Samayalarai

மசாலா மோர் ரெசிபி செய்யலாம் வாங்க!

வெயிலுக்கு நல்ல கெட்டியான தயிர் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லதாகும். தயிர் செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. தயிர் சாப்பிடுவதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பற்களையும், எலும்புகளையும் வலுப்படுத்தும், சருமத்தை பளபளப்பாக்கும், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும், உடல் எடை குறைக்க உதவுகிறது. இத்தகைய பயன்களை கொண்ட மோரை வைத்து இன்னைக்கு ஒரு பானம் செய்யலாம் வாங்க.




தேவையான பொருட்கள்;

தயிர்-1கப்

சிறிதாக வெட்டிய மாங்காய்-1கப்.

இஞ்சி-1துண்டு.

பச்சை மிளகாய்-1

கொத்தமல்லி- சிறிதளவு.

கல்உப்பு- தேவையானஅளவு.

காராமணி-1கப்.

ஐஸ்கட்டி-தேவையான அளவு.




செய்முறை விளக்கம்;

  • முதலில் கட்டியான தயிரை மிக்ஸியில் போட்டு அத்துடன் கழுவி வெட்டி வைத்த இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 1, கொத்தமல்லி சிறிதளவு, சிறிதாக வெட்டி வைத்த மாங்காய் கொஞ்சம் சேர்த்து கல் உப்பு தேவையான அளவு தண்ணீர் 2 கப் ஊற்றி நன்றாக அரைத்து வடிகட்டி விடவும்.

  • இதில் தேவையான அளவு ஐஸ் சேர்த்து நன்றாக கலக்கி விட்ட பிறகு ஒரு கிளேஸ் டம்ளரில் மாங்காய் துண்டுகள் சிறிது சேர்த்து அரைத்து வைத்திருக்கும் மோரை ஊற்றி மேலே காராமணியை தூவி பரிமாறவும்.

  • இப்போது சுவையான திருவான்மியூர் மசாலா மோர் தயார். நீங்களும் வீட்டில் ஒருமுறை முயற்சி செஞ்சி பார்த்துட்டு சொல்லுங்க.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!