸ்ரீமுஷ்ணம் 3. திருப்பதி 4. வானமாமலை).

இந்த கோவில் புருஷசுகாரா மண்டபம் எனப்படும் மண்டபம் ஒன்றையும் தன்னகத்தே  கொண்டுள்ளது. 17வது நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த தேர் வடிவ மண்டபத்தை குதிரைகளில்  போர் வீரர்கள் இழுத்துச் செல்ல, பின்னால் யானைகள் தொடர்ந்து வருமாறு  வடிவமைக்கப்  பட்டுள்ளது.  ஸ்ரீ முஷ்ணத்தில் நாயக்கர் வம்சத்தவர்களால் கட்டப்பட்டுள்ள இந்த கோவில்  அவர்களின் படங்களை முற்றத்திலுள்ள ஒவ்வொரு தூணிலும் தாங்கி நிற்கிறது.




திருத்தல வரலாறு : முன்னொரு காலத்தில் நாராயணன் மிகப் புனிதமான வராஹஅவதாரம்  எடுத்து, பூமியைக் கவர்ந்து சென்ற ஹிரன்யாஹூசன் என்னும் அசுரனை கொன்று, அப்பூமியை  தனது கோரைப் பற்களினால் சுமந்து வந்து, அதிஷேஷன் மேல் அமர்ந்த நிலையில் காட்சி  தருகிறார்.  அச்வத்த விருஷத்தையும், துளசியையும் உண்டாக்கி, தனது வியர்வை நீரின் பெருக்கை  கொண்டு நித்ய புஷ்கரணி என்ற புனித தீர்த்தத்தையும் ஏற்படுத்தி, ஸ்ரீமுஷ்ணம் என்னும்  இத்தலத்தை இருப்பிடமாக ஏற்று பிரம்மன் முதலானோர் பூஜிக்க ஸ்ரீபூவாராகவன் என்ற  திருநாமத்துடன், பக்தர்களுக்கு அருள்பாலிப்பவராக இத்திருக்கோவிலில்  எழுந்தளியுள்ளார்.

மணிராஜ்: பூரண வரமருளும் பூவராக சுவாமி

இக்கோவிலின் பெருமையை உணர்த்த பல வருடங்களுக்கு முன் ஆதி நவாப் என்பவர் ஒரு ஊரை  ஆண்டு வந்தார்.  அவருக்கு தீராத வியாதி ஏற்பட்டது.  வைத்தியர்கள் அவரை கைவிட்ட  நிலையில், இக்கோவில் வழியாக ஆதி நவாப் செல்லும் போது, ஒரு பக்தன் தான் வைத்திருந்த  பெருமாளின் தீர்த்ததையும், பிரசாததையும் கொடுத்தான்.  அதை சாப்பிட்ட ஆதி நவாப் பூரண  குணமடைந்ததார். அது முதல் அவர் பெருமாளின் பக்தனாக மாறினார்.  அதுமட்டுமில்லாமல்  கோவிலுக்காக நிறைய நிலங்களை எழுதி வைத்தாக கூறப்படுகிறது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!